"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, February 18, 2016

தேர்தல் ஆணையத்திடம் சைக்கிள் சின்னம் கேட்டு சமாஜ்வாடி கட்சி கடிதம்: தமிழக தலைவர் தகவல்

சமாஜ்வாடி கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி கொள்கை, கோட்பாடுகளுக்கு உட்பட்டு கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்றும் தகுந்த கூட்டணி அமையாத பட்சத்தில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 100 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்று தமிழக தலைவர் இளங்கோ யாதவ் முடிவு செய்துள்ளார்.

போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் 22–ந்தேதி முதல் 10 நாட்கள் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் பெறப்படும். சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தில் அகில இந்திய தலைமையின் ஒப்புதலுடன் போட்டியிடுவோம். 


இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கட்சி தலைமை கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது. சைக்கிள் சின்னம் தமிழ்நாட்டில் சமாஜ்வாடி கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்படும். வேறு எந்த தமிழக அரசியல் கட்சிக்கும் ஒதுக்கப்படலாம் என்கிற செய்தி தவறானது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Saturday, February 6, 2016

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம்

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல யாதவர் சங்கத்தின் தலைவர் ராணி ராமகிருஷ்ணன், செயலர் ஏ. ஆவுடையப்பன், யாதவர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே. தங்கவேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "யாதவர் பண்பாட்டுக் கழக பொன்விழாவை ஆகஸ்ட் மாதம் நடத்துவது. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடுவது. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முக்கிய பிரமுகர்கள் அ. முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், காந்திராஜன், வேலுதாஸ், வேல்தாஸ், முத்துசாமி, வெங்கடேஷ், துணைச் செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சுப்பையா வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் நன்றி கூறினார்.

Tuesday, February 2, 2016

10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு யாதவ மகாசபை

தமிழக யாதவ மகாசபையின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில், மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில், யாதவ சமுதாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 80 லட்சம் முதல் ஒரு கோடி யாதவ சமூக வாக்காளர்கள் உள்ளனர்.


நம்முடைய சமூகத்துக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததால் மிகவும் பின் தங்கிய நிலைக்கு யாதவ சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. யாதவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


பிப்ரவரி மாதத்தில் விழுப்புரத்தில் யாதவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாதவர்கள் கலந்து கொள்வர்.


மாநாட்டில் சட்டசபை தேர்தலில் யாதவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்ய உள்ளோம். தமிழகத்தில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில், 10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு, யாதவ மகா சபையின் ஆதரவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, January 30, 2016

உயர்திரு ஸ்ரீ KM சுவாமிஜீ யாதவ் அவர்கள் மும்பையில் நடைபெற்ற தமிழர் நல கூட்டமைப்பு விழாவில் மகாராஷ்டிரா உயர்திரு ஸ்ரீ தேவேந்தர பட்னாவிஸ் அவர்களால் கெளரவிக்கபட்டார்



உயர்திரு ஸ்ரீ KM சுவாமிஜீ யாதவ் அவர்கள் மும்பையில் நடைபெற்ற தமிழர் நல கூட்டமைப்பு மகாராஷ்டிரா விழாவில் 2016 நமது மகாராஷ்டிரா மாநில முதல்வர் உயர்திரு ஸ்ரீ தேவேந்தர பட்னாவிஸ் அவர்களால் அனைத்து மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் சார்பாக கெளரவிக்கபட்டார்

கோகுலம் அறக்கட்டளை சார்பாக கட்டாளங்குலத்தில் குடியரசு தின விழா கொண்டாப்பட்டது


கோகுலம் அறக்கட்டளைஉறவுகள் அனைவருக்கும் வணக்கம் கோகுலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா கொண்டாப்பட்டது இந்த வருடம் கோகுலம் அறக்கட்டளை மகளிர் அணியின் தலைவர் திருமதி சுடலியாதவ் மற்றும் தோழிகள்மாரியாதை செய்தார்கள் நாங்கள் இந்த செயலை கடந்த மூன்று வருடமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டுக்குமே எங்கள் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள் சென்னை மாவீரன் சிலைக்கும் கட்டாளஙகுலம் மணிமண்டபத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது... இதை போல் நமது யாதவ அனைத்து அமைப்பும் இனைந்து செய்தால் நன்றாக இருக்கும்... இது தான் எங்கள் கோகுலம் அறக்கட்டளையின் நோங்கம்.. கண்டிப்பாக வரும் ஆணடில் அனைத்து யாதவ அமைப்பும் வந்து மரியாதை செலுத்தவேண்டும்... என்று கோகுலம் அறக்கட்டளையின் நிறுவுனதலைவர் ஜெ மூர்த்தி யாதவ் தெரிவித்தார்
கோகுலம் அறக்கட்டளை



நன்றி 
மா மோகன் ஜீ யாதவ் 
இணையதள பொறுப்பாளர் 
திரு வெங்கி யாதவ் 
இயக்குனர் 
மற்றும் அனைத்து கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்

யாதவ சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்பில் 10% இட ஒதுக்கீடு கோரி சமாஜ்வாதி கட்சியின் சார்பாக தலைமைச் செயலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவ சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்பில் 10% இட ஒதுக்கீடு கோரி சமாஜ்வாதி கட்சியின் சார்பாக மாநில தலைவர் இளங்கோ யாதவ் தலைமையில் தலைமைச் செயலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 
ஜனவரி 28 2016



Friday, January 29, 2016

மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி யாதவ சங்கம் ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கம்
மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுததப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு செய்து அந்த வேலைவாய்ப்பை முழுமையாக தரவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் யாதவர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar