Tuesday, February 2, 2016
Home »
எம்.கோபாலகிருஷ்ணன்
,
தமிழ்நாடு யாதவ மகாசபை
» 10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு யாதவ மகாசபை
10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு யாதவ மகாசபை
தமிழக யாதவ மகாசபையின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில், மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில், யாதவ சமுதாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 80 லட்சம் முதல் ஒரு கோடி யாதவ சமூக வாக்காளர்கள் உள்ளனர்.
நம்முடைய சமூகத்துக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததால் மிகவும் பின் தங்கிய நிலைக்கு யாதவ சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. யாதவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாதத்தில் விழுப்புரத்தில் யாதவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாதவர்கள் கலந்து கொள்வர்.
மாநாட்டில் சட்டசபை தேர்தலில் யாதவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்ய உள்ளோம். தமிழகத்தில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில், 10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு, யாதவ மகா சபையின் ஆதரவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இராமநாதபுரம் தொகுதியில் வழக்கறிஞர் தர்மராஜ் யாதவ் தேமுதிக சார்பாக நிருத்தப்பட்டார் எனக்கு தெரிந்து இந்த தொகுதியில் தேமுதிக வை தவிர வேறு எந்த கட்சியும் முன் வரவில்லை
ReplyDelete