Tuesday, June 17, 2014
Home »
» பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ்
பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்களை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பெண்களுக்கு உதவி செய்வதற்காக செயல்படும் 24 மணி நேர இலவச ஹெல்ப்லைனை (1090) ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அவர் கூறுகையில், “வரும் கல்வியாண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யும்படி தலைமை செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் தொடர்பான குற்றங்களை முறையாக கண்காணித்து, உடனடியாகவும் முழு உணர்வுடன் விசாரிக்கப்படும். இந்த அரசாங்கம் பெண்களின் கண்ணியத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்றும் அவர்களின் பாதுகாப்பை முறைபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment