ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, July 11, 2014
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ்
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கேட்டு கொண்டுள்ளார். 1728 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள கட்டாளங்குளத்தில் பிறந்த வீரன் அழகு முத்துகோன் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்பா நாய்க்கர் குமரார் பெரிய வீரப்ப நாய்க்கரிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். வெள்ளையர்களின் கைகூலியாக செயல்பட்ட யூசுப்கான் சாகிக்கை எதிர்த்து பெத்தநாயக்கனுர் கோட்டையில் போரிட்டார். இதில் வெள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட அழகு முத்து கோன் மற்றும் 6 தளபதிகள் பீரங்கி குழாய் முனையில் வைத்து சுடப்பட்டனர். இறுதி வரை கப்பங்கட்ட மறுத்து போரிட்டு உயிர் நீத்த வீரன் அழகு முத்து கோனின் 255 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள வீரன் அழகு முத்து கோனின் திருஉருவ சிலைக்கு யாதவ மகாசபை தேசிய தலைவரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவண தலைவருமான டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் அரசு சேர்க்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். இதைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அழகு முத்து கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர் வீரன் அழகு முத்து கோனின் வரலாறு ஆசியர்களுக்கே தெரியவில்லை என்றும் எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் யாதவ மகாசபை தேசிய அமைப்பு செயலாளர் குணசீலன் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமாதாஸ்,
வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் அழகு முத்து வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உடன் இருந்தார்.
வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ் மரியாதை
விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 276–வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை, கோகுல மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக சமூக ஜனநாயக கூட்டணி தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு மாலை அணிவித்தார். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தேசிய பார்வர்டு பிளாக் நிறுவனர் பி.டி.அரசகுமார், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், வேளாளர், பிள்ளைமார், செங்குந்த முதலியார் கூட்ட மைப்பு தலைவர் கே.ராஜன், கொங்குநாடு மேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் முனுசாமி ஆகியோரும் மாலை அணி வித்தனர்.
பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரர் அழகு முத்துகோனுக்கு அவர் போரிட்டு உயிர்நீத்த இடமான தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளமேட்டில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்.அவரது வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும். இது அந்த சமுதாய மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.