Monday, October 19, 2015
Home »
தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை
,
மதுரை
» மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது
தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று 70–க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அவர்கள், மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார், முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர்.
அப்போது பேரணியில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23) என்ற வாலிபர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment