Friday, February 26, 2016
Home »
காஞ்சிபுரம்
,
கோகுல மக்கள் கட்சி
» பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்
கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.
கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இந்திய வரலாற்றின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனுக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் தமிழக வரலாற்று பாட புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும்.
டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அழகு முத்துக்கோன் பெயரை வைக்க வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும்.
விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். ஆடு மேய்த்தல் தொழில் புரிபவர்களுடைய வாரிசுகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில நிர்வாகிகள் எல்.வி.ஆதவன், துரை, சுரேந்தர்பாபு, கோவிந்த ராஜுலு, ராஜமாணிக்கம், அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment