Sunday, July 28, 2013
Home »
» யார் தமிழ் கடவுள்?
யார் தமிழ் கடவுள்?
கண்ணன் ஏதோ வட நாட்டு கடவுள் போல ஒரு மாயையை ஒரு சிலர் உருவாக்கியுள்ளனர்!!!
பழந்தமிழர்கள் வணங்கியது இயற்கையை அவை தான் தெய்வங்களாகவளர்ச்சி பெற்றது பழந்தமிழர்கள் வணங்கிய இரு பெருந்தெய்வங்கள்
மாயோன்,சேயோன் இவர்கள் தான் இன்றைய பெருமாளும் ,முருகனும் .
" மாயோன் மேய காடுறை உலகமும்"
" சேயோன் மேய மைவரை உலகமும்"
என்று முதலில் முல்லை நில மாயோனை சொல்லிவிட்டுஅப்புறம் தான்குறிஞ்சி நில சேயோனை சொல்கிறார் தொல்காப்பியர்.இதுவரை துணியப்பட்டுதில் தொல்காப்பியம் தான் மிக மிக பழமையான நூல்! இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம்.
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.
(இந்த காலக்கட்டதில் இந்தி மொழி இல்லை இந்தியா முழுவதும் தமிழும் சமஸ்கிரதமும் தான் இருந்தது.இன்று மொழி தான் மாறி உள்ளதே தவிர குலத்தொழில் மாறவில்லை. கடவுளும் மாறவில்லை)
இந்த தமிழ் இலக்கியத்தில் முல்லை நிலம் முதலில் வரும் பெரும்பாலான நுல்களில் குறிஞ்சி தான் முதலில் வரும் (இது ஒரு ஆராய்ச்சிக்கு உட்பட்டது) முல்லை நிலம் பற்றியம் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியுமா நான் முந்தய பதிப்புகளில் குறிப்பிட்டுளேன். பெரும்பாளும் தமிழ் நூல்கள் மனிதனின் வளர்ச்சியை கொண்டுதான் தொகுக்கபட்டிருக்கும்.இதன் முலம் முல்லை நிலம் தான் மனிதனின் முதல் வளர்ச்சி என அறிய முடிகிறது.அங்கு தமிழ் மக்கள் வணங்கிய கடவுள் தான் திருமால் இந்த திருமால் தான் மொழிகளின் தோற்றத்தால் கிருஷ்ணன் ஆனார்.
தமிழில் முதன் முதலில் தொகுக்கபட்ட நூல் முல்லை நிலம் பற்றியும் அங்கு வாழந்த ஆயர்கள்(இடையர்கள்,கோனார்,யாதவர்)பற்றியும் உள்ளது.
ஆனால் கிருஷ்ணன் எப்படி வடநாட்டு கடவுள் என்று எப்படி கூறுகிறார்கள்
Related Posts:
மராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா ஜூலை 11 அன்று மாலை 5 மணிக்கு மராட்டிய மாநிலத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பா தேசிய தலைவர் அய்யா டாக்டர் D.தேவநாதன் யாதவ் அவர்களின் ஆணைக்கனங்க . மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா . … Read More
வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜை:கோகுல மக்கள் கட்சி சென்னை: வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜையை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கோகுல மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.வீரன் அழகுமுத்துகோனின் 258வது குருபூஜையை முன்னிட்டு நாளை மறுதின… Read More
Scholarship for New Entrants -2015 - IIT's IIM's and M.S./ M.D It is a pleasure to inform all that "Shri Krishna Charitable Trust" under the aegis of All India Yadav Mahasabha has started eleven Scholarships each of Rs. 11,000 p.a. for those students who are studying in IIT's, IIM's … Read More
Civil services Examination - 2014 Vandana Rao attained this 4th rank without help of any coaching From a rural family background She focussed so much so that stop going outside home. List of others who passed and their rank inCivil services Examinaion 20… Read More
வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் மடம் போல் காட்சியளிக்கும் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரன் அழகுமு… Read More
WELL DONE சகோதரா அருமை தங்கள் பணி நம் சமுதாய மேன்மையை மேலும் அதிகரிக்கும்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி சகோதரா
Delete