Wednesday, August 20, 2014
Home »
» மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அந்தேரி
மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பில், மரோல் பைப்லைன் தமிழ் சாய் நகரில் உள்ள சங்க பணிமனையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் பப்பு நாதன், ஆலோசகர் முத்துகுமார், நிர்வாகிகள் வேம்பு, நித்தியானந்தன் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
வசாய் ரோடு
பால்கர் மாவட்டம் வசாய்ரோடு யாதவ சங்கம் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் நல்லகண்ணு மணி யாதவ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் தாஸ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சீனிவாசன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, சுடலைகண்ணன், வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கார்கர்
நவிமும்பை கார்கர் கேந்திரிய விகார் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் முருகன் யாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் யாதவ் முன்னிலை வகித்தார். சிவக்குமார் யாதவ் வரவேற்று பேசினார். ஆசிரியர் முத்தையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் பன்வெல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் தாக்கூரின் சகோதரர் பரேஷ் சேட், கார்கர் தமிழ்சங்க தலைவர் செல்லப்பா, செயலாளர் ராமர்சிங்கம், கலம்பொலி தமிழ்சங்க தலைவர் மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தயிர்பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.
நியூபன்வெல்
நவிமும்பை நியூபன்வெல் யாதவர் சங்கம் சார்பில் ஆந்திர சமிதி அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. சங்க தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பன்வெல் தமிழ்ச்சங்க தலைவர் தங்கராஜ், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லட்சுமண், ஆலோசகர் ரவிபிள்ளை, இசக்கி, அருணாச்சலம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலம்பொலி
நவிமும்பை காமோட்டே மற்றும் கலம்பொலி யாதவர் சங்கம் இணைந்து காமோட்டே செக்டர்-7 சீத்தல் அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் குமார், சங்கமுத்து, மூர்த்தி, லட்சுமணன், மாசானம், ரமேஷ், எம்.எஸ்.மணி, கே.சாமி, அர்ச்சுனன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முல்லுண்ட்
மும்பை முல்லுண்ட் யாதவ் சங்கம் சார்பில் தானே ஸ்ரீநகர் ஸ்ரீமங்கள் காரியாலா அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், முல்லுண்ட் யாதவ சங்க தலைவர் எஸ்.இ.முத்து முன்னிலை வகித்தார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் முத்து, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் பாலமுருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கோவண்டி
மும்பை கோவண்டி யாதவர் சங்கம் சார்பில் சிவாஜி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சங்கத்தின் சார்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் எஸ்.இ.தாஸ், பொறுப்பாளர் இ.எஸ்.முத்து தலைமையில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி
மும்பை யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சங்கர் யாதவ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மந்திரி வர்ஷா கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
சுவாமி யாதவ், மாடசாமி யாதவ், சிவசுப்பிரமணியன் யாதவ், சுப்ரமணி யாதவ், ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் இ.முருகன் யாதவ் நன்றி கூறினார். சிறப்பு பூஜையில் ஐந்துமலை ஐயப்பா டிரஸ்ட் முருகேஷ் குருசாமி தலைமையிலான குழுவினர் பஜனை பாடல்கள் பாடினார்கள்.
செம்பூர்
செம்பூர் யாதவர் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பையா யாதவ் தலைமை தாங்கினார். இரவு 7 மணி முதல் 12 மணி வரை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தானே மாவட்டம் மிரா ரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
0 comments:
Post a Comment