Monday, March 9, 2015
Home »
» முத்துப்பேட்டை தர்காவும் கருப்பையா கோனரும்
முத்துப்பேட்டை தர்காவும் கருப்பையா கோனரும்
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட்டை ஜாம்புவனோடையில்முல்லைநில தரிசு நிலத்தில் ஆயர் குலப்பெரியார் கருப்பையா கோனார் என்பவர் தனது ஆட்களுடன் சென்றுஏர்பூட்டி உழத் தொடங்கினார். அப்போது ஏரின் கொழுமுனை கீறிய ஓரிடத்தில் இருந்து இரத்தம் பீரிட்டடித்தது.அதே நேரம் கோனாரின் இரு கண்களும் ஒளி மங்கி பார்வை இழந்தன. அச்சத்தில் கை கால் நடுங்கிபுலம்பியவராக உழவை நிறுத்திவிட்டு கோனார் தம் இல்லம் சென்று படுத்துவிட்டார். அன்றிரவு அவர் கனவில்அரபிகளின் தோற்றமுடைய பெரியார் ஒருவர் தோன்றினார்கள்.
கோனாரை விளித்து கருப்பையா ! நீ ஏர் உழுத நிலத்தில் வெகு காலத்திற்கு முன் நான் அடக்கமாகி இருக்கிறேன். என் பெயர் ஷெய்கு தாவூது ஆகும். உன் பார்வையைப் பற்றி நீ கவலைப்படாமல் உடன் எழுந்து.ஆறுகல் அருகிலுள்ள நாச்சிகுளத்துக்கு சென்று அங்கு வசிக்கும் கபீர்கான். ஹமீத்கான் என்ற இரு
தவசீலர்களிடம் நடந்தவைகளைக் கூறு ! என்றார்கள். கோனார் விழித்தெழுந்தும் தன் இரு கண்களிலும் பார்வை. வந்துவிட்டதை உணர்ந்தார். உடன் அவர் எழுந்து நாச்சிகுளம் போய் சேர்ந்தார். அவர் அங்கு செல்லும் முன்பே தவசீலர்கள் இருவரின் கனவிலும் ஆண்டகை அவர்கள் தோன்றி ஆயர் வருவதுபற்றி அறிவுறுத்தி இருந்தார்கள் கோனார் கொண்டு வந்த நற்செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த தவசீலர்கள் விரைந்து வந்து மேற்படி நிலத்தை வந்தடைந்தபோது அங்கு இரத்தம் பீரிட்டு அடித்த இடத்தில் மல்லிகை கொடி வளர்ந்து மலர்கள் சொரிந்திருப்பதைப் பார்த்து குறிப்பிடப்பட்ட இடத்தில் கபர்ஷரிஃப் ஒன்றை எழுப்பினார்கள். முத்துப்பேட்டையிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு பெருந்திலராக வந்து கூடி தரிசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கபர் ஷரீஃபை சுற்றியுள்ள தனக்கு சொந்தமான ஐந்தரை வேளி நிலத்தையும் கோனார் அண்ணல் ஷெய்கு தாவூது ஆண்டகை பெயரால் இனாம் சாசனம் எழுதிவைத்தவிட்டார்.
அதன் பின் ஆண்டகை அவர்களின் தரிசனத்துக்காக வெளியூரிலிருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வரவே
எஜமான் அவர்களின் அடக்கஸலத்தில் மஜார் ஷரீஃபொன்று கட்டப்பட வேண்டுமென்று மக்கள் முடிவெடுத்தனர்.சிற்பிகளையும் கட்டிட தொழில் நிபுணர்களையும் வரவழைத்தனர்.எழுபத்தெழு முழு நீளத்திலும் இருபத்தொன்பது முழு அகளத்திலும் எட்டு முழு உயரத்திலும் நாற்புமும் சுவர்எழுப்பப்பட்டது. அதற்குமேல் முட்டை வடிவத்திலும் 15 வளைவு மண்டபங்கள் உயர்த்தப்பட்டன. மல்லிகைபுஷ்பங்கள் பொலிந்து கிடந்த அடையாள இடத்தில் கபுர்ஷரீஃப் கட்டப்பட்டு அதன் தலைமாட்டில் ஓரு குமுசும்கால்மாட்டில்ஒரு குமுசும் கட்டப்பட்டது தர்காவின் இந்த அமைப்பு பூர்த்தி செய்யப்பட்டு ஆயிரம் ஆண்டுகள்ஆகின்றன.
Reference :http://www.muthupetdargha.com/History11.aspx
0 comments:
Post a Comment