Home »
» நெல்லை தொகுதியில் இந்திய மக்கள் கழக தலைவர் தேவநாதன் மனுதாக்கல்
நெல்லை தொகுதியில்
போட்டியிட, இந்திய மக்கள் கழக நிறுவன தலைவர் டி.தேவநாதன் யாதவ் நேற்று
வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்யாதவ
மகாசபை தலைவரும், இந்திய மக்கள் கழக நிறுவனர் தலைவருமான டி.தேவநாதன் யாதவ்
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர்
தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியும், மாவட்ட
கலெக்டருமான மு.கருணாகரனிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்திய மக்கள்
கழக தென்மண்டல அமைப்பு துணை செயலாளர் முத்து யாதவ், யாதவ மகா சபை சட்ட
ஆலோசகர் ஜனார்த்தனன், மாநில இளைஞர் அணி தலைவர் சாலமோன் ஆகியோர் உடன்
இருந்தனர்.பின்னர் தேவநாதன் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி
கட்டணம்இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களில் அதிக
கட்டணம் வசூல் செய்கிறார்கள். கல்வியை வியாபாரமாக்கி விட்டார்கள். இதனால்
90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு
அனைவருக்கும் இலவசமாக தரமான கல்வி கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக
நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அதற்கு குரல் கொடுக்கவே எங்கள் கட்சி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
15 தொகுதிகளில்
போட்டிதமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். பல மாவட்டங்களைச்
சேர்ந்த நிர்வாகிகள், என்னை தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று
அழைத்தனர். குலுக்கல் முறையில் நெல்லை தொகுதியை தேர்வு செய்து
போட்டியிடுகிறேன்.இவ்வாறு இந்திய மக்கள் கழக தலைவர் டி.தேவநாதன் யாதவ்
கூறினார்.
Related Posts:
நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம… Read More
ஆ. கார்மேகக் கோனார்
கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவார். எழுத்தாளர்.
கார்மேகக் கோனார்
பிறப்பு
… Read More
விஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்
முதலாம் ஹரிஹரர் (ஹக்கா),முதலாவது புக்கா ராயன் (புக்கா) ஆகியோரால் நிறுவப்பட்டது. எனினும் இம் மரபின் தோற்றம் பற்றிப் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. ஒரு கோட்பாட்டின்படி, யாதவ / குருபா இனக்குழுவைச் சேர்ந்த புக்காவும், ஹக்காவு… Read More
இளையான்குடியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம்
இளையான்குடி அருகே உள்ளது கொங்காம்பட்டி கிராமம். இங்கு யாதவர் சமுதாயம் சார்பில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கிங் கருப்பையா தலைமை தாங்கி னார். செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத் தி… Read More
நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள்
தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர். … Read More
0 comments:
Post a Comment