"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, November 23, 2015

கலித்தொகையில் ஆநீரை மேய்த்தல் (பண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்)

ஆநீரை மேய்த்தல்
முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

‘‘தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106)

‘‘மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

‘‘பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். மேலும் அதனைக் காப்பதற்காக கோவலர்கள் கோலூன்றி நின்றனர் என்பதையும் கலித்தொகை தெளிவுறுத்துகின்றது.

மோர் விற்றல்

முல்லை நில மகளிர் பசுக்களில் இருந்து பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். ஆயர்குலப் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதை,

‘‘அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்” (கலி-108)

என்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றது.

வெண்ணெய் விற்றல்

முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர் எனபதை,

‘‘வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்”

(கலி-110)

‘‘வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே” (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி முடைதல்

பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குரிய பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அத்தகைய கூடைகள் ‘புட்பில்’ எனப்பட்டன. இதனை,

‘‘போழின் புனைந்த வலிப்புட்டில்” (கலி-117)

‘‘வரிகூழ வட்டி தழீஇ” (கலி-109)

என்ற முல்லைக்கலி வரிகள் எடுத்துரைக்கின்றன. முல்லை நில மக்கள் பனைஓலைகளிலும் தென்னை ஓலைகளிலும் செய்யப்பட்ட பெட்டிகளில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் கலித்தொகை வரிகளால் அறிய முடிகின்றது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar