நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும். 3 -வது அணி ஆட்சி அமைக்கும். அந்த அரசாங் கத்தில் நாம் பெரிய கட்சியாக பங்கேற்போம். நான் பிரதமர் ஆக மக்கள் ஆதரவு தர வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுகிதளிலும் நாம் வெற்றி பெற்றால் போதும். நமக்கு ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்துவிடும். வேறு எந்த மாநிலத்திலிருந்தும் இவ்வளவு தொகுதிகள் கிடைக்காது. பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் போட்டி நடைபெறுகிறது.
காங்கிரஸும், பாஜகவும் விவசாயி களையும், முஸ்லிம்களையும் மறந்து விட்டன. அவர்கள் தான் இந்த நாட்டை உருவாக்கியவர்கள். நான் சொல்வதைக் கேட்டால் நாட்டில் பண வீக்கம் குறையும்.நமது நாட்டில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு சர்க்கரையையும், கோதுமையையும் இறக்குமதி செய்கி்றது.
இந்தத் தவறான கொள்கையால் விவசாயிகள் பலவீனப்படுத்தப் படுகிறார்கள். ஆந்திராவை பிரிப்பதன் மூலம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவளிக்கின்றன. இதுவே இரு கட்சி மோதல்களுக்கும் காரணம். பாராளுமன்றத்தில் நடந்த மோதல்களுக்கு இந்த இரு கட்சிகளுமே காரணம் என்று அவர் சிதினார்
0 comments:
Post a Comment