"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, May 19, 2017

மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.

அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.

அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பஞ்சம் பிழைக்க சென்று, நற்காரியங்கள் செய்ததால் அங்கேயே தெய்வமாக பிறவி எடுத்தனர். அகத்தாரிருப்பை சேர்ந்த ராஜகுலத்தை சேர்ந்த ஆதிநாராயண கோனார் வகையறாக்களை சேர்ந்த அகத்தாரிருப்பு, நரியன்சுப்பராயபுரம், காடநகரி, முதுகுளத்துõர் அருகே செல்வநாயகபுரம், காமாட்சிபுரம், பூக்குளம், ராமநாதபுரம் அருகே கொம்பூதி, சிவகங்கை மாவட்டம் ஆரியூர், லட்சுமிபுரம் உட்பட 56 கிராமங்களை சேர்ந்தவர்கள் தெய்வமாக உருவெடுத்த அண்ணன், தம்பி, தங்கைகளை குல தெய்வமாக வழக்கமாக வணங்கி வழிபடுகின்றனர்.


அண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுப்பட்டியில் கூடமுடையர் சுவாமியாகவும், கீழராஜகுலராமனில் தம்பி எத்தீஸ்வரர் பொன் இருளப்பசாமியாகவும், தங்கை ஸ்ரீவில்லிபுத்துõர் அருகே தைலாபுரத்தில் வீரகாளியம்மனாகவும் வீற்றிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடபடும் கோயில் திருவிழாவுக்காக கமுதி அருகே அகத்தாரிருப்புக்கு முந்தைய நாள் இரவே பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை, 8 நாள்கள் பயணித்து, 8 நாள்கள் திருவிழாவாக சொந்தங்களுடன் 16 நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறுகையில், “ 300 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதி நாராயண கோனார் வகையறாக்கள் அகத்தாரிருப்பில் முதல்நாளே வந்து தங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூடமுடையர், பொன் இருளப்பசாமி, வீரமாகாளி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை 8 நாள்கள் பயணிக்கின்றனர். திருத்தங்கல் அருகே கிருஷ்ணா கரை சேர்ந்து, பக்தர்கள் குழுவாக தனித்தனியாக பிரிந்து, தம்பி இருளப்பசாமி, தங்கை வீரமாகாளிக்கு 5 ஆம் நாள் இரவு கிடாவெட்டி அன்னதானம் வழங்கி, தம்பி, தங்கையை பக்தர்கள் புடைசூழ அழைத்து சென்று, அண்ணன் கூடலிங்கம் சுவாமி கோயிலுக்கு சென்று 8 வது நாள் கிடா வெட்டி விரதத்தை முறித்து, சொந்த ஊருக்கு 13 ஆம் நாள் திரும்பும் நிகழ்வு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் சரக்கு வாகனம், டிராக்டர்களில் கூடாரம் அமைத்து கோயிலுக்கு செல்வது சமீபகாலமாக உள்ளது. இருந்தபோதிலு
ம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள் இன்னும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 400 க்கும் மேற்பட்ட வண்டிகளில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்திருவிழாவால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியூர் சொந்தங்களை சந்தித்து, 16 நாள்கள் மகிழ்ச்சியுடன் வருவது நெஞ்சை வருடுகிறது”, என்றார்.

Related Posts:

  • ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி ஏம்மா நீ பிறந்த சீக்கிய கலச்சாரம் இனத்தின் வரலாறு சில நூறு வருடம்தாம்மா ஆனால் தமிழனின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.  ஜல்லிகட்டு எனும் ஏறுதழுவல் இங்கிருந்து வேண்டுமென்றால் வெளிநாட்டிற்க்கு சென்றிருக்கலா… Read More
  • ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம். முடிந்தவர்கள் உதவவும்.  இணையத்தில் பகிரவும் From             S. Arunachala Kumar yada… Read More
  • முல்லையின் சிறப்புகள் முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம். ஏறு தழுவல் ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மே… Read More
  • மூவினம் வளர்த்தல் (மூவினத்து ஆயர்கள்) எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.  கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.  கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர். புல்லினத்து ஆயர் - ஆடு… Read More
  • யாதவர் கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூ… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar