"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, April 20, 2016

2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் யாதவர் சமுக வேட்பாளர் பட்டியல்

காங்கிரஸ்
முதுகுளத்தூர்-மலேசியா எஸ்.பாண்டியன்
கலசபாக்கம்- செங்கம் குமார்
மதுரவாயல் - நாசே ஆர்.ராஜேஷ்


பாஜக 

ஆம்பூர் - கொ.வெங்கடேசன்
கடையநல்லூர் - வி. கதிர்வேலு

அதிமுக
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
தாம்பரம்- சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்

திமுக
திருப்பத்தூர் - கேஆர்பெரியகருப்பன்
கிணத்துக்கடவு - பிரபாகரன்

தேமுதிக
ராணிப்பேட்டை - எஸ்.நித்தியானந்தம்
பட்டுக்கோட்டை - என். செந்தில்குமார்
சிவகாசி - ஆர்.சுதாகரன்


பாமக
கடையநல்லூர் - திருமலைக்குமாரசாமி

போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்
யாதவர் வாக்கு யாதவர்கே

Last update:20-April'2016 5:30 PM

யாருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ தெரியபடுத்தவம்
tamilyadavs@gmail.com


Friday, April 15, 2016

மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...சமூக சிந்தனையாளர் குழு யாம்/YES

மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...

மிகவும் பின்தங்கியவர்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட சட்டநாதன்கமிசனும்(1971), அம்பாசங்கர்கமிசனும்(1983), யாதவர்கள் ஆடு, மாடுகளைப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மேய்த்து, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்று பரிந்துரைத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் யாதவர்களின் மொத்த மக்கள் தொகை 13,85,603 எனவும், மூன்றாவது பெரிய சமூகம் எனவும் அன்றே அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் யாதவர் சமுகம் உட்பட 32 சாதிகள் கல்வி மற்றும் வேலையில் பெற்றுள்ள பங்குகள் குறித்த புள்ளிவிபரங்களும் வெளியிட்டுள்ளனர்.

அறிக்கை வெளியாகி 35 ஆண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஒரு அடி கூட முன்னேறாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். இந்த தொழில்நுட்பஉலகில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இன்றி, மொத்த மக்கள்தொகை, வாக்காளர் குறித்த உண்மையான தகவலின்றி தமிழகம் முழுவதும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் நாகரிகமாக வாழ்கிறோம் என்ற அடிப்படையில் நம்முடைய மரபுகளையும் எச்சங்களையும் நம்மையறியாமல் இழந்து, இளம் தலைமுறைகளை வஞ்சித்து வருகிறோம்.
இன்று மிகப் பெரும்பான்மை சமூகமாகத் திகழ்ந்தும் தனிப்பட்ட முறையில் வளமாக வாழ்வதாக நினைத்து வாழ்கிறோமே தவிர, நமக்குள் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள, நம்மை பாதுகாத்து கொள்ள, நமது உரிமைகளைப் பெற நாம் வலுவாகச் செயல்படவில்லை என்பதை நன்கு அறிந்த திராவிட கட்சிகள் 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்ப்பாளர்களாக மிக குறைந்த எண்ணிக்கையில் அறிவித்து இருக்கின்றன, நாமும் வழக்கம்போல வருத்தப்பட்டு விட்டு நம் வாழ்க்கையை மேய்க்கப் போய் விடுகிறோம்.
ஆனால் நம்முடைய மேய்ப்பராக கருதிக்கொள்பவர்கள், சமூக அக்கறையோடு பல்வேறு தளங்களில் இயங்க, அரசியல் கட்சிகளோடு பேச, பாரம்பரிய தொழில்களை நவீனப்படுத்த, அமைப்புகளை ஒருங்கிணைக்க ஆளுமையற்றவர்களாக இருப்பதால் கால் நூற்றாண்டாக எந்த பணியையும் திறம்பட செய்ய முடியாமல், அரசியல்ரீதியாக அங்கீகாரம் பெறமுடியாமல் மிகப்பெரிய பின்னடைவை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கு மேய்ப்பர்கள் மட்டும் காரணமில்லை; இந்த வரலாற்றுப் பிழையில் ஒவ்வொரு யாதவனுக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில் வேறுவழியின்றி உறவுகளை வளமாக வாழ வைக்க வேண்டும் என்று தன்னைப் பணயம் வைத்து இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்களது குடும்பம் பாதுகாப்பற்ற, அரவணைப்பற்ற சூழலில் தள்ளப்படுகிறது, அதைப்போல பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆதிக்க சமூகங்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகளை நம் உறவுகள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது சமூக அமைப்புகளில் ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. ஆனால் சமூக அமைப்புகளோ தங்களுடைய வழக்குகளுக்குள் சிக்கிச் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி நோக்கமே இல்லாத புதிய மேய்ப்பர்களும் அமைப்புகளும் கிளைக்கின்றனர். காலத்தின் அருமை கருதி, சமூக நலன் கருதி விட்டுக்கொடுத்து “குறிக்கோளுடன் கூடிய சமூக அமைப்புகளையும் மேய்ப்பர்களையும் மீட்டுருவாக்கம் செய்வோம்”


 நன்றி.
சமூக சிந்தனையாளர் குழு 
யாம்/YES



Tuesday, April 12, 2016

அருள்மிகு பொன்வண்டையனார் கோவிலும் யாதவ சமுதாய பூசாரிகளும்

குலதெய்வ வழிபாடு என்பது தமிழகத்தில் உள்ள அணைத்து சமுதாயத்தினரும் கொண்டாடி வரும் முக்கிய திருவிழாவாகும். இதில் நாடார் சமுதாய மக்களின் குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலேதான் அமைந்துள்ளது. ஒவ்வொரு அய்யனாருக்கும் தல வரலாறு அல்லது கோவில் தோன்றிய வரலாறு உள்ளதை அறியலாம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், நயினார் பத்தில் உள்ள அருள்மிகு பொன்வண்டு அய்யனா ரி ன் தலவரலாற்று புத்தகமோ கல்வெட்டு குறிப்போ இதுவரை கிடைக்கப் பெறவில்லை.)


பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நமது கோவிலின் வரலாறு இது என்று கிடைக்கப் பெறவில்லை. எனினும் 300 or 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படும் நமது கோவில், நமது முன்னோர்களின் வாய்மொழியாக கிடைக்கப் பெற்ற தனகவலின் படி, பல நுற்றாண்டுகளுக்கு முன்னர் நாடார் சமுதாய மக்கள் நயினார்பத்தில் உடைமரத்தை வெட்டி, அதன் தூர்பகுதியை தோண்டும் பொழுது இரத்தம் வெளிப்பட்டது. இதனால் ஊ ரி ல் உள்ள தங்கள் உறவின ர் களிடம் கூறி அவர்களுடன் தோண்டி பா ர் த்தபோது அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமி துணைவியர் பூரண போர்கொடியுடன் இணைந்த சிலைகள் சுயம்புவாக கண்டெடுக்கப்பட்டது. பின்ன ர் , அந்த இடத்தில் சிறிய குடிசை கோவில் எழுப்பப்பட்டு பூசையும் நடைபெற்று வந்தது.


ஒரு நாள் பூசை வேளையில் கோவில் கதவு திறக்க முடியாமல் போகவே கேரளாவிலிருந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே நடந்தது வந்த யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கதவைத் திறக்க முற்பட்டபோது கதவு திறந்து கொண்டது. ‘தனக்கு பூசை செய்ய யாதவரே ஏற்றவர்‘ என அசரீரியாக குரல் ஒலிக்கக் கேட்ட நம் முன்னோர்கள் யாதவரின் சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று அவர்களை பூசை செய்ய வருமாறு அழைத்தனர். ஆனால், இதை அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், அவர்களையும் அவர்கள் வீட்டையும் பாம்புகள் பின் தொடர்வது கண்டு அஞ்சி அதன் விபரம் அறிய முற்பட்டபோது, அருள்மிகு பொன்வண்டு அய்யனாரே பிரசன்னமாகி அந்த ‘யாதவ குடும்பத்தினர் வந்து பூசை செய்யும் வரை அவர்களை பாம்பாக பின் தொடர்வேன்‘ எனக்கூறினார். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் புறப்பட்டு ஆலயம் வந்து குடிசைகள் அமைத்து வழிவழியாக தினசரி இரண்டு கால பூசை செய்து வருகின்றனர். தற்போது பூசை செய்து வரும் கருப்பசாமி பூசாரி 4-வது தலைமுறை பூசாரி ஆவார்.


இவ்வளவு பழமை கொண்ட நமது கோவிலுக்கு தமிழகத்தின்தென் பகுதியிலிருந்துபல்வேறு ஊர்களுக்கு பிழைப்பை தேடியும், தொழில் அபிவிருத்திக்காகவும் சென்றவர்கள், அவரவர்களுக்கு முடிந்த நேரங்களில், குடும்பம் குடும்பமாக கால்நடையாகவும், வண்டி கட்டிக்கொண்டும் வந்து சென்றனர். மதுரை, விருதுநகர் பகுதிகளிலிருந்து வண்டி கட்டி வந்து செல்ல அப்போது வார காலம் ஆனது. (அப்படி வரும்போது சிலர், பூசாரி குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு வருவது வழாக்கம்.) தற்போது, புகைவண்டி, பஸ், கார் போக்குவரத்து என நாம் வந்து செல்கின்றோம்.

நாடார்குளத்தில், அருள்மிகு போன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக வணங்கி வரும் நமது தாயாதிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி போன்ற மாவட்டகங்களில் பெருமளவிலும், கன்னியாகுமரி மாவட்ட்சத்தில் சில ஊர்களிலும், இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் போன்ற மாவட்டகங்களில் குறிப்பிட்ட ஊர்களிலும், சென்னையில் மட்டும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரையிலும் வசித்து வருகின்றோம். இதுதவிர, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் நுற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிறார்கள்.நமது முன்னோர்கள் குடும்பம், குடும்பமாக பல குடும்பம் சேர்ந்து கோவிலுக்கு வந்து அய்யனை தரிசித்துச் சென்ற காலகட்டத்தில் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிழ்கண்ட பணிகளை நிறைவேற்றினார்கள்.
  • 1926-வது ஆண்டுக்கு முன் கருவறை கட்டிடமும், அதற்குப்பின் பிரகார கல்மண்டபமும், அதனையடுத்து சமையல் கூட்டத்துடன் இணைந்த உணவுக்கூடமும் (தங்கும் மண்டபமமும்) கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது.
  • பின், 1930-வது வருடம், விருதுநகர் திரு.அ.ல வகையறாக்கள் சார்பாக கோவில் முன்பாக 30 அடி அகலத்தில் 2 பர்லாங் நிலத்திற்கு நடைபாதை கிரையம் செய்து பாதை அமைத்தார்கள்.
  • 1942-ல் பூசாரிகள் குடும்பத்திற்கு 4 வீடுகள் கட்டி கொடுத்தார்கள். பின், அவர்கள் சீவனாம்சம் செய்ய 12 ஏக்கர் பனை தோப்பு வாங்கி தந்தார்கள். இக்காலகட்டத்தில், கோவில் பம்ப்செட் அமைத்தார்கள்.
  • 1946-ல் கருப்பசாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பல ஊர் தாயாதிப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை போன்ற ஊர் முக்கிய நிர்வாகிகள் முயற்சியால் 1956-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
  • 1965-ல் குதிரை மண்டபம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மதுரை திரு.A.S. பென்னுச்சாமி நாடார் பெயரில் வரைபடம் அனுமதி பெற்று (பிளான் அப்ருவ்டு) வேலை நிறைவடைந்தது.
  • மதுரை திரு.A. ராமசாமி நாடார் மேற்பார்வையில் 1968-ல் 2-வது கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்தது.பின், 1974-ல் கோவில் மடப்பள்ளி கட்டப்பட்டது. அதன்பின் மாடசாமி கோவிலும் கட்டப்பட்டது. இக்காலக்கட்டங்களில் 3-வது தலைமுறை பூசாரியாக திரு. இராமநாதன் கோனார் நீன்டகாலம் பூசை செய்து வந்தார்.

இப்படியாக நமது சந்ததிகளும் கோவிலும் வளர்ந்து வந்த காலத்தில் 1991-ல் சிவகாசியிலிருந்து, வருடா வருடம் திருவிழா கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஊர்களிலும் முகவரி சேகரிக்கப்பட்டது. 300 தலைக்கட்டு சேர்ந்த நிலையில் முதல் 2 வருடம் வைகாசி விசாகத்தன்று ஒரு நாள் விழா நடந்தது.
பின்னர், 1993 முதல் மூன்று நாள் விழாவாக வைகாசி மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. படிப்படியாக எல்லா ஊர்களிலும் அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக கும்பிடும் தாயாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு தற்போது சுமார் 5000 குடும்பங்கள் இணைந்துள்ளன. 3000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா தலைக்கட்டு வரி செலுத்தி திருவிழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் சிறப்புமிகு “பெரும் பூசை திருவிழா”வாக வருடா வருடம் வைகாசி முதல் வெள்ளி-சனி-ஞாயிறு ஆகிய கிழைமைகளில் நடைபெறுகின்றது.
கோவில் வளர்ச்சியை முன்னிட்டு, 2002-வது வருடம் “இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ போன்வண்டையனார் சுவாமி கும்பிடும் தாயாதிகள் சங்கம்” என்ற பெயரில் நமது நிர்வாகம், தமிழக அரசின் பதிவுத்துறையில் ‘55/2002’ எண்ணில் பதிவுச் சான்று பெறப்பட்டது.

பின், பெரும் பூசையன்று பெருமளவில் கூடுகின்ற கூட்டத்திற்கு வசதிகள் செய்து தர 3½ ஏக்கர் பம்ப்செட் நிலம் வாங்கப்பட்டு அதில் 5 ஆண்டு கால திட்டத்தில் 1200 சதுர அடிபரப்பில் “மகாமண்டபம்” (டைனிங் ஹால்) கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பெண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிளும் கட்டி முடிக்கப்பட்டது.

  • ஆண்டு தோறும் இரண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகின்றது.
  • முறையாக ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு தாக்கல் செய்யப்படுகின்றது.
  • மூன்று ஆண்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகின்றது. 2013 வைகாசிப் பெரும் பூசைக்கு முன்பாக 2000 சதுர அடியில் பெரிய சமையல் கூடமும், நிராவி சமையல் பாத்திரங்களும் அமைக்கப்பட்டது.

2014 பெரும் பூசைக்கு முன்பாக கட்டிட நன்கொடை வழங்கிய வழங்கிய தயாதிப் பெருமக்கள் 942 நபர்களின் பெயர்கள் பதித்த கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது. இதுவரை சுமார் 80 லட்சம் வரை இடம் வாங்கி, கட்டிடப் பணி முடிந்து, சுற்றுச் சுவர் எழுப்ப பயன் பட்டுள்ளது.

via http://ponvanduayyanarkovil.org/

Friday, March 18, 2016

திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்,
தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவலை இப்பொழுது பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
தகவல் அறிந்து யாதவர் சங்கமம் தலைவர் திரு. தியாகராசன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்றுபார்வையிட்டார்கள்.எந்த பிரச்சனையும் இல்லை. 
மேலும் ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் கட்சி தலைவர் திரு ராமசந்திரமருதுபாண்டியர் அவர்களும் சிலை அருகில் தான் உள்ளார்.


தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என கேட்டுகொள்கிறோம். பழய தகவல்களை பதிவிடும் போது எப்போழுது நடந்தது என தெளிவாக பதிவிடவும்
இப்படிக்கு
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை

Monday, March 14, 2016

யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services

உறவுகளுக்கு, வணக்கம்.
யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services

நாம் நமது உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ, நமக்குள் இணைப்பை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற, ஒத்த கருத்துள்ளவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க 'யாதவர் தன்னுரிமைப் பணியகம்' முயன்று வருகிறது. இதன் அலகுகளாக யாதவர் தொழில் வணிகக் கூடம், ஆயர் கருவூலம், முல்லைத்தாயம் கலைக்குழு ஆகியவை சமூக மக்களின் "வாழ்வை மேன்மைப்படுத்துதல்" எனும் உயரிய நோக்கோடு பணியாற்றுகின்றன.


YES is functioning with the soul aim of leading a pleasant life with our relatives, to improve the standard of our life having a bond among ourselves and to unite the people, who are with same attitude, under a safe roof. With those aspects Yadava Chamber of Commerce, Yadava Treasury, Mullaithayam are rendering their valuable service successfully.

'யாம்/YES' உறுப்பினராக இணைத்து கொள்ள தொடர்புக்கு: 0452 4354343www.yadavachamber.com

சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது - யாம்/YES





உறவுகளுக்கு வணக்கம்.

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் குடும்பத்தாரின் முயற்சியாலும் சமூகப் பெரியவர்கள் உதவியுடனும் மிக விரைவில் இராமநாதபுரம், அபிராமம் - அகத்தாரிருப்பு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது, இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நன்றி.

இனஉணர்வின் நெகிழ்வில் - யாம்/YES
யாதவர் தன்னுரிமைப் பணியகம்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar