"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, January 7, 2014

இடையர் இன மக்களின் கோத்திரப் பாகுபாடும் சடங்கு முறையும்

இடையர்
               இடையர் என்பவர் சங்க காலத்தில் ஆயர் என்றழைக்கப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர்,


ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே


என்று முல்லைத் திணைக்குரிய மக்கள் ஆயர், வேட்டுவர் என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் ஆயர் என்று கூறிய மக்களைத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ஆயருடன் சேர்த்து இடையர், கோவலர், பொதுவர் என்றும் கூறியுள்ளார். பெண்பாலில் ஆயமகளிர், ஆய்ச்சியர், இடைச்சியர், கோவித்தியர், பொதுவியர் என்றும் கூறியுள்ளார்.

இடையர் பெயர்க்காரணம்:
                 முல்லை நிலத்திற்குரிய மக்கள் ஆயர் எனப்பெற்றனர். இவர்களின் முக்கியத் தொழில் ஆனிரைகளைப் பேணிக்காத்தல். அவற்றில் பெறப்படும் பொருள்களை பிற நிலங்களில் கொண்டு விற்றல். மேற்கூறிய தொல்காப்பிய உரையின் மூலம் ஆயர் என்பவரே இடையர் என்பது திண்ணமாயிற்று.
சங்க இலக்கியத் திறனாய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் இடையர் எனும் சொல்லாட்சிப் பற்றிப் பலவாறான விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக,

கிடை என்றால் கால்நடைக் கூட்டம் என்று பொருள். அதற்கு உரியவர் என்ற பொருளில் கிடையர் என அழைக்கப்பெற்று நாளடைவில் அது இடையர் என்றாயிற்று என்று சி.ஈ. இராமச்சந்திரன் குறிப்பிடுவதாகவும்,
செல்வம், வாழ்க்கை நிலை ஆகியவற்றில் தலையாயவராய் (முதல்வராய், முதலிகளாய்) உள்ளவர்க்கும், நாள்தோறும் உழைத்து வயிறு வளர்க்கும் கடையருக்கும் இடைப்பட்டவரே இடையர் என்று மொ.அ. துரை அரங்கசாமி குறிப்பிடுவதாகவும்,

குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் இடையர் ஆவர் என்று சக்திதாசன் சுப்பிரமணியன் போன்றோர் கூறுவதாக டாக்டர் அ. முத்துசாமி சங்க இலக்கியத்தில் ஆயர் என்ற நூலில் கூறியுள்ளார்.

இடையர் இனமக்களுக்கு வழங்கபெறும் பட்டப்பெயர்கள்:-
                      முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் அழைத்தனர். ஆயர், இடையர் என்றழைக்கப்பெற்ற மக்களுக்குப் பிற்காலத்தில் பல பட்டப்பெயர்கள் வழங்கலாயின. அவையாயின அம்பலகாரர், கரையாளர், கீதாரி, கோன் அல்லது கோனார், சேர்வை, தாஸ், நம்பி, நாயுடு, பிள்ளை, மணியக்காரர், மந்திரி அல்லது மந்தடி, மன்றாடியர், யாதவர், ரெட்டி இவை போன்ற பட்டப்பெயர்கள் இடையர் இன மக்களுக்கு வழங்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது, கீதாரி, கோன் அல்லது கோனார், இடையர், பிள்ளை சேர்வை, யாதவ் போன்ற பட்டப்பெயர்கள் தான் வழக்கில் இருந்து வருகின்றன.

மேற்கூறப்பெற்ற பட்டபெயர்களில் இன்றைக்கு இடையர், கோனார், யாதவர் போன்ற பெயர்கள் மட்டும் பேச்சு வழக்கிலும் சாதி அடிப்படையிலும் காணப்படுகின்றன. இதிலும் சாதிய அடிப்படையில் படித்த, நடுத்தர மக்களிடமும், நகரப்புறங்களில் வாழ்பவர்களின் மத்தியிலும் யாதவர் என்ற பட்டப்பெயரே மேலோங்கியிருக்கின்றது.
இடையர் இன மக்களின் கோத்திரப் பாகுபாடு:-
                           பல வகையான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ள இடையர் இன மக்களுக்கு அவர்களின் பட்டப்பெயர்களின் அடிப்படையிலும், சடங்கு முறைகளின் அடிப்படையிலும், பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் பல கோத்திரங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. அவையாயின, கல்கட்டி இடையர், நார்கட்டி இடையர், பால்கட்டி, பஞ்சாரம் கட்டி, சிவியர், சோழியாடு, சாம்பார், இராமக்காரர், பூச்சுக்காரர், கொக்கிக்கட்டி போன்ற பல கோத்திரப் பெயர்களைக் கொண்டுள்ளனர்.
சடங்குமுறைகள்:-
சடங்கு என்பது மக்களின் வாழ்வில் நிகழும் நிகழ்வைக் குறிப்பதாகும். இந்நிகழ்வானது நிகழ்த்தப்படும் தன்மைக்கு ஏற்றவாறு சடங்கு, விழா தேவை, போன்று வேறுவேறு சொற்களால் குறிக்கப்படுகின்றன. மரபு வழியாகச் செய்யப்படும் செயல்களும் சில சமயங்களில் சடங்கு என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. மரபு வழியாகச் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் சடங்கு முறைகள் அனைத்தும், ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு சமயத்தவருக்கும், ஒவ்வொரு வகையாக அமைகின்றன. இவ்வகையில் பல கோத்திரப்பாகுபாடுகளைக் கொண்டுள்ள இடையர் மக்களின் சடங்கு முறைகள் ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும், ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளன.

நார்கட்டி இடையர்:-
நார்கட்டி இடையர் எனும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், கணவன் இறந்த பின்பு பனை ஓலை அல்லது நாரைத் தன் கழுத்தில் அணிந்து கொள்ளுவர். நாரைக் கழுத்தில் அணியும் வழக்கத்தால் தான் இவர்களுக்கு நார் கட்டி இடையர் என்ற பெயர் கோத்திரப் பெயராக வழங்கலாயிற்று. இவர்கள் தங்கள் கோத்திரத்திற்குள் மட்டுமே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற நிலை ஆரம்பகாலங்களில் காணப்பெற்றது. ஆனால் தற்பொழுது பிற கோத்திரத்திற்குள்ளும் எடுப்பு, கொடுப்பு முறைகள் காணப்படுகின்றன. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அரசாணி போன்ற சடங்குகள் நடைபெறும்.

கல்கட்டி இடையர்:-
கல்கட்டி இடையர் எனும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், திருமணத்தின் போது தாலியுடன் சேர்த்து கல்மணி பாசியை அணிந்து கொள்வர். இவ்வகை கோத்திரத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் கோத்திரத்திலேயே பெண்ணெடுத்தல், கொடுத்தல் முறையினைப் பின்பற்றுவர். இக்கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் மூக்குத்தி அணிந்துகொள்ளும் வழக்கமுடையவர்கள். இவர்களின் சடங்கு முறைகள் நார்க்கட்டி இடையரிலிருந்து சில வேறுபாடுகளுடன் காணப்படும்.

சிவியர் இடையர்:-
இடையரின் மக்கள் முல்லை நிலக் கடவுளாகிய திருமாலை வழிபடக் கூடியவர்கள். திருமாலுக்கு மிகவும் பிடித்தமான பால், நெய் முதலியவற்றை விற்றல் சிவியர் என்னும் கோத்திரத்தினரின் முக்கியத் தொழில். அதிலும் மேலானது இறைவனின் பல்லக்கைத் தாங்கிச் செல்பவர்களும் இக்கோத்திரத்தைச் சார்ந்த குடும்ப மக்கள் தான். இவர் நெற்றியில் நாமம் அணிந்து கொள்வர். இறைவனைத் தூக்கிச் செல்லும்போதும் விழாக்காலங்களிலும் புத்தாடை அணிந்து கொள்வர். சிவியர் கோத்திரத்தில் மட்டும் தான் பெண் எடுத்தல், கொடுத்தல் நிகழும், பிற கோத்திரத்தில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டார்கள்.

இராமக்கார இடையர் (நாமம்):-
இராமக்கார இடையர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், எப்பொழுதும் நெற்றியில் ராமம் அணிந்து கொள்வர். புரட்டாசி மாத விரதம் மேற்கொள்வர். நண்டு உட்கொள்ள மாட்டார்கள். சனிக்கிழமை விரதம் மேற்கொள்வர். இவர்களும் தங்கள் கோத்திரத்திற்குள்ளேயே எடுத்தல், கொடுத்தல் வைத்துக்கொள்வர். ஆனால் இப்பொழுது பிற கோத்திரத்திலும் பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் முறையானது வழக்கில் இருந்து வருகிறது.
இவ்வாறு இடையர் மக்களின் கோத்திரச் சடங்கு முறைகள் பலவாறாக அமைந்துள்ளன

Related Posts:

  • Chief Minister of yadava Community 1.      Chaudhary Brahm Prakash Yadav First CM of Delhi 2.      Praffula Chandra Ghosh First CM of West Bengal 3.      Bindheshwari Pra… Read More
  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற… Read More
  • ಅಖಿಲೇಶ್ ಯಾದವ್ ರಾಷ್ಟ್ರದ ಅತಿ ದೊಡ್ಡ ರಾಜ್ಯವಾದ 'ಉತ್ತರ ಪ್ರದೇಶ'ದ ವಿಧಾನ ಸಭಾ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ 'ಸಮಾಜವಾದಿ ಪಕ್ಷ' ಕ್ಕೆ 'ಪವಾಡ ಸದೃಶ ಗೆಲವ'ನ್ನು ದೊರಕಿಸುವ ಮೂಲಕ, ೩೮ ವರ್ಷ ಪ್ರಾಯದ 'ಅತಿ ಚಿಕ್ಕ ವಯಸ್ಸಿನ ರಾಜಕಾರಣಿ', ಅಖಿಲೇಶ್ ಸಿಂಗ್ ಯಾದವ್ ರವರು, 'ರಾಜ್ಯದ ಮುಖ್ಯ ಮಂತ್ರಿಯ ಪದವಿ… Read More
  • பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர்… Read More
  • అఖిలేష్ యాదవ్ అఖిలేష్ యాదవ్, సమాజ్వాది పార్టీ సభ్యుడు భారతీయ రాజకీయ నాయకుడు మరియు మార్చి 2012 నాటికి ఉత్తర ప్రదేశ్, భారతదేశం యొక్క రాష్ట్ర ముఖ్యమంత్రి కార్యాలయం కలిగి అతి పిన్న ఉంది  అఖిలేష్ యాదవ్    ప్రారంభ జీవితం మరియ… Read More

14 comments:

  1. ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார், பிள்ளை,கரையாளர்,சேர்வை,கிதாரி,என பல பட்டங்கள் இருந்தாலும் நம் வரலாறு முழுக்க ஆய் வேளிர் அண்டிரான் என்பதாகவே உள்ளது இடையர் என்பதும் உள்ளது இதில் நம் சமுதாய மக்களின் அடையாளம் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் யாதவ்,யாதவர் எதற்கு ?வடவர் போடும் இந்த பட்டத்தை விட நம் முன்னோர்கள் கோன் மேற்சொன்ன பல பட்டங்கள் உள்ளதே..சமுதாயகமாக ஆய்,ஆயர், இடையர் என்பதே வரலாறு தொட்டு நமக்கும் நம் வருங்கால சந்ததிகளும் சிறப்பு.,எம்மை விட அரசியல் புரிதல் அதன் எதிர்கால விளைவு,குழப்பம் அறிந்தவர் என அறிவேன்..,தங்களிடம் வேண்டி கேட்பது நம் சமுதாய மக்களின் அடையாளம் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் யாதவ்,யாதவர் தவிர்த்து நமது முன்னோர்களுக்கும் வரும் தலைமுறைக்கும் உதவி புரிவீராக..,நமது உண்மை அடையாளத்தை பெறுவோமாக தமிழ் வரலாற்றில் இருந்து நம்மை நீக்க பிறர் செய்யும் சதிக்கு நாமே இடம் தராது நம் முன்னோர்களின் பெருமையை நிலைநாட்ட வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. யாதவ் என்கிற வார்த்தை நம் அடையாளத்தை அழிக்கிறதா?எப்படி? "மா " என்றால் கரு நீல பச்சை என்று தமிழ் பொருள்படும், அதனால்தான் அந்த நிற காய்க்கு "மாங்காய் " என்று பெயர் வந்தது, தொல்காப்பியர் கூறிய முல்லை நிலத்து தெய்வம் " மால்" எனும் "மா"யோன் என்பவர், கருநீல பச்சை நிறத்தவன் என்பது இதன் மூலம் புரிகிறதா? பச்சையப்பன், பச்சைமால் என்பது எல்லாமே கண்ணன் எனும் மாலையே குறிக்கும் என்பது இப்பொழுது புரிகிறதா? அவனது தொழில் பசுக்களை ஆநிரைகளை மேய்த்து, காத்து,பால், வெண்ணெய், நெய் உண்டு வாழ்வதே?
      அவ்வாறே? வாடநாட்டு வேணு கோபால கிருஷ்ணனை கூர்ந்து கவனியுங்கள்!

      "கிருஷ்ண" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "கருநீல பச்சை "என்றே பொருள். இன்றும் வீட்டில் நாம் வளர்க்கும் கிருஷ்ண துளசி செடி எந்த நிறத்தில் இருக்கு? கருநீலம் கலந்த பச்சை நிறத்தில் இருப்பதால் தானே அவ்வகை துளசியை நாம் கிருஷ்ண துளசி என்கிறோம்.? பசுவை கிருஷ்ணரிடமிருந்து பிரித்து பார்க்க முடியுமா?பசு இல்லா கிருஷ்ணரது photo வை கூட பார்க்க முடியுமா?
      ஆக வடநாட்டு கிருஷ்ணரும் தென் நாட்டு "மாயோன் எனும் பச்சையப்பனும் ஒன்றே என்பதை உணர்ந்து இந்து மதத்தின் ஆணிவேரான பகவத் கீதை படித்து பரப்புவோம், பாரதம் காப்போம்.

      Delete
    2. Bagavathgeethi is not true it's was not a true story .

      Delete
    3. தமிழ் பெயரே சிறப்பு....
      யாதவ் எல்லாம் தேவையில்லை....

      Delete
  2. யாதவர்களுக்கு பல பல பட்டங்கள் பெயர்கள் இருந்தாலும் தற்பொழுது யாதவர் என்கிற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர்.
    அனைவரும் சாதிச்சான்றிதழில் "யாதவர்"
    என்று தான் குறிப்பிடுகின்றனர்.
    சடங்குகள் சம்பிரதாயங்கள் மாறுபட்டுகிறது என்பது உண்மை.

    JAI YADHAV. JAI MADHAV.

    ReplyDelete
  3. யாதவ்... ?
    சகிக்கலை

    ReplyDelete
  4. சகிகலயா,சகிகலன போடட

    ReplyDelete
  5. பழைய கல்வெட்டுக்கள், தமிழ் இலகியங்களை ஆய்ந்து பார்த்தால் யாதவர், ஆயர், கோனார் எல்லாம் ஒன்று என்பதை அறியலாம்..யாதவ் வட நாட்டு சொல் என்று கூறாதீர்கள் சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி மாதுரி என்ற இடையர் பெண் வீட்டில் தங்கி இருந்தால்...மாதுரி வட இந்தியர் வைக்கும் பெயர்...யாதவர் என்று சொல்வதில் தவறில்லை

    ReplyDelete
    Replies
    1. என்னது மாதுரியா?...புள்ளீங்கோ கூட்டமாலே நீ?

      Delete
    2. Atu epudi Tamil aathi kudi idaiyarla illaya perumai, konar entra padathil illata perumai. yadavan,yafavil kidaikum nama ellorum tamilarkal na sivagangaiyai sarnta Kanagasabapathi konar.....

      Delete
  6. என்னுடைய தனிப்பட்ட...தமிழ் தமிழராய்ச்சியில் சுருக்கமாக....

    1. நம்மவர் செய்து வந்த தொழில்கள் ஆதி தொழில்.
    2. உலகளாவிய தொழில் இயேசு/நபி/காளிதாஸ் முதல் இரத்தமும் குருதியுமாக வாழ்ந்த கருத்தினன்_கிஷ்டன்_கிருஷ்ணர்_கர்ணன் கூட செய்து வந்த தொழில் தானே?.Herdsmen என உலகளாவிய வழியில் நாம் பெயர் வைக்கலாமா?.

    3.செய்யும் தொழில்(ஆடு/மாடு/பால்/நாற்றம்/எண்ணிக்கை)காரணமாக? இருநிலை(முன்னவர்/கடையவர்) மக்களால் ஆதியிலிருந்தே ஒதுக்கப்பட்டு/அல்லது நாகரீகமாக நாமே ஒதுங்கி ஒதுங்கி ஆதி அண்டர்_Under_அந்தர்_நூறு_ஆநிரை_எண்ணிக்கை_அவசியம்_100 கண்ட குடியான நாமே 'இடையர்''ஆயர்''கோனார்' என செய்யும் தொழிலிலே பலவித பிரிவுகள்/பெயர்கள் ஓர்மையாக இன்றைய சேரிகளை திராவிட/கிறித்துவ/இந்துத்துவ/சோசிலிச/கம்யூனிச/தலீத்திய என சேரவிடாதது போலவே அன்றிலிருந்தும் பாதிக்கபட்டு அனைத்து வகையிலும் ஒடுங்கியிருக்கும் சமூகமே நமது.

    4. ஆதி சேரி முறையின்..இன்றுவரை அந்நியரை மற்றவர்களை காட்டிலும் அதிகப்படியாக நாமே அரவணைக்கிறோம் அதே தமிழரின் குணத்தோடு..

    தொழில்/வியாபார/அலுவலக ரீதியாக அனைத்து பொது இடங்களிலும் இடையர் என்று அழைக்கப்படுவதே நமது பாதி தொன்மையையாவது வலியுறுத்தும்!

    இடையர் என்றால் அந்நிய திராவிடமோ/இந்தியமோ நமக்கு கிடைக்கப்பெறுவதை தடுத்துவிடுவார்களோ? தடுத்துக்தான் விட முடியுமா?...

    இதையெல்லாம் பேசாது தேவையற்ற சங்கம்/சபை ஆயிரம் நம்மில்!
    ஆதி_குடி_இடையர் என்பதே சற்று பொருத்தமாக இருக்கும்...

    "குன்றின் குறிஞ்சி கால முதல் சமவெளி மருத காலத்து வழி...கடைச்சாதிகளுக்கு மூத்த 'இடைக்குடி'!
    "வேட்டை பயன்பாடு முதல் உணவு தேவைகளுக்கு வளர்ப்பு கண்டு விவசாய உழைப்பு/சார்பு தேவைவரை என்பதை கண்டறிந்து கடத்தி வந்த இடைச்சாதி...
    சண்டைகளால் என்றுமே இருபக்கம் சேதம் என மனம் வருந்திய ஆயர் கருத்தினன்/கோனார் கர்ணன் வழி இன்றைய இந்தியா neutral_stateக்கு வித்திட்ட இடைச்சாதி!
    கருத்தினன் & கர்ணன் னின் அழிவில் பிறந்த அந்நியர் வரலாறு/பகுத்தறிவுக்கு ஒத்துவராத இழிமகனாக அசிங்கப்படுத்தியது கர்ணனை மட்டுமல்ல...தூது சென்ற கருத்தினனை..பாரம் குறைக்க/சூரிய அஸ்தமனம் என்றெல்லாம் கூறி இவர்கள் முதல் நம்மை வரை அவர்களுக்கு வசதியாக கடத்தி இருபத்தி வைத்து இருக்கிறார்கள் கட்டுக்கதைகள் மூலமே!
    மருத நிலத்து ஆதி முருகனும் விவசாயம் கண்ட இடையரே...அதன் பண்பாடு/பழக்க வழக்கங்கள் இந்த தை க்கு ஒட்டிய கார்த்தியிலும் காண்கிறோம் ஆதி_முதல்_குறவர் தொடர்புகளுடனும்!

    ReplyDelete
  7. ஜெய் கணேஷ்

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar