கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.
உரையாடல்
குடிக்க நீரில்ல. மக்கள் மாண்டு விழுந்துச்சு. ஒருநாள் என்ற பிள்ளை வீதிக்கு ஓடி வந்து மண்ணத் தின்னான். நாங்க ஓடிப் போயி பாக்கேயில வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். என்ற மூத்த புள்ள வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். மண் தின்னு செத்தான் என் மூத்த பிள்ள. அது தான் மக்களே பாலை. அதுதான் மக்களே பாலை.முன்கதைச் சுருக்கம்
மேற்கொடுத்த காட்சிக்கு பிறகு முல்லைக் கொடி மக்களுக்கு பாலை முதுவன் பயிற்சி அளித்து விருத்திரனின் கீழ் மூன்று வீரர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் ஆய்க்குடி வந்தேறிகளின் ஆநிரை அனைத்தையும் கவர்ந்து வந்தேறிகளிடம் நீங்கள் வலனை ஒப்படைத்தால் தான் நாங்கள் ஆநிரைகளை மீண்டும் தருவோம் என்று எச்சரித்து அடித்து விரட்டுகின்றனர். பின்னர் சங்ககால மக்களுக்கு ஊரிய கல்வெறியாட்டத்தை மற்ற மூன்று வீரர்களும் ஆடிக்கொண்டு இருக்கையில் முல்லைக் கொடி தலைவன் விருத்திரன் மட்டும் அமைதியாக எதையோ யோசித்த படி அமர்ந்திருக்கிறான். தன் வீரர்களுக்கு நமது தாய் நிலமான ஆய்க்குடியை எவ்வாறு இழந்தோம் எனவும் வந்தேறிகளை விட அக்காலத்தில் ஆய்க்குடியின் பூர்வ மக்களான முல்லைக்கொடி மக்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்த போதும் எவ்வாறு ஆய்க்குடியை வந்தேறிகளிடம் இழந்தோம் என்பதையும் உணர்த்த நினைக்கிறார் விருத்திரன். அப்போது தலைவன் விருத்திரனுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் உரையாடல் தான் பின் வருவது.உரையாடல்
- விருத்திரன் - அரிமாவன் என்றால் என்ன? (வந்தேரிகளின் தலைவன் அரிமாவன். அவர்களின் கொடி சிங்கம்)
விருத்திரன் - சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல. அது எங்கிருந்தோ வந்தது. ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம். புலி... இங்க புறந்தது தான். ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம். அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி.
ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது. கூட்டமா தான் வாழும். நிறைய இறை வேனும். பசி பொறுக்காது.
புலி துன்பங்கள் தாங்கும். தனியா வேட்டையாடும். பசி பொறுக்கும். ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும். இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும்.



+91-7200671482


0 comments:
Post a Comment