"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

மகாபாரதம்

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும்,...

செஞ்சிக்கோட்டை வரலாறு

செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை...

கண்ணன்

கண்ணன் இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் ...

ஆயர் குலத்தின் வீர விளையாட்டு ஜல்லிகட்டு-I

 ஜல்லிகட்டு                 கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின்  அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை  அடக்கும்...

தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...

தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள் தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தும் கலைச் சின்னங்களில் சிறப்பிடம் பெறுவது தஞ்சை பெரிய கோயிலாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோயிலில் யாதவர்கள பற்றி உள்ள கல்வெட்டுகள் சிலவற்றை காண்போம். இடையன் நள்ளாறன் எழுந்தருள்வித்த திருவுரு அருண்மொழி தேவவளநாட்டு மங்கல நட்டு மங்கலத்தை சேர்ந்த இடையன் நள்ளாறன்...

யாதவர் கல்லூரி

யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில்மதுரையில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும், தமிழ்,வரலாறு,வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் படிப்புகளை வழங்குகிறது. மற்றும் அரசு உதவி பெறும் இருபாலர் கல்லூரி. பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க,...

செஞ்சிகோட்டை-ஆனந்த கோனார்

செஞ்சி என்றவுடன் நாடோடிபாடல்களால் அறியப்பட்ட தேஜ் சிங் என்ற தேசிங்கு ராஜனே நினைவுக்கு வருவான். உண்மையில் அவன் பதவியில் இருந்தது பத்து மாதங்களே. நாராயணப்பிள்ளை என்பவர் எழுதிய கர்னாடக ராஜாக்கள் சரிதம் என்ற நூல் செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை கி.பி 1200 ஆனந்த கோனார் என்பவர் தொடங்கிவைத்ததாக தெரிவிக்கிறது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் கோனார்கள் செஞ்சிக்கோட்டையை ஆள்கின்றார்கள்....

இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். இவரது...

வீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி...

யாதவர்

கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூத்துகுடி,கடலூர்,விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். இன்று ஆந்திரத்தோடு...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar