"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, February 19, 2014

திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்

ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.
முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.
நன்னிலத்தில்  அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.
டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar