Monday, March 3, 2014
Home »
» "தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...
"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...
தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு
சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ
அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது.
தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது.
சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.
உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும் சிறுவன்.
சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்து பேசியபடி பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தான்.
நன்றாக
போய்க் கொண்டிருந்த வேன் திடீரென தீபிடித்தது. வேன் டிரைவர் வேனில்
இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் மட்டும்
உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் கதவை திறந்து கொண்டு தப்பி
ஓடிவிட்டார்.
அதே போல வேனில் இன்னொரு புற கதவருகே இருந்த
ஓம்பிரகாஷ் நினைத்திருந்தால் டிரைவரைப்போல கதவைத்திறந்து கொண்டு ஓடி
தப்பியிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யவில்லை. பயத்தில் அழுது அரற்றிய
நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து திறந்தவன் ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற
துவங்கினான்.
ஓம் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர்
பயணித்த அந்த வேனில் இருந்து ஆறு பேர்களை காப்பாற்றிவிட்டான். அதற்கு மேல்
தீ மளமளவென பிடித்து எரியத்துவங்கியது, ஆனாலும் கவலைபடாமல் வேனிற்குள்
நுழைந்து மீதம் இருந்த இரு சிறுவர்களையும் காப்பாற்றினான்.
இந்த
கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின்
கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த
எரிச்சலையும், வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென
நினைத்த ஓம்பிரகாஷ் இருவரையும் காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக
எரிந்து நாசமானது. சில நிமிடங்கள் தாமதித்து ஓம் பிரகாஷ் செயல்பட்டு
இருந்தாலோ அல்லது தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே
தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு
பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால்
எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதையெல்லாம்
பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட
பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட
தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில்
இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
நீண்ட
சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி
பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத
அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.
ஆனால் அதைப்பற்றி
கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும்,
உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன்
தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து
கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.
இவனைப் பெற்றவர்கள்
பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும்
நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை
ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
இப்போது பள்ளிக்கு வரும்
ஓம்பிரகாஷ் யாதவின் முகத்தை பார்க்கும் யாரும் அந்த முகத்தில் உள்ள வடுவை
பெருமையாக கருதி அந்த வடு உள்ள முகத்திலேயே முத்தமழை பொழிந்து
சந்தோஷப்படுகிறார்கள்.
ஓம் பிரகாஷ் யாதவ் இதெல்லாம் புரிந்தவன் போலவும், புரியாதவன் போலவும் சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறான்.
Related Posts:
கண்ணன் என்னும் கலாசார பிரவாகம் இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில்,… Read More
இடையர் என பெயர் வரக் காரணம் என்ன முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும்… Read More
திருமழிசை ஆழ்வார் எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தி… Read More
தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன் சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால் கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்ல… Read More
தத்துவஞானி திருமூலர் சைவத்திருமுறைகளில் பத்தாந்திரு… Read More
0 comments:
Post a Comment