"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, May 3, 2014

கோனார் கடை - Konaar Kadai

உணவு வகைகளுக்கு பிரபலமான மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கோனார் கடை இன்றளவும் பிரபலமாக உள்ளது.
முதலில் சுந்தரக் கோனார் என்பவர் கடை ஆரம்பித்து  இட்லி சுட்டு விற்று வந்தார். கடை ஆரம்பித்த புதிதில் பெயர் பலகை எதுவும் கிடையாது, கடைக்கு வருபவர்கள் "கோனார் கடை" என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே பெயராக மாறி விட்டது. கால மாற்றத்திற்கேற்ப தாமும் மாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பையன் மாணிக்கம் கறி தோசையை அறிமுகப்படுத்தினார். அது இன்றும் மதுரை மக்கள் மட்டுமில்லாமல் வெளியுர்காரர்களும் விரும்பும் உணவு வகையாக உள்ளது. ஒருதடவை ருசித்து விட்டால் அதன் சுவை நாவை விட்டு அகலாது. அதன் சுவையின் ரகசியம் வீட்டுப் பெண்கள் மசாலா தயாரித்து தருவதுதான்
கோனார் கடை கறி தோசை செய்முறை : (4 பேர் சாப்பிடக் கூடிய அளவு )
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி 1/4 படி
உளுந்து 100 கிராம்
ஆட்டுக்கறி 400 கிராம்
நல்லெண்ணெய் 200 மி.லி
முட்டை 4 ( ஒரு தோசைக்கு ஒன்று)
கோலா உருண்டை - தேவையான அளவு
தக்காளி 1/4 கிலோ
மிளகு 25 மி.கி
சீரகம் 200 மி கி
வத்தல் 20 மி கி
செய்முறை :
புழுங்கலரிசியையும் உளுந்தையும் கலந்து அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  கறியை பொடிப் பொடியாக வெட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.  தக்காளியையும் வத்தல் பொடியையும் கலந்து கறி வேகும் போது போட வேண்டும்.  மிளகையும் சீரகத்தையும் கலந்து பொடியாக்கி கறி வெந்த பிறகு போட வேண்டும்.  தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கறியை நன்றாக வதக்க வேண்டும்.  பின் தோசை மாவு ஒரு கரண்டி எடுத்து ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிண்டி விட வேண்டும்.  கறி வறுவலை தோசை மேல் தூவி எண்ணெய் ஊற்றி வேக வைத்து புரட்டிப் போட்டால் கறி தோசை ரெடி !

இட்லி,இடியாப்பம்,முட்டை தோசை,நெஞ்சுக் கறி குழம்பு ,சுக்கா,கோலா ஆகியவையும் இங்கு பிரபலம்.ருசியில் மட்டுமில்லாமல் சுத்தம் மற்றும் சுகாதாரத்திலும் கவனம் செலுத்துகின்றனர். நயம் தும்பை எண்ணெய்தான் உபயோகிக்கின்றனர். அரசியல் பிரமுகர்களும்,திரைப்படப் பிரபலங்களும் இங்கு வந்துள்ளனர். இது அசைவ உணவகம் என்றாலும் மீன் வகைகள் கிடைப்பதில்லை. காரசாரமான அசைவ உணவு வேண்டுவோர் இங்கு செல்லலாம். மதுரை சிம்மக்கல்லில் இந்த உணவகம் அமைந்துள்ளது. தற்போது அண்ணாநகர் ஏரியாவிலும், தங்கரீகல்  திரைப்படக் கொட்டகை அருகிலும் இதன் கிளை உணவகங்கள் இயங்குகின்றன.

கடை இயங்கும் நேரம்: 11:30 AM to 11:00 PM
தொடர்பு விபரங்கள் 
முகவரி: சிம்மக்கல் , மதுரை, இந்தியா 625001
தொலைபேசி: 088 07 7799 96 
நன்றி:நம்மதுரை

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar