"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, January 23, 2016

கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி

பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார்.

ஆலோசனைகூட்டம்

பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாஇளம்பரிதி தலைமை தாங்கினார். தென்னவனூர் சந்திரன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் வேலுமனோகரன் மற்றும் சண்முகராஜ், செந்தாமரைகண்ணன், பரமக்குடி யாதவர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட பொறுப்பாளர் ஹரிகரன், யாதவ சபை மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


பின்னர் தமிழ்நாடு யாதவ மகாசபையின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் யாதவ மகாசபை நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. யாதவ சமுதாயத்துக்கு கொடுக்கவேண்டிய அரசியல் அங்கீகாரத்தை அ.தி.மு.க.,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழங்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளை பெற வருகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் கண்டுகொள்வதில்லை. 1931–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் 4–வது சமுதாயமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் பேர் உள்ளோம்.


அரசு விழா

வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். தமிழகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் யாதவ சமுதாய மக்களுக்கு பங்களிப்பு இல்லாமல் உள்ளது. வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சிகள் அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டஆலோசகர் சதீஷ்வரன்,வக்கீல் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar