"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, October 22, 2013

சந்திர குலம்

சந்திர குலம் அல்லது சந்திர வம்சம்என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. யாதவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த யது வம்சத்தவர்கள்.இவர்கள் வேளிர் என்றும் அலைக்கபடுகிறார்கள்.கடையேழு வள்ளல்கள் யது குலத்தின் வழி வந்த மன்னர்கள் ஆவார்கள்.

சந்திர குலத் தோற்றம்

சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.
தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.
ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். பரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

சந்திர குல அரசர்கள்

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.[3] தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.
  • சந்திர வம்சம்
  1. சந்திரன்
  2. புரூவன்
  3. ஆயு, தீமந்தன், அமவசு, சிராயு (தசதாயு),சுருதாயு (வசுமந்தன்)
  4. இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன், நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்
  5. இவர்களுள்நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, யயாதி, யதி, சம்யாதி
  6. துரஸ்வன்
  7. வக்ரி
  8. கோபானன்
  9. காந்தன்
  10. துர்யசித்தன்
  11. திஷ்டயந்தன்
  12. குருத்தாமன்
  13. ஆச்ரீதன்
  14. மூவேந்தர் சோழனைச் சூரிய குலம் என்றும், பாண்டியனைச் சந்திர குலம் என்றும், சேரனை அக்கினிக் குலம் என்றும் கொள்கின்றனர்

 


 

Related Posts:

  • అఖిలేష్ యాదవ్ అఖిలేష్ యాదవ్, సమాజ్వాది పార్టీ సభ్యుడు భారతీయ రాజకీయ నాయకుడు మరియు మార్చి 2012 నాటికి ఉత్తర ప్రదేశ్, భారతదేశం యొక్క రాష్ట్ర ముఖ్యమంత్రి కార్యాలయం కలిగి అతి పిన్న ఉంది  అఖిలేష్ యాదవ్    ప్రారంభ జీవితం మరియ… Read More
  • Chief Minister of yadava Community 1.      Chaudhary Brahm Prakash Yadav First CM of Delhi 2.      Praffula Chandra Ghosh First CM of West Bengal 3.      Bindheshwari Pra… Read More
  • பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர்… Read More
  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற… Read More
  • அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல் சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி  பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்       முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்… Read More

2 comments:

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar