"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, December 26, 2013

ஆ. கார்மேகக் கோனார்

கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவார். எழுத்தாளர்.
கார்மேகக் கோனார்
  

பிறப்பு
கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
பணி

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்: 
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா
தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம்
நிலச்சீர்திருத்தப் போராளி கிருட்டிணம்மாள் செகநாதன் *அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி

இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

ஆக்கங்கள்

இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்: 
அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்) 
ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்) 
இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்) 
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள் 
ஒட்டக்கூத்தர் 
கண்ணகி தேவி 
காப்பியக் கதைகள் 
கார்மேகக் கோனார் கட்டுரைகள் 
கார்மேகக் கோனார் கவிதைகள் 
செந்தமிழ் இலக்கியத்திரட்டு I 
பாலபோத இலக்கணம் 
மதுரைக் காஞ்சி 
மலைபடுகடாம் ஆராய்ச்சி 
மூவருலா ஆராய்ச்சி 
தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை) 
தமிழ்மொழியின் மறுமலர்ச்சி 
நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்) 

 

Related Posts:

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar