"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, April 22, 2016

ஜனதா கட்சியுடன் கூட்டணி: கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கீடு


சரத்யாதவ், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜெபமணி ஜனதா போன்ற ஜனதா கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனதா முன்னணி என உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சியும் சேர்ந்துள்ளது.


சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி. சேகர் வெளியிட்டார்.

இந்த கட்சிக்கு ‘புல்லாங் குழல்’ சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

கும்மிடிப்பூண்டி, கொளத்தூர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், வேளச்சேரி, சோளிங்கநல்லூர், ஆலந்தூர், சோளிங்கர், அணைக்கட்டு.

பர்கூர், திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, மைலம், திருப்பூர் வடக்கு, கவுண்டம்பாளையம், அரவாக்குறிச்சி, கரூர்.

போராவூரணி, விராலி மலை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, கம்பம், திருவாடனை, பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Wednesday, April 20, 2016

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார்

இன்று(20-04-2016) காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 24 தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார்.













இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பட்டியல்
வ.எண் தொகுதி எண் தொகுதி பெயர் வேட்பாளர் பெயர்
01 210 திருவாடானை   டாக்டர் தி. தேவநாதன் யாதவ்
02 004 திருவள்ளூர் திரு. சீனிவாசன்
03 008 அம்பத்தூர் திரு. தேவராஜ்
04 027 சோழிங்கநல்லூர் வழக்கறிஞர் திருமதி.சீதாலட்சுமி
05 036 உத்திரமேரூர் திரு. புருஷோத்தமன்
06 039 சோளிங்கர் திரு.  கோகுல் 
07 042 ஆற்காடு திரு. அருள்ராமன்
08 044 அணைக்கட்டு திரு. விஜயகுமார்
09 049 ஜோலார்பேட்டை  ஓவியம் ரஞ்சன்
10 052 பர்கூர் திரு.  .மணிவண்ணன்
11 062 செங்கம் (தனி) திரு. உஜ்ஜாகர்சிங் மி.கி.ஷி (ஓய்வு)
12 063 திருவண்ணாமலை திரு.   வெங்கடாஜலபதி
13 064 கீழ்பென்னாத்தூர் வழக்கறிஞர்  திரு.சுப்புராயன்
14 076 திருக்கோயிலூர் திரு.   தண்டபாணி
15 094 நாமக்கல் திரு.  கராஜேந்திரன்
16 126 மடத்துக்குளம் திரு. முத்துக்குமார்
17 154 பண்ருட்டி திரு.  சரவணன்
18 157 புவனகிரி திரு.  முத்து
19 164 கீழ்வேளூர்  (தனி)  திரு. சத்தியராஜ்
20 175 ஒரத்தநாடு திரு.  கேசவன்
21 219 சங்கரன்கோவில்(தனி) திரு. குணசேகரன்
22 225 அம்பாசமுத்திரம் திருமதி. சசிகலா முருகேசன்
23 226 பாளையங்கோட்டை திரு.  நிர்மல் மரியசுந்தரம்
24 227 நாங்குநேரி திரு. மணிகண்டன்

2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் யாதவர் சமுக வேட்பாளர் பட்டியல்

காங்கிரஸ்
முதுகுளத்தூர்-மலேசியா எஸ்.பாண்டியன்
கலசபாக்கம்- செங்கம் குமார்
மதுரவாயல் - நாசே ஆர்.ராஜேஷ்


பாஜக 

ஆம்பூர் - கொ.வெங்கடேசன்
கடையநல்லூர் - வி. கதிர்வேலு

அதிமுக
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
தாம்பரம்- சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்

திமுக
திருப்பத்தூர் - கேஆர்பெரியகருப்பன்
கிணத்துக்கடவு - பிரபாகரன்

தேமுதிக
ராணிப்பேட்டை - எஸ்.நித்தியானந்தம்
பட்டுக்கோட்டை - என். செந்தில்குமார்
சிவகாசி - ஆர்.சுதாகரன்


பாமக
கடையநல்லூர் - திருமலைக்குமாரசாமி

போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்
யாதவர் வாக்கு யாதவர்கே

Last update:20-April'2016 5:30 PM

யாருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ தெரியபடுத்தவம்
tamilyadavs@gmail.com


Friday, April 15, 2016

மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...சமூக சிந்தனையாளர் குழு யாம்/YES

மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...

மிகவும் பின்தங்கியவர்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட சட்டநாதன்கமிசனும்(1971), அம்பாசங்கர்கமிசனும்(1983), யாதவர்கள் ஆடு, மாடுகளைப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மேய்த்து, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்று பரிந்துரைத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் யாதவர்களின் மொத்த மக்கள் தொகை 13,85,603 எனவும், மூன்றாவது பெரிய சமூகம் எனவும் அன்றே அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் யாதவர் சமுகம் உட்பட 32 சாதிகள் கல்வி மற்றும் வேலையில் பெற்றுள்ள பங்குகள் குறித்த புள்ளிவிபரங்களும் வெளியிட்டுள்ளனர்.

அறிக்கை வெளியாகி 35 ஆண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஒரு அடி கூட முன்னேறாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். இந்த தொழில்நுட்பஉலகில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இன்றி, மொத்த மக்கள்தொகை, வாக்காளர் குறித்த உண்மையான தகவலின்றி தமிழகம் முழுவதும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் நாகரிகமாக வாழ்கிறோம் என்ற அடிப்படையில் நம்முடைய மரபுகளையும் எச்சங்களையும் நம்மையறியாமல் இழந்து, இளம் தலைமுறைகளை வஞ்சித்து வருகிறோம்.
இன்று மிகப் பெரும்பான்மை சமூகமாகத் திகழ்ந்தும் தனிப்பட்ட முறையில் வளமாக வாழ்வதாக நினைத்து வாழ்கிறோமே தவிர, நமக்குள் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள, நம்மை பாதுகாத்து கொள்ள, நமது உரிமைகளைப் பெற நாம் வலுவாகச் செயல்படவில்லை என்பதை நன்கு அறிந்த திராவிட கட்சிகள் 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்ப்பாளர்களாக மிக குறைந்த எண்ணிக்கையில் அறிவித்து இருக்கின்றன, நாமும் வழக்கம்போல வருத்தப்பட்டு விட்டு நம் வாழ்க்கையை மேய்க்கப் போய் விடுகிறோம்.
ஆனால் நம்முடைய மேய்ப்பராக கருதிக்கொள்பவர்கள், சமூக அக்கறையோடு பல்வேறு தளங்களில் இயங்க, அரசியல் கட்சிகளோடு பேச, பாரம்பரிய தொழில்களை நவீனப்படுத்த, அமைப்புகளை ஒருங்கிணைக்க ஆளுமையற்றவர்களாக இருப்பதால் கால் நூற்றாண்டாக எந்த பணியையும் திறம்பட செய்ய முடியாமல், அரசியல்ரீதியாக அங்கீகாரம் பெறமுடியாமல் மிகப்பெரிய பின்னடைவை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கு மேய்ப்பர்கள் மட்டும் காரணமில்லை; இந்த வரலாற்றுப் பிழையில் ஒவ்வொரு யாதவனுக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில் வேறுவழியின்றி உறவுகளை வளமாக வாழ வைக்க வேண்டும் என்று தன்னைப் பணயம் வைத்து இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்களது குடும்பம் பாதுகாப்பற்ற, அரவணைப்பற்ற சூழலில் தள்ளப்படுகிறது, அதைப்போல பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆதிக்க சமூகங்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகளை நம் உறவுகள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது சமூக அமைப்புகளில் ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. ஆனால் சமூக அமைப்புகளோ தங்களுடைய வழக்குகளுக்குள் சிக்கிச் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி நோக்கமே இல்லாத புதிய மேய்ப்பர்களும் அமைப்புகளும் கிளைக்கின்றனர். காலத்தின் அருமை கருதி, சமூக நலன் கருதி விட்டுக்கொடுத்து “குறிக்கோளுடன் கூடிய சமூக அமைப்புகளையும் மேய்ப்பர்களையும் மீட்டுருவாக்கம் செய்வோம்”


 நன்றி.
சமூக சிந்தனையாளர் குழு 
யாம்/YES



Tuesday, April 12, 2016

அருள்மிகு பொன்வண்டையனார் கோவிலும் யாதவ சமுதாய பூசாரிகளும்

குலதெய்வ வழிபாடு என்பது தமிழகத்தில் உள்ள அணைத்து சமுதாயத்தினரும் கொண்டாடி வரும் முக்கிய திருவிழாவாகும். இதில் நாடார் சமுதாய மக்களின் குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலேதான் அமைந்துள்ளது. ஒவ்வொரு அய்யனாருக்கும் தல வரலாறு அல்லது கோவில் தோன்றிய வரலாறு உள்ளதை அறியலாம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், நயினார் பத்தில் உள்ள அருள்மிகு பொன்வண்டு அய்யனா ரி ன் தலவரலாற்று புத்தகமோ கல்வெட்டு குறிப்போ இதுவரை கிடைக்கப் பெறவில்லை.)


பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நமது கோவிலின் வரலாறு இது என்று கிடைக்கப் பெறவில்லை. எனினும் 300 or 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படும் நமது கோவில், நமது முன்னோர்களின் வாய்மொழியாக கிடைக்கப் பெற்ற தனகவலின் படி, பல நுற்றாண்டுகளுக்கு முன்னர் நாடார் சமுதாய மக்கள் நயினார்பத்தில் உடைமரத்தை வெட்டி, அதன் தூர்பகுதியை தோண்டும் பொழுது இரத்தம் வெளிப்பட்டது. இதனால் ஊ ரி ல் உள்ள தங்கள் உறவின ர் களிடம் கூறி அவர்களுடன் தோண்டி பா ர் த்தபோது அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமி துணைவியர் பூரண போர்கொடியுடன் இணைந்த சிலைகள் சுயம்புவாக கண்டெடுக்கப்பட்டது. பின்ன ர் , அந்த இடத்தில் சிறிய குடிசை கோவில் எழுப்பப்பட்டு பூசையும் நடைபெற்று வந்தது.


ஒரு நாள் பூசை வேளையில் கோவில் கதவு திறக்க முடியாமல் போகவே கேரளாவிலிருந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே நடந்தது வந்த யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கதவைத் திறக்க முற்பட்டபோது கதவு திறந்து கொண்டது. ‘தனக்கு பூசை செய்ய யாதவரே ஏற்றவர்‘ என அசரீரியாக குரல் ஒலிக்கக் கேட்ட நம் முன்னோர்கள் யாதவரின் சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று அவர்களை பூசை செய்ய வருமாறு அழைத்தனர். ஆனால், இதை அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், அவர்களையும் அவர்கள் வீட்டையும் பாம்புகள் பின் தொடர்வது கண்டு அஞ்சி அதன் விபரம் அறிய முற்பட்டபோது, அருள்மிகு பொன்வண்டு அய்யனாரே பிரசன்னமாகி அந்த ‘யாதவ குடும்பத்தினர் வந்து பூசை செய்யும் வரை அவர்களை பாம்பாக பின் தொடர்வேன்‘ எனக்கூறினார். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் புறப்பட்டு ஆலயம் வந்து குடிசைகள் அமைத்து வழிவழியாக தினசரி இரண்டு கால பூசை செய்து வருகின்றனர். தற்போது பூசை செய்து வரும் கருப்பசாமி பூசாரி 4-வது தலைமுறை பூசாரி ஆவார்.


இவ்வளவு பழமை கொண்ட நமது கோவிலுக்கு தமிழகத்தின்தென் பகுதியிலிருந்துபல்வேறு ஊர்களுக்கு பிழைப்பை தேடியும், தொழில் அபிவிருத்திக்காகவும் சென்றவர்கள், அவரவர்களுக்கு முடிந்த நேரங்களில், குடும்பம் குடும்பமாக கால்நடையாகவும், வண்டி கட்டிக்கொண்டும் வந்து சென்றனர். மதுரை, விருதுநகர் பகுதிகளிலிருந்து வண்டி கட்டி வந்து செல்ல அப்போது வார காலம் ஆனது. (அப்படி வரும்போது சிலர், பூசாரி குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு வருவது வழாக்கம்.) தற்போது, புகைவண்டி, பஸ், கார் போக்குவரத்து என நாம் வந்து செல்கின்றோம்.

நாடார்குளத்தில், அருள்மிகு போன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக வணங்கி வரும் நமது தாயாதிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி போன்ற மாவட்டகங்களில் பெருமளவிலும், கன்னியாகுமரி மாவட்ட்சத்தில் சில ஊர்களிலும், இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் போன்ற மாவட்டகங்களில் குறிப்பிட்ட ஊர்களிலும், சென்னையில் மட்டும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரையிலும் வசித்து வருகின்றோம். இதுதவிர, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் நுற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிறார்கள்.நமது முன்னோர்கள் குடும்பம், குடும்பமாக பல குடும்பம் சேர்ந்து கோவிலுக்கு வந்து அய்யனை தரிசித்துச் சென்ற காலகட்டத்தில் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிழ்கண்ட பணிகளை நிறைவேற்றினார்கள்.
  • 1926-வது ஆண்டுக்கு முன் கருவறை கட்டிடமும், அதற்குப்பின் பிரகார கல்மண்டபமும், அதனையடுத்து சமையல் கூட்டத்துடன் இணைந்த உணவுக்கூடமும் (தங்கும் மண்டபமமும்) கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது.
  • பின், 1930-வது வருடம், விருதுநகர் திரு.அ.ல வகையறாக்கள் சார்பாக கோவில் முன்பாக 30 அடி அகலத்தில் 2 பர்லாங் நிலத்திற்கு நடைபாதை கிரையம் செய்து பாதை அமைத்தார்கள்.
  • 1942-ல் பூசாரிகள் குடும்பத்திற்கு 4 வீடுகள் கட்டி கொடுத்தார்கள். பின், அவர்கள் சீவனாம்சம் செய்ய 12 ஏக்கர் பனை தோப்பு வாங்கி தந்தார்கள். இக்காலகட்டத்தில், கோவில் பம்ப்செட் அமைத்தார்கள்.
  • 1946-ல் கருப்பசாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பல ஊர் தாயாதிப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை போன்ற ஊர் முக்கிய நிர்வாகிகள் முயற்சியால் 1956-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
  • 1965-ல் குதிரை மண்டபம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மதுரை திரு.A.S. பென்னுச்சாமி நாடார் பெயரில் வரைபடம் அனுமதி பெற்று (பிளான் அப்ருவ்டு) வேலை நிறைவடைந்தது.
  • மதுரை திரு.A. ராமசாமி நாடார் மேற்பார்வையில் 1968-ல் 2-வது கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்தது.பின், 1974-ல் கோவில் மடப்பள்ளி கட்டப்பட்டது. அதன்பின் மாடசாமி கோவிலும் கட்டப்பட்டது. இக்காலக்கட்டங்களில் 3-வது தலைமுறை பூசாரியாக திரு. இராமநாதன் கோனார் நீன்டகாலம் பூசை செய்து வந்தார்.

இப்படியாக நமது சந்ததிகளும் கோவிலும் வளர்ந்து வந்த காலத்தில் 1991-ல் சிவகாசியிலிருந்து, வருடா வருடம் திருவிழா கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஊர்களிலும் முகவரி சேகரிக்கப்பட்டது. 300 தலைக்கட்டு சேர்ந்த நிலையில் முதல் 2 வருடம் வைகாசி விசாகத்தன்று ஒரு நாள் விழா நடந்தது.
பின்னர், 1993 முதல் மூன்று நாள் விழாவாக வைகாசி மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. படிப்படியாக எல்லா ஊர்களிலும் அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக கும்பிடும் தாயாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு தற்போது சுமார் 5000 குடும்பங்கள் இணைந்துள்ளன. 3000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா தலைக்கட்டு வரி செலுத்தி திருவிழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் சிறப்புமிகு “பெரும் பூசை திருவிழா”வாக வருடா வருடம் வைகாசி முதல் வெள்ளி-சனி-ஞாயிறு ஆகிய கிழைமைகளில் நடைபெறுகின்றது.
கோவில் வளர்ச்சியை முன்னிட்டு, 2002-வது வருடம் “இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ போன்வண்டையனார் சுவாமி கும்பிடும் தாயாதிகள் சங்கம்” என்ற பெயரில் நமது நிர்வாகம், தமிழக அரசின் பதிவுத்துறையில் ‘55/2002’ எண்ணில் பதிவுச் சான்று பெறப்பட்டது.

பின், பெரும் பூசையன்று பெருமளவில் கூடுகின்ற கூட்டத்திற்கு வசதிகள் செய்து தர 3½ ஏக்கர் பம்ப்செட் நிலம் வாங்கப்பட்டு அதில் 5 ஆண்டு கால திட்டத்தில் 1200 சதுர அடிபரப்பில் “மகாமண்டபம்” (டைனிங் ஹால்) கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பெண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிளும் கட்டி முடிக்கப்பட்டது.

  • ஆண்டு தோறும் இரண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகின்றது.
  • முறையாக ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு தாக்கல் செய்யப்படுகின்றது.
  • மூன்று ஆண்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகின்றது. 2013 வைகாசிப் பெரும் பூசைக்கு முன்பாக 2000 சதுர அடியில் பெரிய சமையல் கூடமும், நிராவி சமையல் பாத்திரங்களும் அமைக்கப்பட்டது.

2014 பெரும் பூசைக்கு முன்பாக கட்டிட நன்கொடை வழங்கிய வழங்கிய தயாதிப் பெருமக்கள் 942 நபர்களின் பெயர்கள் பதித்த கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது. இதுவரை சுமார் 80 லட்சம் வரை இடம் வாங்கி, கட்டிடப் பணி முடிந்து, சுற்றுச் சுவர் எழுப்ப பயன் பட்டுள்ளது.

via http://ponvanduayyanarkovil.org/

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar