ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, June 18, 2014
Tuesday, June 17, 2014
பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்களை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பெண்களுக்கு உதவி செய்வதற்காக செயல்படும் 24 மணி நேர இலவச ஹெல்ப்லைனை (1090) ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அவர் கூறுகையில், “வரும் கல்வியாண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யும்படி தலைமை செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் தொடர்பான குற்றங்களை முறையாக கண்காணித்து, உடனடியாகவும் முழு உணர்வுடன் விசாரிக்கப்படும். இந்த அரசாங்கம் பெண்களின் கண்ணியத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்றும் அவர்களின் பாதுகாப்பை முறைபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Thursday, June 12, 2014
S. Balakrishnan
S. Balakrishnan, also known as So. Balakrishnan (Tamil: சோ. பாலகிருஷ்ணன்) or So.Ba ( சோ.பா), was a veteran Indian politician, President of Tamil Nadu Congress Committee (TNCC) and Member of the Legislative Assembly of Tamil Nadu for eighteen years and was the Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly (Eleventh Assembly 1996-2001). He was elected to the Tamil Nadu legislative assembly as an Indian National Congress candidate from Mudukulathur constituency in 1977 and 1991 elections and as a Tamil Maanila Congress (Moopanar) candidate from the same constituency in 1996 election and from Kadaladi as a Tamil Maanila Congress (Moopanar) candidate in 2001 election. In the Tamil Nadu Legislative Assembly, Balakrishnan represented Mudukalathur for thirteen years and Kadaladi for five years.
In an illustrious political career spanning over fifty years, where victories and defeats in central and state elections were frequent, Balakrishnan maintained a consistent strong support of voters which was time and again demonstrated when he contested for the Tamil Nadu Legislative Assembly and for the Lok Sabha Parliament elections in Ramanathapuram district. His defeats in the elections were not with out a tough fight. In the General Elections in 1971, Balakrishnan contested from Ramanathapuram Lok Sabha constituency and came a Runner-up. 139,276 votes (38.87%) were polled on his favour. In the State Elections of 1980 for the Legislative Assembly of Tamil Nadu, Balakrishnan contested from Mudukalathur and was polled 37,175 votes (44.77%) but lost the election by 5536 votes. In 1989 State Elections for the Legislative Assembly of Tamil Nadu, Balakrishnan contested from Kadaladi, a coastalconstituency, that neighboured Mudukalathur. The total number of votes polled for Balakrishnan was 32,273, which was 409 (0.38%) votes less than the declared winner. The total number of votes that were rejected or declared invalid in that constituency during the election was 1878 (1.71%).
Tuesday, June 10, 2014
திருமந்திரம் தந்த திருமூலவரின் கதை
திருமந்திரம் தந்த திருமூலவரின்கதை!
திருவாவடுதுறை! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் பெயர் பசுபதியார். சிவ வாகனமான நந்தியின் அருளைப் பெற்றவர்களில் சுந்தரநாதர் இவருக்குஅகத்தியரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்க விருப்பம் ஏற்பட அகத்தியரைக் காணபுறப்பட்டார். அவர் செல்லும் வழியில் திருவாவடுதுறையில் உள்ள பசுபதிநாதரை வணங்கி சில காலம் அங்கேயே தங்கி, அங்குள்ள பிற தலங்களையும் தரிசிக்க நனைத்து காவிரியாற்றின் கரை வழியாக போய்க்கொண்டிருந்தார். அங்கு சாத்தனூரைச் சேர்ந்த இடையர்குல மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து கொண்டிருந்தான். இவன் அன்போடு மாடுகளைமேய்த்து அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தான். அன்றும்மூலன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கும்போது அவனது வாழ்நாள் ¬முடிந்து விட திடீரெனமூலன் இறந்து விட்டான். இதைக்கண்ட இவன் அன்புடன் மேய்த்த பசுக்கள் எல்லாம் இவனைப்பிரிந்த துக்கத்தில் கதறி இறந்த மூலனின் உடலை நாக்கால் நக்கி அங்குமிங்கும்சுற்றித்திரிந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரநாதர் மூலனின் பிரிவால்அனைத்து பசுக்களும் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடும் என நினைத்தார். எப்படியாவதுபசுக்களில் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும்வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப்புகுத்தினார்.
அவ்வளவுதான். மூலன் உறங்குபவன்போல் கண்விழித்து திருமூலராய்எழுந்தான்.இதனைக் கண்ட பசுக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. திருமூலராகிய சித்தருக்குசந்தோஷம் தாங்க ¬டியவில்லை. பின்னர் பசுக்களையெல்லாம் அதற்குரிய இடத்தில்சேர்த்துவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் மூலனின் வீட்டு நிலையை தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். மூலனுக்கோ திருமணம் ஆகி இருந்தது. என்னசெய்வது என்றுயோசித்துக்கொண்டிருந்தபோது மூலனின் மனைவி அவன் வீடு வர தாமதமானதால் அவனை தேடிவந்தும் விட்டாள். மூலனிடம் தாமதத்திற்கான காரணம் கேட்டாள். மூலனோ மவுனம்சாதித்தார். இதனால் வருத்தமடைந்த அவள் திருமூலரின் கையைப்பிடித்து வீட்டிற்குஅழைத்தாள். பதறிப்போன திருமூலர் அவளிடம் இனிமேல் நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன்.உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது எனவே நீ சிவனை வழிபட்டு அமைதி அடையவேண்டும் என்று கூறியதோடு பக்கத்திலிருந்து மடத்திற்கு சென்று தியானத்தில்ஆழ்ந்தார். கவலையுடன் வீடு திரும்பிய அவள் மறுநாள் தன் சுற்றத்தாருடன் திருமூலரைசந்திக்க சென்றாள். அங்கு நிஷ்டையில் இருந்த அவரின் முகத்தில் தெய்வ சக்திஜொலித்தது. இதைக்கண்ட அனைவரும் திகைத்தனர். இருந்தாலும் அந்த பெண்ணிற்காகதிருமூலரிடம் வாதாடினர். எந்த பலனும் இல்லை.
அதன் பின் தான் திருமூலர் ¬முனிவர் என்பதையும் அவருடன் வாழ்வது முடியாத காரியம் என்பதையும் தெளிவாக அந்தபெண்ணிடம் சுற்றத்தார் தெரிவித்தனர். இதைக்கேட்ட அந்தப்பெண் அழுது புலம்பி பின்திருமூலரை வணங்கிவிட்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். சிறிது நேரத்தில் யோகநிலைகலைந்த திருமூலர் மறைத்து வைத்திருந்த பழைய திருமேனியை தேடினார். கிடைக்கவில்லை. இறைவன் அருளிய ஆகமப் பொருளை தமிழிலே வகுத்து உலகிற்கு உணர்த்தவே சிவன் தன் உடலைமறைத்துவிட்டார் என்பதை தன் ஞான திருஷ்டியால் திருமூலர் உணர்ந்தார். உடனே இறைவனின்கட்டளையை நிறைவேற்றிட திருவாவடுதுறை பசுபதிநாதரை வணங்கி கோயில் மதிலுக்கு மேற்குபக்கமாக அமைந்துள்ள அரசமரத்தடியில் அமர்ந்து சிவயோகம் செய்ய ஆரம்பித்தார்.சிவயோகத்தில் நிலைத்துநின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். இங்குதான் மூவாயிரம் மந்திரங்கள் அடங்கிய திருமந்திரத்தை இயற்றினார். சிவயோகநுணுக்கங்களை விளக்கமாகக்கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! இப்புனிதமானதிருமந்திரத் திரு¬றைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை..
மாயோன்
மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான். பிற்பாடு இம்மாயோனை திருமால் என மாற்றியதாக ஆய்வாளர்கள் கூறுவர்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையில் முருகன் மாயோனின் மருமகனாகக் கூறப்படுகிறான்
கம்ப இராமாயனம்
கம்ப இராமாயனம் மாயோனை விஷ்னு எனக்கூறுகிறது
மாயோன்
மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரி யோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.
முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்..
பழந்தமிழ் நூல்களில் மாயோன்
மாயோன் பற்றிய குறிப்புகள் பிற தெய்வங்களைவிட மிகுதியாகப் பழந்தமிழ் நூல்களில் பரவிக் கிடக்கின்றன. ”தேயா விழுப்புகழ்த் தெய்வமாக” (கலி:103:76)
மாயோன்: இயற்கையுரு:-
மாயோன் என்ற சொல் கரியநிறமுடையவன் என்ற பொருளைத் தருகின்றது. மணிவரை அன்ன மாஅயோனே (புறம்.229) மண்ணுறுதிருமணி (புறம். 56:5) நீலநிற உறவின் நெடியோன் (பெரும். 30.402) இருள் மயங்கும் மேனியன் (பரி.15:50) என இயற்கையுருவாக மாயோன் குறிப்பிடப்படுகின்றான்.
காய்மலர்ப் பூவை கடலை யிருண்மணி
அவையைந்து முறழு மணிகிளர் மேனியை (பரி.13:42-43)
எனக் காயாம்பூ, கடல், நீலமணி என இயற்கையின் உரு, கடவுளாகச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றது.
மாஅல்:-
பெரிய எனும் பொருண்மை உடைய மாஅல் என்னும் பெயரும் மாயோனுக்கு உரியதாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரக் காண்கிறோம். முல்லை நிலக்காடுறைப் பகுதியின் நெடிய உருவினை மாயோனுக்கு ஏற்றி மாலாகக் கொள்ளும் முறையினைப் பத்துப்பாட்டின் பல இடங்களில் காணமுடிகிறது.
”மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு” (முருகு.12) ”மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்” (நற்.32:1) என நெடியோனாக மாஅல் உயருகின்றான்.
மாயோன்: முல்லை நிலக்கடவுள்:-
அகன் ஐந்திணைக்கு உரிய நிலத்தினைக் கூறுமிடத்துத் தொல்காப்பியர், மாயோன் மேய காடுறை உலகமும் எனச்சுட்டுகிறார். காடுறை கடவுளாகச் சுட்டப்படும் மாயோன் காயம்பூ சூடினமையை, ”பூவை விரிமலர் புரையும் மேனியை” (பரி.1:6-7) ”பறவாப் பூவை பூவினோயே” (பரி.3:73) என்ற தொடர்கள் வெளிப்படுத்துகின்றன.
காடுறை கடவுளான திருமால் கானகத்தின் நெடுமையையும் மாமை நிறத்தினையும் உடையோனாய் இருப்பதோடு அந்நிலத்திற்கு உரிய பெரும்பொழுதான கார்காலத்துக் கரிய மேகத்தின் நிறத்தினைப் பெற்று, காயாம்பூ சூடி முல்லை நிலக்கடவுளாக விளங்குவதனை உணர முடிகின்றது. இதனைத் ”தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர்” (திரு.வி.க. தமிழ்நூல்களில் பௌத்தம், ப.27) என்ற கருத்து அரண் செய்கிறது.
இவ்வாறு மாயோன் அடர் கானகப் பசுமையின் இயற்கையழகில் முகிழ்த்த முல்லைக் கடவுளாக எழிலுறுகிறான் எனலாம்.
அகவாழ்வின் தலைவன்:-
முல்லை நிலக் கடவுளாகிய மாயோனை, முல்லைநிலத் தலைவனோடு இயைத்தும் பாடும் மரபு பழந்தமிழில் பரந்து கிடக்கக் காணலாம்.
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போல
புன்தலை மடப்பிடி உண்இயர் அம்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றிநனைகவுள்
படி நிமிறு கடியும் களிறே தோழி (அகம். 59:5-10)
என ஆற்றியிருக்கும் தலைவிக்குத் தோழி தலைவன் செல்லும் வழியிடைக் காட்சி ஒன்றினைக் கூறி ஆற்றுவிக்கின்றாள். இக்கவிதையில் மால் களிறுக்கு உவமையாகி முல்லை நிலத் தலைவனுக்கு இறைச்சிப்பொருளாய்ச் சுட்டப்படுவது இன்றியமையாத குறிப்பாகும்.
எருதின் மீது பாயும் தலைவனுக்கு மால் ஒப்பாவான் என்றும் (கலி.104:35-38) தலைவனைப் பிரிந்திருந்த தலைவி தலைவனை அடைவது மாயோன் மார்பில் உள்ள திருமகளை ஒக்கும் (கலி.109:17-18) என்றும் கலித்தொகை குறிப்பிடுகின்றது.
மாயோன்: பூவை நிலையின் வெற்றி வீரன்:-
பூவை நிலைத் துறையின் புகழ்நிலைக்கு உரிய கடவுளாகிய மாயோன் வெற்றி வீரனாகின்ற தலைவனுக்கு உவமையாகின்றான்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனைப் போற்றும் முகத்தான், ”புகழ் ஓத்தீயே, இகழுநர் அடுநனை” (புறம். 56:13) என மாயோன் உவமிக்கப்படுகின்றான். பிறிதோரிடத்தில்,
புகழ்தலுற்றோர்க்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான்மாறா (புறம்.57:1-3)
என மன்னனது சிறப்பிற்கு மாயோனது சிறப்பு உவமையாகின்றது. இவ்வாறு முல்லை நிலத்தாரின் அகவாழ்விற்கும் புறத்திணை வீரர்களின் (அரசர்களின்) புகழுக்கும் மால் உவமையாக்கப்படுவது எண்ணத்தக்கதாகும். இயற்கையின் மூலபடிவ உருவினனான மாயோன் மாந்தர்தம் வாழ்வியல் கூறுகள் வழி மூலபடிவபாத்திரமாக (Archetypal Charecter) உயர்ந்தமை இன்றியமையாக் குறிப்பாகும்.
மாயோன்: காத்தல் கடவுள்:-
இயற்கையின் உருவாகிய மாயோன் பற்றி குறிப்புகள், கதைத்தன்மையுடன் இணைந்து வளர்ச்சியுற்ற நிலையில் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. காலத்தால் பிற்பட்ட இலக்கியங்களில் அவை புராணிகத் தன்மை மிக்கிருக்கும் பான்மையில் இடம் பெறுகின்றன.
பரிபாடலில் மாயோன் முத்தொழில் புரிபவனாக முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழில் எனப் படைப்பு, அளிப்பு, அழிப்பு, என்னும் தொழில் புரிபவனாக உள்ளான் (பரி.3.71) முத்தொழில் வல்லவனாக மாயோன் இருப்பினும் காத்தல் தொழில் மாயோனுக்கு உரியதாகச் சுட்டப்படுகின்றது. ”உலகாள் மன்னவ” (பரி 3.85) என்னும் ”ஒருமை வினைமேவு உள்ளத்தினை” (பரி.13.49) என்றும் மாயோனின் காத்தல் தொழில் சுட்டப்படுகிறது. காத்தல் கடவுளாக விளக்கமுற்ற மால் உலக முதல்வனாகப் பேருரு கொண்டமையினையும் பழந்தமிழ் வழி அறிய முடிகின்றது.
மாயோன்: உலக முதல்வன்:-
மாயோனாகிய திருமாலின் முழுமுதற்றன்மையினையும் அவதாரங்களையும் ஆற்றலுடைய முழுமுதற்கடவுளாக உயர்ந்தமையையும் பரிபாடல் குறிப்பிடுகின்றது. இக்குறிப்புகள் வடமொழிப் புராணமரபுடன் இணைந்து செழித்தவை என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
திருமால் அனைத்துக் கடவுளாக உள்ளமையை, ”எவ்வயினோயும் நீயே” (பரி.4:67-70) என்ற தொடர் சுட்டுகின்றது. பலராமன், காமன், அநிருத்தன், பிரமன் என ஐவராகவும் மாயோன் உள்ளமையும் பரிபாடலில் (பரி 3.81-94) குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான குறிப்புகள் வைணவப் பஞ்சராத்திரக் கொள்கையின் வளர்ச்சி என்பர் திறனாய்வாளர் (இந்திரபவாநி, சங்க நூல்களில் கிருஷ்ண வழிபாடு, ப.62)
இயற்கையின் உருவாகிய மால் நெடியோனாகி, பேருரு பெற்று கடவுளானமையும், வடமொழிப் புராணக்கலப்பால் கதைத் தன்மையுடன் கூடி வளர்ச்சியுற்றமையையும் கண்டோம். தத்துவப் பொருளாகிய நெடியோன் இயற்கையின் எல்லாப் பொருளிலும் பரந்து விரிந்து ஊடுருவிய நிலையினையும் பரிபாடலில் பரக்கக் காணலாம்.
மாயோன் அவதாரங்கள்:-
அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். அவ்வாறு இறங்குதல் உயிர்களின் பொருட்டு என்றும் கூறுவர். அவதாரம் என்பதற்குத் தோற்றம் என்ற சொல்லாட்சி கையாளப்படுகின்றது. மால் எடுத்த தோற்றங்கள் பத்தென்பர். அவற்றுள் கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருட்டிணன் என எட்டுத் தோற்றங்கள் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர பழந்தமிழில் தொன்மை வகைமை வளர்ச்சி, பி.எச்டி ஆய்வேடு, ப.169)
மாயோன் தொன்மம்: வளர்ச்சியும் சுழற்சியும்:-
மாயோன் தொன்மம் வளர்ச்சி பெற்றுச் சுழற்சி பெற்றமையை அறியலாம்.
இயற்கையின் அடர் பசுமை, கானகத்தின் பரிதி நுழையாத அடர் இருள் முதலிய மூலபடிவு எண்ணங்களுக்கு மாயோன் வித்தாகின்றான். அடர் கானகத்தின் பெரிய பரப்பிற்கும், நெடிய சார்பாக நெடியோனாகக் காடுறை கடவுளாக உயருகின்றான். காடுரை மக்களின் அகவாழ்வாம் காதல் வெற்றிபெற வழியாகும் ஏறு தழுவும் தலைவனாய்ப் பழந்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நனவிலி மனவுணர்வுகளின் உருவாகக் காட்சியளிக்கத் தொடங்குகின்றான். அரசர்களின் புகழுக்கும் படிமமாகி. பூவை நிலை எனும் புறப்பொருளில் மையமிடுகின்றான்.
வடமொழிப் புராணக் கலப்புற்று வளர்ச்சி பெற்ற தொன்மக் கடவுளாகப் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றான். மணிதிகழ் உருபின் மாயோன், மூவேழ், உலகமாய்ப் பரந்தமையும் பிறவாப் பிறப்பாகவும் சிறந்து உலக முதல்வனாகின்றான். விட்டுணுவின் தசாவதாரங்களுள் பல தோற்றங்களின் வடிவாகின்றான். சமய தத்துவச் சார்பின் பொருண்மையாகின்றான். இவ்வாறு மாயோன் தொன்மம் பிறமொழி மற்றும் பண்பாட்டுக் கலப்பால் வளர்ச்சியுற்ற நிலையை உணர முடிகின்றது.
நன்றி: ஆய்வுக்கோவை.