"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...


தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தும் கலைச்
சின்னங்களில் சிறப்பிடம் பெறுவது தஞ்சை பெரிய கோயிலாகும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோயிலில் யாதவர்கள பற்றி உள்ள
கல்வெட்டுகள் சிலவற்றை காண்போம்.
இடையன் நள்ளாறன் எழுந்தருள்வித்த திருவுரு
அருண்மொழி தேவவளநாட்டு மங்கல நட்டு மங்கலத்தை சேர்ந்த இடையன்
நள்ளாறன் என்பவன் வில்லானைக்குக் குருக்களாக ஒரு பிரதிமம்
எழுந்தருல்வித்தான் என்று இராஜராஜன் கல்வெட்டு கூறுகிறது. மனிதர்க்கு
எடுப்பிக்கும் செப்பு விக்கரகங்களே பிரதிமம் எனப்பெறும்.
முதல் இராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலில் திருவிளக்கு எரிப்பிக்கப் பல
ஆயிரக்கணக்கான ஆடு,பசு,எருமைகளைத் தந்துள்ளான். இவை பன்னூறு இடையரிடம்
ஒரு விளக்குக்கு நான்தொரும் ஒரு உலக்கு நெய் அளக்க வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.நான்கு கல்வெட்டுகள்
திருவிளக்கு கொடைகளை கூறுகின்றன. இடையர் பற்றிக் கூறும் பகுதி
அக்காலத் தஞ்சையில் இருந்த தெருக்களை குறிக்கின்றது.
இச்சாசனங்களினால் தஞ்சைப் பெரிய கோயிற்குச் சுமார் 4000 ஆடுகளும்,4000
பசுக்களும்,100 எருமைகளும் திவிலக்கு எரிப்பதர்காகத்
தரப்பட்டிருந்தமை தெரிய வருகிறது.
பெரிய கோயில் வடக்குத் திருச்சுற்றுச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள
கல்வெட்டுகள் 21,22,23,24 ல் முழுவதுமாக கோவிலுக்கு திருவிளக்குகள்
எரிப்பதற்காக நன்கொடைகள் நந்த செய்தியைக் கூறுவதாகும். மேற்படி
கல்வெட்டுகளினால் ஒவ்வொரு இடையருடைய பெயரும்,ஊரும் மற்றும்
அவர்களுடைய ஊர்,தெரு போன்றவைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இராஜராஜன் கொடுத்த கால்நடைகள் இடையரிடம் ஒப்படைக்கப்பட்டுத்
திருவிளக்குக்குத் தினந்தோறும் நெய் பெறப்பட்ட விவரங்கள்,பெற்ற
கால்நடைகளுக்கு இன்னின்னார் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்ளன.இந்த
கல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி கூறியதால் தஞ்சை நகரமைப்புப் பற்றிய
பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.இவ்வாறு தஞ்சை பெரிய கோயில்
கல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி 1000 ஆண்டுகளுக்கு முன்பே
கூறியுள்ளதால்,தஞ்சை நகரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
யாதவர்கள் மிகுதியாக வாழ்ந்ததை அறிய முடிகிறது.
நன்றி! சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்.


தொகுப்பு : S.அடைக்கலம் யாதவ் , தஞ்சாவூர் .

Related Posts:

  • கண்ணன் பாட்டு 1. கண்ணன் - என் தோழன் (புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)வத்ஸல ரசம் 1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்புறங்கொண்டு போவ தற்கே - இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன… Read More
  • பெருமாள் தேவன்பட்டி ‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்த… Read More
  • மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள் Kopala Krishnan AIADMK Madurai(TN) Mulayam Singh Yadav UP-Mainpuri Mulayam Singh Yadav UP-Azamgarh Pappu Yadav Bihar - Madhepura … Read More
  • Veeran Azhgumuthu Kone tamil Song Free Download Indian First Freedom First Freedom Veeran Azhgumuthu kone Songs Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs Veeran azhgumuthu kone Download Songs1 Veeran azhgumuthu kone Download Song2 Veeran azhgumuthu kone… Read More
  • பெருமாள்தேவன்பட்டி Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar