"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, March 9, 2015

கடலூர் யாதவா சங்கத்தின் வேண்டுகோள்

அன்பான யாதவ சொந்தங்களே..... ஒரு அன்பான வேண்டுகோள்....
கடலூர் துறைமுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா யாதவா சங்கத்தின் சாா்பில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணா பஜனை மடம் கட்டுமானபணிகள் நடந்துகொண்டிருக்கிறது. யாதவ சொந்தங்கள் தங்களாலான நிதி உதவியோ,பொருளுதவியோ கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.........
தொடர்புக்கு...
B.ராஜி யாதவ் -9688002470,,, 
K.K.கதிரவன் யாதவ் -7373523235,,9842778848.......

தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பாக யாதவர்களை MBC.யில் சேர்க்க கோரி மதுரையில் ரயில் மறியல்(9-03-2015)

மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போ லீசார் கைது செய்தனர். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் நேற்று நடந்த போராட்டத்துக்கு யாதவர் சங்கத் தலைவர் சரசுமுத்து தலைமை வகித்தார். மாநில வக்கீல் அணி தலைவர் சங்கராஜித், மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், தென் மண்டல அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஆடு வளர்ப்போர் உரிமையாளர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை மீறி ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். இதையடுத்து, 55 பேரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






இதில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை சார்பில் 20 நபர்கள் கலந்துகொண்டனர்.





முத்துப்பேட்டை தர்காவும் கருப்பையா கோனரும்

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட்டை ஜாம்புவனோடையில்முல்லைநில தரிசு நிலத்தில் ஆயர் குலப்பெரியார் கருப்பையா கோனார்  என்பவர் தனது ஆட்களுடன் சென்றுஏர்பூட்டி உழத் தொடங்கினார். அப்போது ஏரின் கொழுமுனை கீறிய ஓரிடத்தில் இருந்து இரத்தம் பீரிட்டடித்தது.அதே நேரம் கோனாரின் இரு கண்களும் ஒளி மங்கி பார்வை இழந்தன. அச்சத்தில் கை கால் நடுங்கிபுலம்பியவராக உழவை நிறுத்திவிட்டு கோனார் தம் இல்லம் சென்று படுத்துவிட்டார். அன்றிரவு அவர் கனவில்அரபிகளின் தோற்றமுடைய பெரியார் ஒருவர் தோன்றினார்கள்.

கோனாரை விளித்து கருப்பையா ! நீ ஏர் உழுத நிலத்தில் வெகு காலத்திற்கு முன் நான் அடக்கமாகி இருக்கிறேன். என் பெயர் ஷெய்கு தாவூது ஆகும். உன் பார்வையைப் பற்றி நீ கவலைப்படாமல் உடன் எழுந்து.ஆறுகல் அருகிலுள்ள நாச்சிகுளத்துக்கு சென்று அங்கு வசிக்கும் கபீர்கான். ஹமீத்கான் என்ற இரு

தவசீலர்களிடம் நடந்தவைகளைக் கூறு ! என்றார்கள். கோனார் விழித்தெழுந்தும் தன் இரு கண்களிலும் பார்வை. வந்துவிட்டதை உணர்ந்தார். உடன் அவர் எழுந்து நாச்சிகுளம் போய் சேர்ந்தார். அவர் அங்கு செல்லும் முன்பே தவசீலர்கள் இருவரின் கனவிலும் ஆண்டகை அவர்கள் தோன்றி ஆயர் வருவதுபற்றி அறிவுறுத்தி இருந்தார்கள் கோனார் கொண்டு வந்த நற்செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த தவசீலர்கள் விரைந்து வந்து மேற்படி நிலத்தை வந்தடைந்தபோது அங்கு இரத்தம் பீரிட்டு அடித்த இடத்தில் மல்லிகை கொடி வளர்ந்து மலர்கள் சொரிந்திருப்பதைப் பார்த்து குறிப்பிடப்பட்ட இடத்தில் கபர்ஷரிஃப் ஒன்றை எழுப்பினார்கள். முத்துப்பேட்டையிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு பெருந்திலராக வந்து கூடி தரிசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கபர் ஷரீஃபை சுற்றியுள்ள தனக்கு சொந்தமான ஐந்தரை வேளி நிலத்தையும் கோனார் அண்ணல் ஷெய்கு தாவூது ஆண்டகை பெயரால் இனாம் சாசனம் எழுதிவைத்தவிட்டார்.

அதன் பின் ஆண்டகை அவர்களின் தரிசனத்துக்காக வெளியூரிலிருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வரவே

எஜமான் அவர்களின் அடக்கஸலத்தில் மஜார் ஷரீஃபொன்று கட்டப்பட வேண்டுமென்று மக்கள் முடிவெடுத்தனர்.சிற்பிகளையும் கட்டிட தொழில் நிபுணர்களையும் வரவழைத்தனர்.எழுபத்தெழு முழு நீளத்திலும் இருபத்தொன்பது முழு அகளத்திலும் எட்டு முழு உயரத்திலும் நாற்புமும் சுவர்எழுப்பப்பட்டது. அதற்குமேல் முட்டை வடிவத்திலும் 15 வளைவு மண்டபங்கள் உயர்த்தப்பட்டன. மல்லிகைபுஷ்பங்கள் பொலிந்து கிடந்த அடையாள இடத்தில் கபுர்ஷரீஃப் கட்டப்பட்டு அதன் தலைமாட்டில் ஓரு குமுசும்கால்மாட்டில்ஒரு குமுசும் கட்டப்பட்டது தர்காவின் இந்த அமைப்பு பூர்த்தி செய்யப்பட்டு ஆயிரம் ஆண்டுகள்ஆகின்றன.

Thursday, March 5, 2015

மருது பாண்டியர் வாழ்வின் நிகழ்வுகள்-ராமுக்கோன்,ஆட்டு மந்தையின் காவல்

மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோவிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில் யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் கோவில் யாதவர்களின் கட்டுபாட்டில் இருக்கும். மாட்டுவண்டி பந்தயம் குதிரை பந்தயம் நடக்கும். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி நடக்கும். அன்றைய நாள் சிவகங்கை மாவட்ட யாதவர்கள் அனைவரும் அங்கு கூடியிருப்பார்கள்.
சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார்.
அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியரிடம் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடி தலையுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது

Wednesday, March 4, 2015

குருசாமி யாதவ் அவர்கள் பிறந்தநாள் விழாவில் கோகுலம் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் & இரத்ததானம்

கோகுலம் அறக்கட்டளை சார்பில் குருசாமி யாதவ் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடந்தது .இம்முகாமில் டாக்டர்.கமலவாசன் குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோகுலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.















கோகுலம் அறக்கட்டளை  மாவீரன் குருசாமி யாதவ் பிறந்தநாள் விழா

நன்றி
திரு மணிவண்னன் யாதவ்
தமிழ் நாடு இளைஞர் யாதவ மகாசபை

சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளத்தில் இரத்த தான முகாமிற்கு காவல் காவல்துறை அனுமதி மறுப்பு

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்

"சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" இளைஞர்கள் அழைப்பின் பேரில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" சார்பாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுடன் காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு 11 மணிக்கு சென்று அடைந்தனர் ஆனால் அப்பொழுது காவல்துறை வழிமறித்து உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார், எவ்வளவோ பேசியும் பயன் இல்லாமல் நிகழ்ச்சி ரத்தானது.

இரத்த தானம் செய்ய காவல்துறை அனுமதி தராததால், , அங்கிருந்த இளைஞர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் !!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
ஆட்கொண்டார்குளம் - சங்கரன் கோவில்


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar