"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, August 12, 2014

கோகுலாஷ்டமி(எ)கிருஷ்ண ஜெயந்தி(எ) ஜென்மாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.
   
தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.
அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!
வழிபாட்டு முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
"ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.
கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.
மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.
வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும்.இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.
கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
பெண்கள் அரசியலில் சிறந்து விளங்க இவ் வழிபாடு மிகவும் சிறந்த வழிபாடு 
திருமண தடை நீங்கும்:
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.
எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.
கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபடுவோம்

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்


மும்பை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.


இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது 40 அடி வரை உயரமாக இந்த பானைகள் தொங்கவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறுகிறது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பாக திரு சுகுமார் யாதவ் அவர்கள் கலந்து கொள்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - டெல்லி கிளை


நன்றி
Athiban Yadav

சென்னையில் ஆகஸ்ட் 31 யாதவர் சந்திப்புக்கூட்டம்


யாதவர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னையில் ஆகஸ்ட் 31 ஞாற்றுக்கிழமை அன்று யாதவா சந்திப்புக்கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் வருக வருக வருக






தேதி-ஆகஸ்ட் 31
நேரம்- 9 மணி

இடம்:சென்னை அண்ணாநகர் டவர் பார்க்

தொடர்புக்கு

மணி யாதவ்
9884774983
சென்னை மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு

செந்தில் கோன்
9042999966
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு

Saturday, August 9, 2014

திரு.ஐயம் பெருமாள் கோனார்

                   
         பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில் திருவும், கல்வியும், செல்வமும் ஒரு சேரப் பெற்றுச் சிறந்து விளங்குவார் என்பதை இவருக்கு வாய்த்த ‘திரு’ என்னும் சொல் சுட்டி காட்டுகிறது.
          திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் விசுவாவிசு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தி ஆறாம் நாள் (05.09.1905) செந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள தம் பாட்டனார் இல்லத்தில் அகிலாண்டத்தம்மையார் அவர்கட்கு அருமந்த புதல்வனாய்ப் பிறந்தார். இளமையிலேயே அன்னையே இழந்த இவர், தம்பெரிய அன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் உள்ள தம் இல்லத்தில் வளர்ந்து வரலானார். பெரிய அன்னையின் தூண்டுதலால் அவர் திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர்க்குத் தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து வரலாயிற்று. பிறகு தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார்.
           கோனார் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்த் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகத் தனித் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி 1933-இல் வெற்றி பெற்றார். அவர் 15 ஆண்டுகள் தமிழ் உரையையும் ,வினா விடையையும் தம் சொந்த முயற்சிலேயும்,சில வெளியீட்டாளர் மூலமாகவும் வெளியிட்டு நல்ல போதக ஆசிரியராகவும் விளங்கிய அவர் சிறந்த உரையாசிரியராகவும் மதிக்கப்பட்டார்.
            1942-ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் அவர்களுக்குப் பின் அவருக்கு  அப்பதவி அளிக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு வரை தமது அறுபதாவது ஆண்டு முடிய தமது தமிழ்ப் பேராசிரியர் பணியைச் சிறப்பாக செய்து மாணவர்களும், ஆசிரியர்களும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் வகையில் ஒய்வு பெறலானார்.
           கல்லூரிப் பேராசிரியரான பின், கல்லூரிப் தமிழ்ப்பாட நூல்களுக்கும் உரை எழுதலானார். இவ்வாறு கல்லூரியில் பாடம் கற்பிப்பதிலும், உரை எழுதுவதிலும் அவர் வல்லவர் என்னும் நற்பெயர் எங்கும் பரவப் பெற்றார்.
           அவரது சிறப்பினை உணர்ந்த உயர்திரு. செ.மெ.பழனியப்பச் செட்டியார் அவர்கள் அவரது உரை நூல்களைப் பள்ளி இறுதி வகுப்பு ஆகியவற்றின் தமிழ்ப்பாட நூல்களுக்கான உரைநூல்களைத் தமது வெளியீடாக வெளியிட விரும்பி ஏற்றுக்கொண்டார். மற்றும் பி.ஏ.பி,எஸ்.சி, வகுப்புத் தமிழ் உரைநூல் அவர்தம் மைத்துனர் வாசன் பதிப்பகம், கோனார் பப்ளிகேசன்ஸ் மூலமாக வெளியிட்டு வந்தார். அவர்க்குப் பின் சென்னை, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாடநூல்களின் உரைகளும் மதுரை கோனார் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் திரு.சடகோபன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். கோனார் உரை நூல்க்கு முத்திரையும் பெற்றுச் சிறப்புச் சேர்த்து உள்ளார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, தமிழ் உரை நூலும் கோனார் பதிப்பகத்தில் வெளியிட்டு வந்தார்கள்
         அவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தமது அறுபதாவது ஆண்டு நிறைவு நாளில் மணி விழாக் கண்டு மகிழ்ந்தார் திரு.கோனார் அவர்களின் தமிழ்ப்பற்றையும் தொண்டினையும் ‘ஆனந்த விகடன்’, ‘ஆசிரியரத்தினங்கள்’ என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வரைந்து சிறப்பித்தது. அவரது இறையன்பையும்,அதனை வளர்க்கும் நெறியில் இடையராது ஆற்றிய சொற்பொழிவுத் தொண்டினையும் போற்றும் வகையில் உறையூர் ‘வாசுகி பக்த சன சபையார்’ அவர்க்குப் பொன்னாடை போர்த்தி, ‘செம்பொருட்காட்சியர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். மேலும் அவரது சமயத் தொண்டினைப் பாராட்ட விரும்பிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவருக்குப் தங்கப்பதக்கம் வழங்கி ‘திருப்பாவை ஆராய்ச்சி மணி’ என்ற பட்டத்தையும் சுட்டிச் சிறப்பித்தனர். மார்கழி முப்பது நாட்களிலும் திருச்சி வானொலி நிலையத்தினர் ஒலிபரப்பிய அவரது திருப்பாவை விளக்கவுரையைக் கேட்டுக் தமிழகமே பெரிதும் மகிழ்ந்தது.
          தமிழ்ப்பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தம் சிறந்த தமிழ்ப் பணியினால் மாணவருலகம், ஆசிரியர் உலகம் , சமய உலகம், தமிழுலகம் பயனுறுமாறு சிறந்த போதக ஆசிரியராகவும் உரையாசிரியாகவும், நூலாசிரியராகவும், சொற்பொலிவாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.
         திரு.கோனார் அவர்கள் இயற்றிய நூல்கள்:- கோனார் தமிழ்க் கையகராதி,திருக் குறளுக்குக் கோனார் பொன்னுரை மற்றும் சங்ககாலப் பாண்டியர், வாசன் பைந்தமிழ்ச் சோலை முதலின
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      முடிவை மணி கோனார்


இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை

               
                                மே.வீ.வேணுகோபால்பிள்ளை அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில் கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து ஊன்றி படித்தார். அறிஞர் நடத்திய இரவு பள்ளியில் சேர்ந்து கற்றார். வேப்பேரியில் உள்ள அஞ்சலகத்தில் ஏவலனாகப் பணியாற்றினார். ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்த போது வழக்குத் தாள்களைப் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது “டால்ஸ்டாய்’, ‘எமர்சன்’, ‘கார்லைல்’ போன்றோரின் கருத்துகளையும் சீன நாட்டு கன்பியுசியஸ் கருத்துக்களையும் மேற்கோள் காட்டுவார்.
                  திரு.கா.ரா.கோவிந்தராச முதலியாரிடம் முறையாகத் தமிழ் கற்றார். பிறகு தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் எழுத்து வேளையிலும், பதிப்புத் தொழிலிலும் எடுபட்டார். அவர் பத்திராயு அல்லது ஆட்சிக் குரியோன்,திருக்கண்ணபிரானார், குனசாகரர் அல்லது இன்சொல் இயல்பு, அற்புத விளக்கு. அரிச்சந்திர புராணம்-விளக்கக் குறிப்புரை, இளைஞர் தமிழ்க்கையகராதி போன்ற நூல்களை இயற்றினார். அவர் மேலும் துருவன் என்ற நூலையும் அம்பல வாணன், இளங்கோவன் என்ற புதினங்களையும் இயற்றினார். எழுத்தெண்ணி நுணுகிப் பார்த்து பிழைகளைத் திருத்துதல் இவர்க்குக் கைவந்த கலை. அவர் திருத்தம் செய்து பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:- இறையனார் அகப்பொருள், வீரசோழியம், தொல்காப்பியம், இலக்கணச் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியார் உரை, தஞ்சைவாணன் கோவை விளக்கக் குறிப்புரை, அட்டப் பிரபந்தம் விளக்கக் குறிப்புரை, சித்தர் ஞானக் கோவை போன்றவை. சென்னை பவாநந்தர் கழக உறுப்பினராகத் திகழ்ந்தார். சென்னை பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல்கள் நிறுவனப் பதிப்பாசியராய்த் திகழ்ந்தார். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்று வந்த கம்பர் கழகத்தில்  மே.வீ.வே. சிறந்த தொண்டாற்றினார். சென்னை ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கம் நடத்தும் மாநாட்டில் ஆண்டு தோறும் சமயச் சொற்பொழிவாற்றிதோடு, ஓராண்டு மாநாட்டுத் தலைமை தாங்கும் பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களால் நடத்தப்பபெற்ற ‘தமிழகப் புலவர் மற்றும் தமிழ்ச்சான்றோர்’ குழுவின் தலைவராய் இருந்து தமிழ்ப் பணியாற்றினார்.
            ‘மகா வித்துவான் பட்டம் இவரைப் புலவர் உலகம் ‘இலக்கணத் தாத்தா’ என அழைத்து வருகிறது அறிஞர் அண்ணாவால் 1967-இல் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டம் வழக்கப்பட்டது. 1977-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் 1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினரால் ‘தமிழ் பேரவைச் செம்மல்’ பட்டமும் பொற்கிளியும் வழங்கிப் பாராட்டியது. 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டமும் பத்தாயிரம் வெண்பொற்காசுகளும் அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் வழக்கப்பட்டது. 1981-இல் தமிழ்நாடு நல்வழி நிலையம் இவருக்கு ‘செந்தமிழ் வித்தகர்’ என்ற பட்டமளித்தது.
             காஞ்சியில் சீவக சிந்தாமணி சொற்பொழிவாற்றினார். அதன் சிறப்பை அறிந்த திரு.வி.க அவர்கள் ‘சிந்தாமணிச் செல்வர் வேணுகோபால் பிள்ளை’ என்ற பட்டமளித்தார். ஆசிரியர்க்கு ஆசிரியரான இவர் நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் புகழ் ஈட்டினார். ஐரோப்பாவைச் சேர்ந்த டாக்டர் கபில் சுவலபில் அவர்கள் மே.வீ.வே வின் தமிழ் மாணவர். ஜெர்மனியிலுள்ள ‘கோல்ன்’ பல்கலைக்கழக நூலகத்திற்கு இலக்கணத் தாத்தா மே.வீ.வேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆயிரம் பிறைகண்ட அறிஞர் மே.வீ.வே யின் 80-வது பிறந்த நாளில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமையில் விழாவெடுத்து, ‘பாவலர் போற்றும் மே.வீ.வே’ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      முடிவை மணி கோனார்


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar