"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, March 9, 2015

தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பாக யாதவர்களை MBC.யில் சேர்க்க கோரி மதுரையில் ரயில் மறியல்(9-03-2015)

மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போ லீசார் கைது செய்தனர். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் நேற்று நடந்த போராட்டத்துக்கு யாதவர் சங்கத் தலைவர் சரசுமுத்து தலைமை வகித்தார். மாநில வக்கீல் அணி தலைவர் சங்கராஜித், மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், தென் மண்டல அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஆடு வளர்ப்போர் உரிமையாளர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை மீறி ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். இதையடுத்து, 55 பேரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






இதில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை சார்பில் 20 நபர்கள் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar