நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் சிதம்பரத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டி: தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட பட்டியலை தேர்வு செய்து அகில இந்திய தலைவர் முலாயங்சிங் யாதவிற்கு அனுப்பினோம். அவர் தமிழகத்தில் கீழ்கண்ட 10 தொகுதிகளில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளார். 7 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
விரைவில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்தில் இந்திய கம்யூ கட்சி தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் பணிக்குழு சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். வேட்புமணு தாக்கல் முடிவுற்றவுடன் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு 10 தொகுதிகளில் ஆதரவு அளித்தால், மற்ற தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை ஆதரித்து முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என இளங்கோயாதவ் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில விவசாய பிரிவு செயலாளர் வீரமணியாதவ், மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.ஜெயகாந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேட்பாளர்கள் பட்டியல் விபரம்: பொள்ளாச்சி- மாலி.சதீஷ்யாதவ் (மாநில பொருளாளர்), ராமநாதபுரம்- வழக்குரைஞர் சபாபதி (மாநில துணைத் தலைவர்), மயிலாடுதுறை- வி.இளப்பன்யாதவ் (ஓய்வுபெற்ற உதவிஆட்சியர், மாநில அமைப்புச் செயலாளர்), தேனி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம் (தேனி மாவட்டத் தலைவர்), கரூர்- எம்.முருகேசன் (மாநில தொழிற்சங்க பிரிவு செயலாளர்), திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் (மாநிலச் செயலாளர்), வேலூர்- என்.நந்தகுமார் (மாநில இளைஞரணி அணி செயலாளர்).
0 comments:
Post a Comment