இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!
மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)
முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)
திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்
தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்
பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்
இடையர்குலத்தில்பிறந்தவன்
பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்
யசோதையால் இடையில் கட்டுண்டவன்
இரண்டு மரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்று மோட்சமளித்தவன்)
காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்
0 comments:
Post a Comment