"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, July 13, 2015

258–வது நினைவுநாள்: வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ்- காங்கிரஸ் மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar