"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, October 26, 2015

மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம்

மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் சண்டை போன்றவை பொழுது போக்காக இன்றளவும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. முட்டுக்கிடா வளர்ப்புக்கு செம்மறி ஆடுகள் தேர்வு செய்யப்படுகின்றன

கச்சைகட்டி கருப்பாடு:

முட்டுக்கிடா' வளர்ப்புக்கு ஏற்ற இனமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கருப்பாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. கருப்பு நிறம், கம்பீர நடை, அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை... இதுவே கச்சைகட்டி கருப்பாடுகளின் அடையாளங்கள்.

40 நாள் குட்டி ரூ.4000:

கச்சைகட்டி கருப்பாடு வளர்க்கும் முருகன் கோனார் கூறியதாவது: பாட்டனார் முருகக்கோனார், தாத்தா ஆயப்பிள்ளை, தந்தை முத்துப்பிள்ளை ஆகியோரை அடுத்து நான்காவது தலைமுறையாக, கருப்பாடுகளை வளர்க்கிறேன். இந்த இனம் கச்சைகட்டியை தவிர வேறு எங்கும் இல்லை. முட்டுக்கிடா வளர்ப்புக்கு இதை விட்டால் வேறு இல்லை. முட்டுக்கிடா வளர்ப்போர் முன்கூட்டியே குட்டிகள் கேட்டு அட்வான்ஸ் கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நல்ல முறையில், ஊட்டச்த்து கொடுத்து வளர்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு குட்டி ஈனும். நுாறு ஆடுகளுக்கு ஒரு கிடா என இனப்பெருக்கத்திற்கு விடுவோம். 40 நாள் குட்டி ரூ.4000. பட்டிக்கே வந்து வாங்கி செல்வர். கச்சைகட்டி கருப்பாடு கள் முட்டுக்கிடா போட்டியில் ஒன்றுடன் ஒன்று முட்டும்போது, இருதயம் படபடவென துடிக்கும் அளவுக்கு உடைகல் உடைபடும் சப்தம் கேட்கும். இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் பல நுாற்றாண்டுகளை கடந்து கச்சைகட்டி கருப்பாடுகள் கம்பீரமாக வலம் வருகின்றன என்றார்.

தொடர்புக்கு 97506 62881.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar