Monday, January 1, 2018
Home »
மருத்துவர் காந்தையா
,
யாதவர் பேரவை
» கல்லூரியை ஒப்படைக்க வேண்டும் - அரசுக்கு யாதவர்கள் கோரிக்கை
கல்லூரியை ஒப்படைக்க வேண்டும் - அரசுக்கு யாதவர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் : 'யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப ஒப்படைக்க, வேண்டும்' என, அந்த ஜாதியினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.யாதவர் பேரவையின், 12வது மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநில துணை செயலர் துரைராஜ், வழக்கறிஞர் பாலகுமார், மாவட்ட நிர்வாகிகள் முரளிமோகன், வெங்கடேன் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
● மதுரையில், யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப தங்களிடமே ஒப்படைக்க வேண்டும்
● மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினால் தான், கால்நடைகளை காப்பாற்ற முடியும்
● மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாடு உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை, அரசு மீட்கவேண்டும்
● தமிழகத்தில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையிருந்தும், ஜாதிவாரியான கணக்கெடுப்பு பட்டியலை, அரசு வெளியிடவில்லை; உடனடியாக வெளியிட வேண்டும்
● ஆடு வளர்ப்பு நல வாரியத்தில், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தான், தலைவராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.பேரவையின் நிறுவனர் மருத்துவர் காந்தையா தலைமையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத்தலைவராக சேலம் கண்ணன், பொதுச்செயலராக கோவை தங்கப்பழம், பொருளாளராக சென்னை ஜெயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment