"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, July 13, 2015

திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு



சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சாதிய அமைப்பினரும் வருகை தருவர் என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், சிலைக்கு மாலை அணிவிக்க ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

இதன்படி திமுக சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் நிஸ்தார் அலி, மாவட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டச் செயலர் ஹரிஹரன் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

258–வது நினைவுநாள்: வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ்- காங்கிரஸ் மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோகுல மக்கள் கட்சி சார்பில் இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

















விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும்:மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில், அழகுமுத்துக் கோனின் 256 ஆவது நினைவு நாள் விழா, மதுரை யாதவர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பொன். ராதாகிருஷ்ணன் மேலும் பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு இந்தியா. ஆனால், 200 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை மட்டுமே நாம் நினைவில் கொண்டுள்ளோம். சுதந்திரப் பெருமைகளை மறந்தால், நம் நாடு மீண்டும் அடிமைப்பட வாய்ப்புண்டு. அதனால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூருவது அவசியம்.

முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் 256-வது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள யாதவர் தன்னுரிமை பணியகத்தில் நேற்று அவரது வரலாற்று ஓவியங்களைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். 
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளிகள் தேசிய அளவில் போற்றப்படுவது இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்றார்.

பின்னர், வீரர் அழகுமுத்துக் கோன் பற்றிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு யாதவர் மகாசபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவர் எஸ். சுரேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் ஐ.எஸ். முத்தண்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அழகுமுத்துக்கோன் 256-வது நினைவுதினம்: அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி

அழகுமுத்துக்கோன் நினைவுதினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.அழகுமுத்துக்கோன் நினைவுதினம்

சுதந்திர போராட்டத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வீரமரணம் அடைந்த வீரர் அழகுமுத்துக்கோனின் 256-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகுமுத்துக்கோனின் உருவச்சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தி.தேவநாதன் யாதவ், தமிழ்நாடு யாதவ சங்க நிறுவன தலைவர் செ.சரசுமுத்து யாதவ் உள்பட யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சிகள்

பா.ஜ.க. சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க.வினரும், பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவபடத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் நினைவஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “சுதந்திர போராட்ட வீரரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவேண்டும். ஆனால் அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாதற்காக நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறவேண்டும். அழகுமுத்துக்கோனின் நினைவு மண்டபம் சீரமைக்கப்படவேண்டும்” என்றார்.

தள்ளு, முள்ளு

நடிகர் கே.ராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்த வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதால் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது என்று கூறி யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா

இளைஞர் படையை உருவாக்கி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி இந்திய விடுதலைக்காக போராடியவர் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன். 
தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அவருக்கு அவர் வசித்த கட்டாலங்குளத்தில் அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வருகிறது, 
இந்தாண்டும் வழக்கம்போல் உற்சாகம் பொங்க அழகு முத்துக்கோன் குருபூஜை விழா கட்டாலங்குளத்தில் நடைபெற்றது. அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அதன்பின்னர் திருச்சியில் இருந்து பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் கட்டாலங்குளம் சென்ற பாரத ராஜா யாதவ் வீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அழகு முத்துக்கோனின் வாரிசுகளை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார். 
தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை 7 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மஹாலில் வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவினை தலைமையேற்று நடத்தினார். 
இந்நிகழ்ச்சியில் திருச்சி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, அறந்தாங்கி பகுதிகளை சேர்ந்த யாதவ பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் திரளாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் நிறுவனரும் அதன் தலைவருமான பாரதராஜா யாதவ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று யாதவர்கள் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டார். பின்னர் சிறப்பு அழப்பாளர்களாக வந்திருந்த திருச்சி அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். 
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, பாஜகவை சேர்ந்த பார்த்திபன், இந்துமஹா சபையை சேர்ந்த ராஜசேகர், புதிய தமிழகம் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் அழகு முத்துக்கோனின் வீர தீர செயல்களை நினைவு கூர்ந்து பாராட்டி பேசினர். 
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவிநாயகா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன், பாரத முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார், கட்சியின் துணைத்தலைவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.பி.யாதவ், ஸ்ரீரங்கம் அதிமுக பிரமுகர் திருவேங்கடம் யாதவ், அரசியல் உளவாளியின் ஆசிரியர் சேதுராமன், ஆட்டுக்காரத்தெரு யாதவர் அமைப்பின் இளைஞரணி செயலாளர் ரூபன், விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே.ராஜா மற்றும் இளைஞரணி தலைவர் பிரசன்ன வெங்கடேஷ், அரவிந்த், வினோத்குமார், சூப்பர் சின்னையா, அலுவலக நிர்வாகி தாமஸ், ராமு, எடத்தெரு ராசு, பார்த்திபன், ராமு, நந்தகுமார், உதயகுமார், ரத்தினக்குமார், சரவணன், செல்வம் உள்பட பலரும் பங்கேற்று விழாவினை சிறப்புரச்செய்தனர். 
விழாவின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar