Saturday, August 9, 2014
Home »
» இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை
இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை
மே.வீ.வேணுகோபால்பிள்ளை
அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர்.
இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில்
கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து ஊன்றி படித்தார். அறிஞர் நடத்திய இரவு பள்ளியில்
சேர்ந்து கற்றார். வேப்பேரியில் உள்ள அஞ்சலகத்தில் ஏவலனாகப் பணியாற்றினார். ஒரு
வழக்கறிஞரிடம் பணிபுரிந்த போது வழக்குத் தாள்களைப் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக்
கொண்டார். பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது “டால்ஸ்டாய்’, ‘எமர்சன்’,
‘கார்லைல்’ போன்றோரின் கருத்துகளையும் சீன நாட்டு கன்பியுசியஸ் கருத்துக்களையும்
மேற்கோள் காட்டுவார்.
திரு.கா.ரா.கோவிந்தராச முதலியாரிடம் முறையாகத் தமிழ் கற்றார். பிறகு
தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் எழுத்து வேளையிலும், பதிப்புத் தொழிலிலும்
எடுபட்டார். அவர் பத்திராயு அல்லது ஆட்சிக் குரியோன்,திருக்கண்ணபிரானார்,
குனசாகரர் அல்லது இன்சொல் இயல்பு, அற்புத விளக்கு. அரிச்சந்திர புராணம்-விளக்கக்
குறிப்புரை, இளைஞர் தமிழ்க்கையகராதி போன்ற நூல்களை இயற்றினார். அவர் மேலும்
துருவன் என்ற நூலையும் அம்பல வாணன், இளங்கோவன் என்ற புதினங்களையும் இயற்றினார்.
எழுத்தெண்ணி நுணுகிப் பார்த்து பிழைகளைத் திருத்துதல் இவர்க்குக் கைவந்த கலை. அவர்
திருத்தம் செய்து பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:- இறையனார் அகப்பொருள்,
வீரசோழியம், தொல்காப்பியம், இலக்கணச் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியார் உரை,
தஞ்சைவாணன் கோவை விளக்கக் குறிப்புரை, அட்டப் பிரபந்தம் விளக்கக் குறிப்புரை,
சித்தர் ஞானக் கோவை போன்றவை. சென்னை பவாநந்தர் கழக உறுப்பினராகத் திகழ்ந்தார். சென்னை
பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல்கள் நிறுவனப்
பதிப்பாசியராய்த் திகழ்ந்தார். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்று வந்த கம்பர்
கழகத்தில் மே.வீ.வே. சிறந்த
தொண்டாற்றினார். சென்னை ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கம் நடத்தும் மாநாட்டில் ஆண்டு தோறும்
சமயச் சொற்பொழிவாற்றிதோடு, ஓராண்டு மாநாட்டுத் தலைமை தாங்கும் பொறுப்பும்
அவருக்குத் தரப்பட்டது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களால்
நடத்தப்பபெற்ற ‘தமிழகப் புலவர் மற்றும் தமிழ்ச்சான்றோர்’ குழுவின் தலைவராய்
இருந்து தமிழ்ப் பணியாற்றினார்.
‘மகா வித்துவான் பட்டம் இவரைப் புலவர் உலகம்
‘இலக்கணத் தாத்தா’ என அழைத்து வருகிறது அறிஞர் அண்ணாவால் 1967-இல்
‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டம் வழக்கப்பட்டது. 1977-இல் தமிழ்நாடு இயல் இசை
நாடக மன்றம் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் 1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினரால்
‘தமிழ் பேரவைச் செம்மல்’ பட்டமும் பொற்கிளியும் வழங்கிப் பாராட்டியது. 1981-ஆம்
ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது ‘முதுபெரும் புலவர்’
என்ற பட்டமும் பத்தாயிரம் வெண்பொற்காசுகளும் அப்போது முதல்வராயிருந்த
எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் வழக்கப்பட்டது. 1981-இல்
தமிழ்நாடு நல்வழி நிலையம் இவருக்கு ‘செந்தமிழ் வித்தகர்’ என்ற பட்டமளித்தது.
காஞ்சியில் சீவக
சிந்தாமணி சொற்பொழிவாற்றினார். அதன் சிறப்பை அறிந்த திரு.வி.க அவர்கள்
‘சிந்தாமணிச் செல்வர் வேணுகோபால் பிள்ளை’ என்ற பட்டமளித்தார். ஆசிரியர்க்கு
ஆசிரியரான இவர் நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் புகழ் ஈட்டினார். ஐரோப்பாவைச் சேர்ந்த
டாக்டர் கபில் சுவலபில் அவர்கள் மே.வீ.வே வின் தமிழ் மாணவர். ஜெர்மனியிலுள்ள
‘கோல்ன்’ பல்கலைக்கழக நூலகத்திற்கு இலக்கணத் தாத்தா மே.வீ.வேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் பிறைகண்ட அறிஞர் மே.வீ.வே யின் 80-வது பிறந்த நாளில் கி.ஆ.பெ.விஸ்வநாதன்
தலைமையில் விழாவெடுத்து, ‘பாவலர் போற்றும் மே.வீ.வே’ எனும் கவிதைத் தொகுப்பு
நூலும் வெளியிடப்பட்டது.
நன்றி
யாதவர் களஞ்சியம்
ச.சி.செல்லம்
யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
முடிவை மணி கோனார்
0 comments:
Post a Comment