ஏறுதழுவுதல்
எக்குலமும் போற்றும்
ஆயர் குலத்தின் வீரம்.
பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம்.
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான
ஆயர்களின் (இடையர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.
ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றலவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.
சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
ஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.
பெயர்க்காரணம்:
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட பெண்ணிற்க்காக காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளை அடக்க ஆரம்பித்தனர்.
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது
- திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.
- வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயற்ச்சி செய்திருக்கலாம்.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.
ஆயர்களின் வீரம்:
|
சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் |
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.
அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள்.
ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.
காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.
ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.
தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.
முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.
காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1
பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)'
என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.
பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.
அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,
'ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2'
என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,
'இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3 '
என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,
‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4
என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5
இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.
'முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6'
இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,
"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7"
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகைஇ பா. 148-149.
2. மேலது. பா. 101 :9-12.
3. மேலது பா. 105:66-68.
4. மேலது பா. 101:43-46.
5. மேலது பா. 103:1-4.
6. மேலது பா. 103:6-8.
7. மேலது பா. 103:63-74.
வீரத்தை கூட்டும் குரவை கூத்து
அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.
புலிக்குளம் காளை
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது
கோட்பாடு:
- காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.
- ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார்
- அடக்கியவனுக்குப் பெண்ணைக் கொடுப்பர்
செய்திகள்:
- ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
- இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர்.
- ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான்
- ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர்
- கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு.
- புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர்.
- புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்
பழக்கம்:
- பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர்.
- காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர்
- இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர்
- துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர்
காளைகள்:
- சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்
- வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன
உவமைகள்:
- போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.
- ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது
- பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது
- ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது
- புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்
- அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.
- இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.
- சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.
- பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.
- கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.
- வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்
காளை நிறத்துக்கு உவமைகள்:
- கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம்
- செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம்
- குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம்
- புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள்
- சேய் – சேயோன் போன்ற நிறம்
அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்.
"பல்வேறு சமுகங்களும் உரிமை கோரும் ஆயர் குடியின் அடையாளம்"
திரைப்படத்தின் மூலமாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பல்வேறு சமுகங்களும் தங்கள் சமுகத்தின் வீரவிளையாட்டு என்று கூறிவருகின்றனர்.
தமிழினத்தில் பல்வேறு குடிகள் உண்டு அதில் ஒரு குடிக்கு மட்டும் சொந்தமான ஒரு வீரத்தை எப்படி ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீரமாக முன்னிருத்த இயலும்
மீடியாக்களும் செய்திதாள்ளும் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் வீரவிளையாட்டாக ஏன் முன்னிருத்துகின்றனர்?
ஒவ்வொரு தமிழ் குடிக்கும் ஒரு தனித்துவம் உண்டு ஆயர்குலத்தின் வீரவிளையாட்டை எப்படி ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீரவிளையாட்டாக முன்னிருத்த இயலும்.?
அயர்குலத்திற்க்கு மட்டும் சொந்தமான ஏறு தழுவுதல் இன்று ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீர அடையா ளமாய் முன்னிருத்துவது ஏற்புடையதா?
உதாரணமாக படகு போட்டி தமிழக மீனவ சகோதரர்கள் நடத்துகின்றனர் அதை ஏன் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் விளையாட்டாக முன்னிருத்தாமல் மீனவர்களின் விளையாட்டு என்று முன்னிருத்துகின்றனர்.?
இந்த தொகுப்பில் உள்ள தகவல்கள் பல்வேறு இணையதளம் மற்றும் பல்வேறு தமிழ் நூல்களில் இருந்து பெறப்பட்டது.
தொகுப்பு:
தாமோதரன் கோனார்
Good and well collected information.
ReplyDeleteMy relative name in madurai is salli konar. The name salli is exist in konar yadav community only.
ReplyDeleteSalli is arrived from who is having more sallikasu. Later converted in to sallikattu.
ReplyDeleteSalli is arrived from who is having more sallikasu. Later converted in to sallikattu.
ReplyDeleteGood and well collected information.
ReplyDeleteஅருமையான பதிவு ஜல்லிகட்டை மீட்க வேன்டியது நமது கடமையாகும்
ReplyDeleteபிற்காலத்தில் இது தமிழர் விளையாட்டாக பணம் பரிசு வழங்குகிறார் தற்போது......இதற்கு நம்மிடம் ஒற்றுமை இல்லை இப்பொழுது எந்த இடையன் ஜல்லக்கட்டு காளை வளர்க்கிறார் அனைவரும் பணத்தை நோக்கி ஓடுகின்றனர்... நமக்கு அடையாளம் இல்லாம போகபோது
ReplyDeleteநீங்கள் சொல்வது 100சத உண்மை
Delete