ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, March 3, 2016
கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு
கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். இந்த மனுக்களை பூர்த்தி செய்து 12ம் தேதிக்குள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பொது தொகுதிக்கு ₹2 ஆயிரம், தனி தொகுதி மற்றும் பெண்களுக்கு 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Saturday, February 27, 2016
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சனிக்கிழமை யாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே யாதவர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் வி.தியாகராஜன் தலைமை வகித்தார்.
திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் சிலையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்ட யாதவ மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவுத் தேர்தலில் யாதவர்களுக்கு அரசியல் கட்சியினர் உரிய பங்கை அளிக்க வேண்டும். யாதவர் இளைஞர்கள், மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், யாதவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Friday, February 26, 2016
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்
கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.
கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இந்திய வரலாற்றின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனுக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் தமிழக வரலாற்று பாட புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும்.
டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அழகு முத்துக்கோன் பெயரை வைக்க வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும்.
விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். ஆடு மேய்த்தல் தொழில் புரிபவர்களுடைய வாரிசுகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில நிர்வாகிகள் எல்.வி.ஆதவன், துரை, சுரேந்தர்பாபு, கோவிந்த ராஜுலு, ராஜமாணிக்கம், அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, February 23, 2016
Monday, February 22, 2016
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம்
சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..
வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.. எனவே அனைத்து யாதவ சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்..
இடம்:
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்.
நேரம் காலை 10:00 மணி
யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை
யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவை 2000ஆம் ஆண்டு வரை மாநில அளவிலான அரசு விழாவாக தமிழக அரசு நடத்தி வந்தது. தற்போது, அது மாவட்ட அளவிலான விழாவாக நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாவீரன் அழகுமுத்துக்கோனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குரு பூஜை விழாவை அரசு விழாவாக தொடர்ந்து நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும். பள்ளி வரலாற்று பாடங்களில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குத் தான் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றார்.
Friday, February 19, 2016
பிப்.21-இல் கோகுல மக்கள் கட்சி மாநாடு
காஞ்சிபுரத்தில் கோகுலம் மக்கள் கட்சியின் வடக்கு மண்டல மாநாடு வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்அம்பியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் அகில இந்திய யாதவ மகா சபையின் துணைத் தலைவர் சோம்பிரகாஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பலர் இதில் பங்கேற்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.