Monday, July 13, 2015
Home »
தூத்துக்குடி
,
மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா
» சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவருமான வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி 39லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவருமான வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் இருக்கும் அவரது மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் வீரன் அழகுமுத்துகோன் திருவுருவ சிலைக்கு இன்று காலை முதல் பல்வேறு சமுதாய அமைப்பினர், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து மாரியதை செய்தனர்.தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் .செ.ராஜீ ஆகியோர் அழகுமுத்துகோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அழகுமுத்துகோன் வரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் உழவர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் உதவி, முதியோர் உதவி தொகை , திருமண உதவி தொகை என 99 பயனாளிகளுக்கு சுமார் 39லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்கள்.நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான், தாசில்தார் ஜோதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு கட்டாலங்குளம் பொதுமக்கள் சார்பில் பால்குட ஊர்வலம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கோகுலம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மூர்த்தி ஏற்பாட்டின் பெயரில் அறக்கட்டளை நிர்வாகிகள் அழகுமுத்து கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.256 பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0 comments:
Post a Comment