"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, March 24, 2015

மதுரையில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி தலைவர் வற்புறுத்தல்

கோகுல மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் N.சரவணன் தலைமை தாங்கினார் S.P.கோனார், M.M.ஸ்ரீதர்,ராஜீகோபிநாத்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் V.C.காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் M.V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போழுது மதுரையில் சுதந்திரபோராட்ட வீரன் அழகுமுத்துகோன் சிலை வைக்க இடம் ஓதுக்கி தரவேண்டும். என்றும் மேலும் அண்ணாரின் வாழ்க்கை வரலாரை பாடபுத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் கூரினார்.
மேலும் விவசாயிக்களின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை 
கையக்ப்படுத்த கூடாது, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூரினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதசார அடிப்படையில் இடஓதுக்கிடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார். 

மேகதாத்தில் அனைகட்டிட


துடிக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பு வழங்க்கிட வேண்டும் என மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதயாமான யாதவ சமுதயத்தினரை நீதிபதியாகவும், தேர்வாணைகுழு உறுப்பினராக யாதவரை நியமிக்த்திட வேண்டும் என்றும் மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

திருவள்ளுர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட சாலைகளை உடனடியாக சீர்மைத்திட போர்கால அடுப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுருத்தி பேசினார்...
மேலும் கொள்கைபரப்பு செயலாளர் L.V.ஆதவன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
T.P.முர்த்தி மாவட்ட இளைஞரணி நன்றியுரை வழங்கினார்.

நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்".


உறவுகளுக்கு, வணக்கம்.

நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்".

போற்றுதல்குறிய கல்லூரி உறுப்பினர்கள், சமுக பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

நன்றி !!!

முடிந்தளவு அனைவருக்கும் (SHARE)தெரியப்படுத்தவும் !!!

சமுக பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.

Tuesday, March 17, 2015

யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை

அன்புகொண்ட யாதவ சொந்தங்களே, 

உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூக அடித்தளமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தரும். இன்று யாதவர்களின் எண்ணிக்கை குறித்த பல செய்திகளை / அரசு கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை தவிர்த்து நேரடியான புள்ளி விபரங்களை சேகரித்து வெளிப்படுத்துவதின் மூலம் நமக்கான விகிதாசார உரிமையை அனைத்து தளங்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோகுலம் அறக்கட்டளை எந்த வித அரசியல் பின்னனியில் இயங்காது அமைப்பு மற்றும் இயக்கத்துடன் செயல்படும் தியாகி அய்யா அழகுமுத்துக்கோன் தியாகம் ,வீரம், செயல்பாடுகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நினைவிடம் நாம் அவருக்கு செலுத்தும் நன்றிகடனா?. எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடல் தாண்டி வேலை செய்யும் யாதவர்கள், தமிழகம் முழுதும் உள்ள இளைஞர்களையும் ஒன்றினைத்து நினைவு தூன் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐயா சுபாஷ் யாதவ் உதவிடன் நினைவுதூன் அமைப்போம் இதில் வேறுபாடு வேண்டாம் அனைவரும் யாதவம் செய்வோம் என் மேல் உங்களுக்கு கோபம் என்றால் அதை பிறகு பார்போம் இப்பொழுது நம் அனைவரும்ஒன்று படுவோம் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்தை மையப்படுத்தி அறிவுசார் தளத்தை உருவாக்கவும் அதன் வழிகாட்டுதலின் படி செயல்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுதியான, திடமான, நேர்மையான, தொடர்ச்சியான செயல்பாட்டில் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதில் கோகுலம் அறக்கட்டளை தொடர்ந்து பயனிக்கும் இயன்றதை செய்வோம் நம் இனத்திற்குசெய்வோம் 

என்றும் சமூக உணர்வுடன்
 ஜெ மூர்த்தி யாதவன் 
கோகுலம் அறக்கட்டளை 
00968-91614631 
gokulamarakkattalai@gmail.com

Saturday, March 14, 2015

பாலை திரைப்படம் (2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய தமிழ் ஆயர்களின் வரலாறு)


கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும்
கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.

உரையாடல் 

விருத்திரனின் தலைவி - புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார். அதில் என்ன குத்தத்த கண்டீங்க.


பாலை முதுவன் - என் பெயர் வெறும் முதுவன் அல்ல. பாலை முதுவன். பாலை முதுவன். ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன். நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று கற்பு மணம் பூண்டு பிள்ளையை பெற்ற போது இதே முல்லை நிலத்தில் பாலை வந்தது. பாலை வந்தது.

வெப்பம் சுட்டெறிச்சுது. புல் பூண்டுகள் கருகிப் போச்சு. ஆநிரைகள் நாவிழந்து மடிஞ்சி போச்சு. என்ற புள்ளைங்க பாலுக்கு ஏங்கி அழும். அவ தாய் முலவத்தி சுருண்டு கிடக்கும். என்ற புள்ள அவ தாய் முலய போயி சவச்சுப் பாப்பான். அங்க ஒன்னும் வராது. ஒன்னும் வராது.

குடிக்க நீரில்ல. மக்கள் மாண்டு விழுந்துச்சு. ஒருநாள் என்ற பிள்ளை வீதிக்கு ஓடி வந்து மண்ணத் தின்னான். நாங்க ஓடிப் போயி பாக்கேயில வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். என்ற மூத்த புள்ள வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். மண் தின்னு செத்தான் என் மூத்த பிள்ள. அது தான் மக்களே பாலை. அதுதான் மக்களே பாலை.


நானும் துவண்டு போகல. ஆநிரை மேய்த்த ஆயன் ஆரலைக் கள்வனானேன். பாலை மறவன் ஆனேன். ஒரு வண்டியும் விடல. மறிச்சேன். பறிச்சேன். குடிகளுக்கு கொடுத்தேன். மறு மழை வர ஏழு ஆண்டுகள் ஆச்சு. அதுவர பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். விருத்திரனும் தான்
குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும். முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும். மருத நிலத்தில் உழவு செய்யனும். நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும். பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும்.

முன்கதைச் சுருக்கம்

மேற்கொடுத்த காட்சிக்கு பிறகு முல்லைக் கொடி மக்களுக்கு பாலை முதுவன் பயிற்சி அளித்து விருத்திரனின் கீழ் மூன்று வீரர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் ஆய்க்குடி வந்தேறிகளின் ஆநிரை அனைத்தையும் கவர்ந்து வந்தேறிகளிடம் நீங்கள் வலனை ஒப்படைத்தால் தான் நாங்கள் ஆநிரைகளை மீண்டும் தருவோம் என்று எச்சரித்து அடித்து விரட்டுகின்றனர். பின்னர் சங்ககால மக்களுக்கு ஊரிய கல்வெறியாட்டத்தை மற்ற மூன்று வீரர்களும் ஆடிக்கொண்டு இருக்கையில் முல்லைக் கொடி தலைவன் விருத்திரன் மட்டும் அமைதியாக எதையோ யோசித்த படி அமர்ந்திருக்கிறான். தன் வீரர்களுக்கு நமது தாய் நிலமான ஆய்க்குடியை எவ்வாறு இழந்தோம் எனவும் வந்தேறிகளை விட அக்காலத்தில் ஆய்க்குடியின் பூர்வ மக்களான முல்லைக்கொடி மக்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்த போதும் எவ்வாறு ஆய்க்குடியை வந்தேறிகளிடம் இழந்தோம் என்பதையும் உணர்த்த நினைக்கிறார் விருத்திரன். அப்போது தலைவன் விருத்திரனுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் உரையாடல் தான் பின் வருவது.

உரையாடல்

விருத்திரன் - அரிமாவன் என்றால் என்ன? (வந்தேரிகளின் தலைவன் அரிமாவன். அவர்களின் கொடி சிங்கம்)

முதல் வீரன் - சிங்க ஏறு போன்றவனோ? (ஏளனமாகச் சிரிக்கிறான்) சரியோ?

விருத்திரன் - அவன் சிங்கம் என்றால் நாம் யார்?

இரண்டாம் வீரன் - நாமெல்லாம் புலி (ஆய்க்குடியின் பூர்விக குடிகளும் தற்போதைய முல்லைக் கொடி வாசிகளுமான பூர்விக மக்களின் கொடி புலி.)

விருத்திரன் - புலி தான் சிங்கத்தை எதிர்க்கும். சரியோ?

வீரர்கள் - ஆம் சரி.

விருத்திரன் - முடிவில் வெற்றி யாருக்கு கிடைக்கும். சிங்கத்துக்கா? புலிக்கா?

வீரர்கள் - புலிக்கு.



விருத்திரன் - சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல. அது எங்கிருந்தோ வந்தது. ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம். புலி... இங்க புறந்தது தான். ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம். அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி.
ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது. கூட்டமா தான் வாழும். நிறைய இறை வேனும். பசி பொறுக்காது.

புலி துன்பங்கள் தாங்கும். தனியா வேட்டையாடும். பசி பொறுக்கும். ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும். இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும்.
வீரர்கள் - தலைவன் கூற வருவதை உணர்ந்தது போல் சிரிக்கின்றனர்.

விருத்திரன் - நீ புலி என்றால் தனிச்சும் போர் செய்யனும். எதிரி கூட்டமாத்தான் வருவான். நாம தனித்து நிக்கனும். ஆளு இருந்தாலும் அடிக்கனும். இல்லனாலும் அடிக்கனும். எதிரி பலத்தோட வந்தால் பதுங்கு. எத்தன காலமானாலும் பதுங்கியே இரு. அவன் என்னக்காவது சோர்வடையும் போது ஒரே அடியில வீழ்த்து.
நான் போர்ல காணாம போயிட்டாலோ செத்துப் போயிட்டாலோ தலைவன் எங்க இருக்கான் தலைவன் எங்க இருக்கான்னு என்னத் தேடாத. எதிரி எங்க இருக்கான் எதிரி எங்க இருக்கான்னு அவனத் தேடு. இதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நீ புலி.


Friday, March 13, 2015

இறைவனை கண்டு சொன்ன இடையன்

வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. 

பரசுராமனால் இங்கு வந்த சிவன்:
 ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ ஒருகாரணத்தால் தன் மனைவியின் மேல் கோபம் கொண்டார் ஜமதக்னி முனிவர். தன் மகனை அழைத்து, “நீ உன் தாயின் தலையை வெட்டி எடு.” என்றார். ஒருபக்கம் தாயின் பாசம் மறுபக்கம் தந்தையின் கட்டளை. என்ன செய்வது என்று தெரியவில்லை பரசுராமனுக்கு. “தந்தையே நீங்கள் கூறியதுபோல் என் தாய் ரேணுகாவை கொன்றுவிடுகிறேன். 

ஆனால் மீண்டும் என் தாயை நீங்கள் உயிர்பித்து தரவேண்டும்.” என்றார் பரசுராமர். முனிவரும் தன் மகனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தார். மகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டார். அதன்படி பரசுராமர் தன்தாயின் தலையை வெட்டினார். பரசுராமர் தன் மகனுக்கு தந்த வாக்குறுதிக்கேற்ப இறந்துகிடந்த ரேணுகாவுக்கு உயிர் தந்தார் ஜமதக்னி முனிவர். ஆனால் முதலில் தாயின் உயிரை எடுத்ததால் பரசுராமருக்கு பிரம்ஹத்தி தோஷம் பிடித்துக்கொள்கிறது. அதில் இருந்துவிடுபட என்ன செய்யவேண்டும்? என்று தன் தந்தையிடம் கேட்டார். “என் மனைவியும் உன் தாயுமான ரேணுகாவின் மீது அர்த்தமற்ற என் கோபத்தால் அவளை கொல்ல சொன்னதால் எனக்கும் பாவமும் தோஷமும் பிடித்து கொண்டது. ஆகவே நாம் இருவரும் பாவ-தோஷத்திலிருந்து விடுபட சிவபெருமானை நினைத்து தவம் செய்ய வேண்டும்.” என்ற கூறி திருநின்றியூருக்கு தந்தையும் மகனும் வந்தார்கள். அங்கு பரசுராமர் ஒரு சிவலிங்கத்தையும், ஜமதக்னி முனிவர் இன்னொரு சிவலிங்கத்தையும் உருவாக்கி அதை பூஜித்து வந்தார்கள். இவர்களின் அன்பான பக்தியை ஏற்ற சிவபெருமான், பரசுராமர் உருவாக்கி பூஜித்த லிங்கத்தில் காட்சி கொடுத்து பரசுராமரின் தோஷத்தை போக்கினார். அந்த சிவலிங்கத்தின் பெயர் பரசுராமலிங்கம். ஜமதக்னி முனிவர் வழிபட்டலிங்கத்திற்கு ஜமதக்னீஸ்வரர் என்று பெயர். 

சிவபெருமான், சிறிய பாண வடிவில் காட்சி தந்து அவரின் பாவத்தையும் போக்கினார். பின்னொரு சமயம் ஸ்ரீமகாலஷ்மி சிவபெருமானை வேண்டி தவம் செய்து வரங்களை பெற்றார். சிவனிடம் வரத்தை பெற்றதால் மகிழ்ச்சியடைந்த மகாலஷ்மி, தன் அண்ணனான சிவபெருமானை எப்போதும் தரிசித்து கொண்டே இருக்க அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தன் மனைவியான ஸ்ரீமகாலஷ்மியை பிரிய விரும்பாத ஸ்ரீமகாவிஷ்ணுவும் இங்கு வந்து விட்டார். திருமகள் இவ்வூரில் தங்கிவிட்டால் “திரு” என்று ஊரின் முதல் எழுத்து உருவானது. இறைவனான சிவபெருமானுக்கு மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் உண்டானது. 

 கோவில் உருவான கதை:
 சிலந்தியும் யானையும் சண்டையிட்டுக்கொண்டு ஒருகட்டத்தில் சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து யானையை கொன்றாது இப்படி பாவகாரியம் செய்ததால் சிலந்தி மீண்டும் ஒரு பிறவி எடுத்தது. அந்த சிலந்தியே சோழ மன்னரான சுபவேதர்-கமலாவதியின் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்து கோச்செங்கட்சோழன் என்ற பெயரை பெற்றார். முன்ஜென்ம பகையின் காரணமாக யானை நுழைய முடியாத கோயில்களை கட்டியவர் என்று பெயர் பெற்றவர் இவர்.ஒரு சமயம் கோச்செங்கட்சோழன்,இரவு நேரத்தில் மாறுவேடத்தில் தன்நாட்டை சுற்றிப் பார்த்தார். இப்படி போகும் போது ஒரு காட்டுபகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த காட்டு பகுதிக்கு செல்லும் போது காவலர் கையில் இருக்கும் தீவட்டி அணைந்து விடும். மீண்டும் பல முறை எரிக்க முயற்சித்தாலும் அந்த தீவட்டி எரியாது. பிறகு காட்டின் உள்ளே செல்ல செல்ல காட்டின் நடுவழியில் தானாகவே தீவட்டி பிரகாசமாக எரிய ஆரம்பிக்கும். இதுபோல் ஒருமுறை மட்டுமல்ல, பல தடவை இப்படியே நடப்பதால் இந்த காட்டு பகுதியில் ஏதோ ஒரு தெய்வசக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தார் கோச்செங்கட்சோழன். இது தெய்வசக்தியா? அல்லது தீயசக்தியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது அரசருக்கு. அந்தகாட்டு பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த ஒரு இடையனிடம், “அந்த காட்டுபகுதியில் ஏதோ சக்தி இருக்கிறது. அது நல்லசக்தியா? தீயசக்தியா? என்பதை அறிந்து சொல். காரணம் பசுவின் கண்களுக்கு தீயசக்தி தெரிந்தால் மீண்டும் அந்த இடத்திற்குள் பசு நுழையாது என்கிறது சாஸ்திரம்” என்றார் அரசர் கோச்செங்கட்சோழன் . ஏதோ தெய்வசக்தி-தீயசக்தி என்கிறாரே அரசர் என்று பயந்துபோன இடையன், தன் துணைக்கு அரண்மனை காவலர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தினமும் சென்று வந்தான். அங்கு நடந்த அதிசயத்தை வந்து அரசருக்கு விவரித்தான். “அரசே இந்த இடத்தில் தெய்வசக்திதான் நிறைந்து இருக்கிறது. என் பசுமாடு தினமும் ஒர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தாமாகவே பால் சொரிகிறது” என்றான். அவன் சொல்வது உண்மைதான் என்றார்கள் அரண்மனை காவலர்கள். உடனே அரசரே இடையன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தார். ஒரு இடத்தில் அரசரின் கால்தடுமாறி விழுந்தார். “இந்த இடத்தை தோண்டுங்கள்.” என்று உத்தரவிட்டார் கோச்செங்கட்சோழன்.பலமாக அந்த இடத்தை கோடாரியால் தோண்டியபோது அந்த இடத்தில் இருந்து ரத்தம் வெளியே வந்தது. இதைகண்ட அரசர் திடுக்கிட்டார். இருந்தாலும் சிவபக்தரான மன்னர் கோச்செங்கட்சோழன், சிவபெருமானை வேண்டி தைரியமாக தன் வெறும் கைகளாலேயே அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அப்போது ஒரு சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது. “ஓம் நமசிவாய” என்று ஆனந்த கண்ணீருடன் தந்த சுயம்பு லிங்கத்தை கட்டி தழுவினார் அரசர். அது ஒரு காட்டுபகுதியாக இருந்தாலும் இறைவனுக்காக அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். இன்றுவரை மூலவர் சுயம்புலிங்கத்தின் மீது கோடாரிபட்ட வெட்டு பள்ளமாக சிவலிங்கத்தில் இருக்கிறது. 

இந்த கோயிலில் என்ன பரிகார சிறப்பு? 
இந்த ஆலயத்தில் உள்ள நவகிரக சந்நிதியில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்ப்பதாகவும், அதனால் இங்கு வந்து அவர்களை வணங்கினால் பித்துருதோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். “மகாலட்சுமிபுரீஸ்வரரையும் அன்னை உலகநாயகியையும் வணங்கினால் சகல தோஷங்களும் விலகும். ஸ்ரீமகாலஷமி தவம் செய்த இடமான இந்த இடத்தில் வந்து வணங்கினால் அஷ்டஐஸ்வர்யங்கள் பரிபூரணமாக கிடைக்கும். இதைதான் திருஞானசம்பந்தரும் சொல்லி இருக்கிறார். இந்த திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயம், பாவம், நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்.

Reference :http://bhakthiplanet.com/2011/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-2/

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar