Friday, April 22, 2016
Home »
» ஜனதா கட்சியுடன் கூட்டணி: கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கீடு
ஜனதா கட்சியுடன் கூட்டணி: கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கீடு
சரத்யாதவ், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜெபமணி ஜனதா போன்ற ஜனதா கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனதா முன்னணி என உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சியும் சேர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி. சேகர் வெளியிட்டார்.
இந்த கட்சிக்கு ‘புல்லாங் குழல்’ சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி, கொளத்தூர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், வேளச்சேரி, சோளிங்கநல்லூர், ஆலந்தூர், சோளிங்கர், அணைக்கட்டு.
பர்கூர், திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, மைலம், திருப்பூர் வடக்கு, கவுண்டம்பாளையம், அரவாக்குறிச்சி, கரூர்.
போராவூரணி, விராலி மலை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, கம்பம், திருவாடனை, பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment