"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, January 7, 2014

முல்லையின் சிறப்புகள்






முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம்
ஏறு தழுவல்
ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க
வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(
கலித்தொகை-102 : 9-10)
(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)
போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.
ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும்தொழுஎன்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(
கலித்தொகை- 103 : 63-64)
(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.
இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.
இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
எருமைக் கொம்பை வழிபடல்
ஆயர் தம் வீட்டில் திருமணம் முதலிய நிகழ்வு நிகழும்போது செம்மண் பூசுவர். இளமணலை வீட்டின் முன்பக்கம் பரப்புவர். பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடுவர்.
தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம்
(
கலித்தொகை-114 : 12-14)
(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல்ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)
கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.
மூவினம் வளர்த்தல்
எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.
(1) கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.
(2)
கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர்.
(3)
புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்.
மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.
இஃதுஒத்தன்
கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்.
(
கலித்தொகை- 103 : 32-35)
(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர்எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)
போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர்மகன் அல்லவா ? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.



Related Posts:

  • கரந்தைத்திணை ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்த… Read More
  • ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன் காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக… Read More
  • தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா வணக்கம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது.  இதன் தொடக்கவிழா செப்டம்பர் மாதம் … Read More
  • சுரைக்காய்ச் சித்தர் வரலாறு சித்தர் என்போர் யாவர் என்ற கேள்விக்கு சித்து ஆற்றல் பெற்றோர் எனவும், சித்தி பெற்றோர் எனவும், மீஇயற்கை (super natural) ஆற்றல் பெற்றோர் எனவும், சித் என்றால் அறிவு ஆதலால் அறிஞர் எனவும் பலரும் பலவாறாக விளக்கம் தருகின்றனர். … Read More
  • அழகுமுத்து கோன் கவிதை:கோ.கருணாமூர்த்தி தஞ்சை வெள்ளையனை மிரளவைத்த முதல் வீரனே  விடுதலைக்கு வாலெடுத்த வாழும் வீரமே  மண்டியிடச்சொன்னால் வானம் பனியுமா  மறணபயம் தந்தால் தன்மானம் குறையுமா  தாய்மண் மானம்காத்த வானம் நீ  மயிர்போனால் உயிர்துறக்… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar