வேட்புமனு தாக்கல்யாதவ மகாசபை தலைவரும், இந்திய மக்கள் கழக நிறுவனர் தலைவருமான டி.தேவநாதன் யாதவ் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மு.கருணாகரனிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்திய மக்கள் கழக தென்மண்டல அமைப்பு துணை செயலாளர் முத்து யாதவ், யாதவ மகா சபை சட்ட ஆலோசகர் ஜனார்த்தனன், மாநில இளைஞர் அணி தலைவர் சாலமோன் ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் தேவநாதன் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி
கட்டணம்இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களில் அதிக
கட்டணம் வசூல் செய்கிறார்கள். கல்வியை வியாபாரமாக்கி விட்டார்கள். இதனால்
90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு
அனைவருக்கும் இலவசமாக தரமான கல்வி கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக
நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அதற்கு குரல் கொடுக்கவே எங்கள் கட்சி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.15 தொகுதிகளில் போட்டிதமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், என்னை தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர். குலுக்கல் முறையில் நெல்லை தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுகிறேன்.இவ்வாறு இந்திய மக்கள் கழக தலைவர் டி.தேவநாதன் யாதவ் கூறினார்.










இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் இக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என என்னை நமது சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த அணியில் ஒரு தொகுதிக்காக கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை. தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யாதவ சமுதாய மக்கள் இருந்தும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறோம். இந்திய மக்கள் கழகம் தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளது என்றார். இக் கூட்டத்தில் யாதவ மகாசபை மாவட்டச் செயலர் கதிர், தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகநாதன், தங்கராஜ் உள்பட இந்திய மக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+91-7200671482

