"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம்

மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் சண்டை போன்றவை பொழுது போக்காக இன்றளவும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. முட்டுக்கிடா வளர்ப்புக்கு செம்மறி ஆடுகள் தேர்வு செய்யப்படுகின்றன

கச்சைகட்டி கருப்பாடு:

முட்டுக்கிடா' வளர்ப்புக்கு ஏற்ற இனமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கருப்பாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. கருப்பு நிறம், கம்பீர நடை, அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை... இதுவே கச்சைகட்டி கருப்பாடுகளின் அடையாளங்கள்.

40 நாள் குட்டி ரூ.4000:

கச்சைகட்டி கருப்பாடு வளர்க்கும் முருகன் கோனார் கூறியதாவது: பாட்டனார் முருகக்கோனார், தாத்தா ஆயப்பிள்ளை, தந்தை முத்துப்பிள்ளை ஆகியோரை அடுத்து நான்காவது தலைமுறையாக, கருப்பாடுகளை வளர்க்கிறேன். இந்த இனம் கச்சைகட்டியை தவிர வேறு எங்கும் இல்லை. முட்டுக்கிடா வளர்ப்புக்கு இதை விட்டால் வேறு இல்லை. முட்டுக்கிடா வளர்ப்போர் முன்கூட்டியே குட்டிகள் கேட்டு அட்வான்ஸ் கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நல்ல முறையில், ஊட்டச்த்து கொடுத்து வளர்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு குட்டி ஈனும். நுாறு ஆடுகளுக்கு ஒரு கிடா என இனப்பெருக்கத்திற்கு விடுவோம். 40 நாள் குட்டி ரூ.4000. பட்டிக்கே வந்து வாங்கி செல்வர். கச்சைகட்டி கருப்பாடு கள் முட்டுக்கிடா போட்டியில் ஒன்றுடன் ஒன்று முட்டும்போது, இருதயம் படபடவென துடிக்கும் அளவுக்கு உடைகல் உடைபடும் சப்தம் கேட்கும். இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் பல நுாற்றாண்டுகளை கடந்து கச்சைகட்டி கருப்பாடுகள் கம்பீரமாக வலம் வருகின்றன என்றார்.

தொடர்புக்கு 97506 62881.

Thursday, October 22, 2015

யாதவர் வாக்குகள் 50000 மேல் உள்ள தொகுதிகள்:

1.   செங்கம் (தனி) -திருவண்ணாமலை மாவட்டம்
2.   வந்தவாசி (தனி) - திருவண்ணாமலை  மாவட்டம்
3.   திட்டக்குடி(தனி)- கடலூர் மாவட்டம்

4.   திருவொற்றியூர்- சென்னை
5.   செஞ்சி- விழுப்புரம் மாவட்டம்
6.   புவனகிரி- கடலூர் மாவட்டம்
7.   விருத்தாசலம்- விழுப்புரம் மாவட்டம்
8.   மதுரை கிழக்கு- மதுரை  மாவட்டம்
9.   சங்கரன்கோவில்(தனி)- திருநெல்வேலி மாவட்டம்
10. கோவில்பட்டி- தூத்துக்குடி மாவட்டம்
11. திருநெல்வேலி- திருநெல்வேலி மாவட்டம்
12. பாளையங்கோட்டை- திருநெல்வேலி மாவட்டம்
13. பென்னாகரம்- தருமபுரி  மாவட்டம்
14. புதுகை- புதுகை மாவட்டம்
15. பெரம்பலூர்- பெரம்பலூர் மாவட்டம்
16. பேராவூரணி- தஞ்சை மாவட்டம்
17. திருமயம்- புதுகை மாவட்டம்
18. திருப்பத்தூர் - சிவகங்கை மாவட்டம்
19. மானாமதுரை(தனி)- சிவகங்கை மாவட்டம்
20. திருவாடனை- ராமநாதபுரம் மாவட்டம்
21. முதுகுளத்தூர்- ராமநாதபுரம் மாவட்டம்

Wednesday, October 21, 2015

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்



பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பா.குமார் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட, பால் உற்பத்தியாளர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: யாதவ சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடாக 15 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும், கால்நடை வளர்த்து வரும் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் மாட்டுத் தீவனங்களை வழங்க வேண்டும்; கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் அரண்மனை மிகவும் பழுதடைந்துள்ளது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; யாதவ சமுதாய மக்கள் அனைவரும் கால்நடைகளை பராமரித்து, பால் உற்பத்தியை பெருக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில், கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கமாரியப்பன், கருப்பசாமி, பொன்மாடசாமி, சின்னத்துரை, சின்னகருப்பசாமி, பாஸ்கரன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தென்மண்டலச் செயலர் எஸ். மரியசுந்தரம் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில், இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது இலவச கல்வியும், இலவச மருத்துவமும்தான். இக் கோரிக்கையை வென்றெடுக்கவும், மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டுசெல்லும் வகையிலும் பாளையங்கோட்டையில் வரும் 27ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக மேலிடப் பார்வையாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதரராவ் சிறப்புரையாற்றுகிறார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் பேசுகின்றனர்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியுள்ள அரசு, அதன் விவரங்களை முழுமையாக உடனடியாக வெளியிட்டு, அந்தந்த சாதியினருக்குரிய பிரதிநிதித்துவப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நான்குனேரி ஆகிய 4 தொகுதிகளை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம். முத்து, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் சிவந்திப்பட்டி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆடு திருட்டு வழக்குகளில் காவல் துறை மெத்தனம்: குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் புகார்



தேனி மாவட்டத்தில் ஆடு திருட்டு வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மெத்தனம் காட்டி வருவதாக ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அதன் விவரம்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மந்தைகளில் இருந்து ஆடுகள் திருடு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து வீரபாண்டி, ஜெயமங்கலம், கண்டமனூர், போடி ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் மந்தையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை காவலாளிகளை மிரட்டி, வாகனத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் குறித்தும், இதற்கு பயன்படுத்தும் வாகன எண்ணை குறிப்பிட்டும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திருடு போன ஆடுகளை மீட்டுத் தரவும் போலீஸார் மெத்தனம் காட்டுகின்றனர். எனவே ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, ஆடு வளர்ப்பு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். மனு அளித்த போது ஆடு வளர்ப்போர் செம்மறி ஆடுகளுடன் வந்திருந்தனர்.

Monday, October 19, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது

தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று 70–க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள், மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார், முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது பேரணியில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23) என்ற வாலிபர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar