"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Saturday, August 29, 2015

1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை:

ராமநாதபுரம்:1,90,237
வட ஆற்காடு:1,60,003
திருநெல்வேலி:1,57,530
தென் ஆற்காடு:1,40,058
தஞ்சை:1,17,984
திருச்சி:1,15,934
செங்கல்பட்டு:1,13,563
மதுரை:83,802
மதராஸ்:23,611
கோயம்புத்தூர்:22,973
கன்னியாகுமரி:6,905
நீலகிரி:416
இது தமிழ் பேசும் இடையர்களுடையது மட்டுமே.
குறிப்பு:
1921 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட 1931ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மக்கள் தொகை குறைந்ததாக ஒரு புகார்.

தெலுங்கு பேசும் இடையர்கள் இந்த கணக்கெடுப்பின் போது நாயுடு என பதிவு செய்தார்கள்.ஆனால் அவர்கள் இப்போழுது யாதவா என பதிவு செய்கின்றனர். இவர்களும் கணிசமான அளவு தமிழக்த்தில் வசிக்கின்றனர்.

Wednesday, August 26, 2015

கோகுல‬ ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா


அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது

கோகுல‬ ஆழ்வார் கூட்டத்தில்
ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா
அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


இவண்,

கோகுல ஆழ்வார் பொதுமக்கள்

யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா

விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது.




எங்கள் ஊரில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம் -
இராம. வைரமுத்து,
வழக்கறிஞர்,
 செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,
 சொக்கநாதன்புத்தூர்

Monday, August 24, 2015

அழகுமுத்து கோன் கவிதை:கோ.கருணாமூர்த்தி தஞ்சை


வெள்ளையனை மிரளவைத்த முதல் வீரனே
 விடுதலைக்கு வாலெடுத்த வாழும் வீரமே 
மண்டியிடச்சொன்னால் வானம் பனியுமா 
மறணபயம் தந்தால் தன்மானம் குறையுமா 
தாய்மண் மானம்காத்த வானம் நீ
 மயிர்போனால் உயிர்துறக்கும் மான் ஜாதி நீ 
சத்தமிட்ட பீரங்கியை சலமின்றா முத்தமிட்டாய் 
அங்கமெல்லாம் சிதைந்தபோதும் தங்கமகன் நீதான்



அழகுமுத்து நமது சொத்து
அச்சம்விட்டு மார்புதட்டு 
ஆயர்களின் நாயகனை நெஞ்சினிலே பச்சைகுத்து 
தடைபோட யாருமில்லை நடைபோடு தயங்காமல் 
யாதவன் யாரவன் வரலாற்றிலே 
ஆதவன் தூயவன் மாதவன் கடவுளும் யாதவன்



கோ.கருணாமூர்த்தி, 
புதுக்குடி,தஞ்சை

Friday, August 21, 2015

ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன்

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.

மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக இருந்தது. பெரிய விலங்குகளை வளைத்து வேட்டையாடக் “கூட்டு வேட்டையும்“ தேவைப்பட்டது. வேட்டைக்காக இணைந்த மக்கள் தங்களுக்குள் வேட்டைப் பொருளினை ஓரளவிற்குச் சமமாகவே பகிர்ந்துகொண்டனர். ஆக, அக்காலத்திலே “பங்கீடும்“ அவர்களிடையே உருப்பெற்றுவிட்டது.

வேட்டையிலிருந்து வளர்த்தலுக்கு

வேட்டை உணவினை நாளும் தேடி அலையாமல் அவ் உணவினைத் தாமே பேணிப் பின் உண்ணும் திட்டம் காலச்சூழலில் ஏற்பட்டது. அவர்களின் வளர்ப்பு விலங்குகளாகப் பசுக்கள் இருந்தன.ஆடுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் பசுக்கள் அளவுக்கு முதன்மையாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலுமாக வேட்டையைக் கைவிட்டு, தம் உணவினைத் தாமே வளர்க்கத் தொடங்கினர். அவற்றை மேய்ப்பதே அவர்களின் தொழிலாகியது. அவர்கள் பயறு, வரகு, தினை, கொள், அவரை, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பசுக்களை வளர்க்கும் கூட்டங்கள் பெருகித் தனித்தனியே
வாழத்தொடங்கியன. அக்கூட்டங்களுக்குரிய உடைமைப் பொருளாகப் – சொத்தாகப் பசுக்களே இருந்தன. ஆதலால்தான், “மனித குலத்தின் முதல் உடைமை பசுக்கள்“[1] என்று வெ.மு. ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளார். அவையே அவர்களின் அசையும் சொத்து. அவர்களின் பொருளாதாரமும் உணவாதாரமும் அவையே. அவற்றால் கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வளங்களும் (பால் உட்பட பிற அனைத்தும்) அவர்களுக்கு முதன்மையாக இருந்தன. ஆதலால், அச்சமூகச் சூழலில் பசுக்கள் முதன்மையிடத்தினைப் பிடித்தன.

வேட்டையிலிருந்து கொள்ளைக்கு

வேட்டையை மறக்காத அதாவது, வளர்த்தலில் நாட்டமில்லாத கூட்டம் வேட்டையைக் கொள்ளையாக மாற்றிக்கொண்டது. இது, மனிதகுல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை. சில வேடர்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தமைகான சிறு தடயங்கள் புறநானூற்றின் 323 மற்றும் 325 ஆம் பாடல் அடிகளில் காணப்படுகின்றன. அவர்கள் தோரை, ஐவனம், தினை ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்பர். (ஆ – பசு. நிரை – கூட்டம்). ஆநிரைகளைக் கவரும் (திருடும்) கூட்டங்களும் (வேடர்) ஆநிரைகளை வளர்க்கும் கூட்டங்களுக்குச் (ஆயர்) சம அளவிலும் அவர்களுக்கு எதிர்நிலையிலும் இருந்தன. ஆயர் கூட்டத்தினர் காடுகளிலும் (முல்லைத்திணை), வேடர் கூட்டத்தினர் மலைகளிலும் (குறிஞ்சித்திணை) தங்களின் முகாம்களை அமைத்துக்கொண்டனர்.

பசுக்களைக் கொள்ளையடித்தவர்கள் மழவர், மறவர், எயினர், வேடர், குறவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும் பசுக்களை வளர்த்தவர்கள் ஆயர், கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும்ச் சங்க இலக்கிய அடிகள் சுட்டியுள்ளன.

பசுக்களை வளர்த்த இக்கூட்டத்தாருக்குள்ளும் பசுக்களைக் கொள்ளையடிக்கும் வழக்கமும் இருந்துள்ள தகவலைப் புறநானூறு 257ஆவது பாடல் தெரிவித்துள்ளது. “உடைமை“ என்று வந்தபின்னர் அதனை எப்படியாவது அபரிமிதமாகப் பெருக்கும் போக்குகளுள் ஒன்றாகத்தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.

திருடுதலும் தடுத்தலும் (அல்லது) மீட்டலும்

வேடர்கள் ஆநிரைகளைத் திருடவருதலும் அவர்களிடமிருந்து அவற்றை ஆயர்கள் காத்தலும் ஆகிய இவ் இரு நிலைகளும் சங்கத்தமிழரின் தொடக்கக் காலத்தில் தவிர்க்கமுடியாத வாழ்வியல் நிகழ்வாக இருந்தன.

பின்னாளில், இத்திருட்டு (கொள்ளை) வீரம் சார்ந்ததாகக் கருதப்பட்டது. திருடுதலும் திருட்டினைத் தடுத்தலும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டலும் வீரமாகவே போற்றப்பட்டன. திருடுதலை வெட்சித்திணை என்றும் திருட்டினைத் தடுத்தலை அல்லது பறிகொடுத்த ஆநிரைகளை மீட்டுவருதலைக் கரந்தைத்திணை என்றும் தமிழர்கள் புறத்திணைகளை வகுத்து வளர்த்தனர். இப்பாகுபாடு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பிற்கால இலக்கணநூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

களவும் கற்பும்

ஒவ்வொரு திணைக்கும் (திணை – ஒழுக்கம்) அகம், புறம் என்ற இரண்டு இணையான செயல்படு ஒழுக்க நிலைகள் உண்டு. அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழு. குறிஞ்சித்திணைக்கு ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணின் மனத்தினைக் களவாடுதல் (களவு – திருட்டு) அகத்திணையாகவும் உணவுக்காகப் பிறர் வளர்க்கும் ஆநிரைகளைக் களவாடுதல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

முல்லைத்திணைக்குப் பெண் தன் கற்பினைக் காத்தல் (காத்தல் – பேணுதல்) அகத்திணையாகவும் தம் பொருளாதாரமான ஆநிரைகளைக் காத்தல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

குறிஞ்சி என்ற அகத்திணைக்கு வெட்சி என்ற புறத்திணையை இணையாகக்கொள்வது தமிழர் வழக்கம். அதனைப் போலவே முல்லை என்ற அகத்திணைக்குக் கரந்தை என்ற புறத்திணை இணையாகக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

திருட்டும் வீரமும்

வேடர் முதலான இனக்குழு மக்கள், ஆயர் முதலான இனக்குழு மக்கள் மேய்க்கும் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துத் திட்டமிட்டுக் கூட்டமாகச் சென்று திருடும் அல்லது கொள்ளையிடும் வழக்கத்தில் சங்கத் தமிழரின் உடல்வலிமை வெளிப்படுத்தப்படுவதால் இது அக்காலத்தில் வீரமாகவே கருதப்பட்டது.

ஒரு வகையில் இதனைக் “கூட்டுவேட்டை“ என்று தமிழாய்வாளர்கள் கூறிக்கொண்டாலும் என் கணிப்பில் இது திருட்டுதான் – கொள்ளைதான்.

இத்திருட்டினைத் தடுப்பவர்களை அல்லது தங்களது ஆநிரைகளை இழந்தவர்கள் அவற்றை மீட்கப்போராடுவதனை வீரம் என்று கொள்ளலாம்.

சங்க இலக்கிய அடிகள் இத்திருட்டினை “ஊர்ப்பூசல்“, “ஆகோள்“, “ஆகோள் பூசல்“ என்று சுட்டியுள்ளன. அதாவது, “சண்டை“ என்ற பெயரில். இது போர் அல்ல.

இத்திருட்டினை நடத்தத் தலைமைதாங்கும் இனக்குழுத்தலைவனை “உரையன்“, “நெடுந்தகை“, “மதவலி“ என்று சங்க இலக்கிய அடிகள் அழைத்துள்ளன. இத்திருட்டிற்குத் துணைபோகும் வேடர்களை “மீளியாளர்“ என்றும் இத்திருட்டினைத் தடுக்கும் ஆயர்களை “மறவர்“ என்றும் அவ் இலக்கிய அடிகள் குறிப்பிட்டுள்ளன.

திருடலாம்

வேடர் இனக்குழு ஆண்கள் இத்திருட்டு நடவடிக்கைக்கு ஆயத்தமாவது குறித்துச் சங்க இலக்கிய அடிகள் பல உள்ளன. இவர்கள், காரை மரத்தின் பழம் போல் விளைந்த கந்தாரம் குடித்து, பச்சை இறைச்சி (பச்சூன்) அதாவது, அன்று கொல்லப்பட்ட விலங்கின் தசையை உண்டு, மது அருந்தி தெம்பாகச் சென்றுள்ளனர்.(புறநானூறு – 258, 269.) ஒருவிதத்தில் இது அவர்களுக்கு இறுதி உணவாகக் கூட இருக்கலாம் அல்லவா? கொள்ளை நிகழ்ச்சியில் இவர்கள் பிடிபட்டு இறக்கவும் வாய்ப்புள்ளதே!

திருடும் வெட்சியினர் வில்லையும் அம்பினையும் பயன்படுத்தியுள்ளனர். (புறநானூறு–259.) இவர்கள் பசுக்களைக் கொள்ளையடித்து வெற்றியுடன் வரும்போது அதனைக் கொண்டாடுவதற்காக, கொள்ளையடித்துக் களைத்துவருபவர்களுக்கு வழங்குவதற்காக முதிய சாடியில் “கள்“ நிறைத்து வைத்துள்ளனர். (புறநானூறு – 258.) அதுமட்டுமல்ல, தங்கள் (கொள்ளைத்) தலைவனை வரவேற்க ஊரில் பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, கள், இறைச்சி படைத்துள்ளனர். துடிப்பறையை முழக்கயுள்ளனர்.

அக்காலத்தில் விழா கொண்டாடப் “புதுமணல் பரப்பும் வழக்கம்“ இருந்துள்ளது. அக்காலத் திருமணம் பற்றிக் கூறும் அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்களில் புதுமணல் பரப்பும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் கொள்ளையை விழா போலக் கொண்டாடியுள்ளனர்.

வெட்சியினர் நள்ளிரவில் பதுங்கிச்சென்று ஆநிரைகளைக் களவாடி விடிவதற்குள் தம் இருப்பிடத்திற்கு வந்துசேர்கின்றனர். வந்தவுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து.

ஒன்று – தன்னை நம்பியிருக்கும் கூட்டத்திற்கும் தன்னோடு திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் உள்ள உணவுத்தேவைகளை உடனே பூர்த்திசெய்யும் உபசரிப்பு எண்ணம்.

இரண்டு – கொள்ளையடித்து வந்த ஆநிரைகளை மீண்டும் கூட்டமாக வைத்திருந்தால் கரந்தையர் வந்து அவற்றைக் கைப்பற்றிச் செல்ல எளிதாகிவிடும் என்ற எச்சரிக்கை எண்ணம்.

மீட்கலாம்

கொள்ளையடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்டுவரச் செல்லும் ஆயர் வீரனுக்கு ஆயர் குழுவினர் “கரந்தைமாலை“யை அணிவித்து அனுப்புவதனைப் புறநானூறு – 280 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

திருட்டினைத் தடுக்கும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டுவரும் கரந்தையினர் வாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூறு 259ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

அவன் அப்போரில் வீரமரணமடைந்துவிட்டால் அவனுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்குப் “படலை மாலை“யைச் சூட்டி வழிபடும் மரபு இருந்துள்ளது. புறநானூறு – 265.

அறிவொளி

வெட்சியினரான வேடர்களைக் கல்வியறிவற்றவர்களாகப் புறநானூறு 263ஆவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது. அப்படியென்றால், கரந்தையினர் கல்வியறிவுடையவர்களா? ஆம். அவர்கள் ஆநிரையைக் காக்க அல்லது பறிகொடுத்த ஆநிரையை மீட்டுவர நிகழ்த்தப்பட்ட கரந்தைப் பூசலில் உயிர்துறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். (புறநானூறு – 260) அந்த நடுகல்லில் இந்த நபர், இந்த இடத்தில், இவர்களுடன் நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணமடைந்தார் என்ற செய்தியினைத் “தமிழி“ எழுத்தில் எழுதியுள்ளனர். (புறநானூறு – 260). இவற்றைப் பற்றி ராஜ் கௌதமன், “பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்பட்ட அம்சம் போலத் தெரிகிறது“[2] என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து இந்த முறை தொடர்ந்து வந்துள்ளது. முடிமன்னர் காலத்தில் இது சடங்காக மாற்றப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.

திருடுதல் ஒரு சடங்காக மாற்றப்படுதல்

இனக்குழு நிலை நலிவடைந்து அதாவது, பெருங்கற்கால நாகரிக எச்சங்கள் முற்றிலும் மறைந்து முடிமன்னராட்சி மலர்ந்தபோது, இத்திருட்டும் திருட்டினைக் காத்தலும் அல்லது பறிகொடுத்த பசுக்கூட்டத்தை மீட்டலுமாகிய வெட்சியும் கரந்தையும் பெரும்போருக்கு முன் நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகக் கைக்கொள்ளப்பட்டன.

இங்குப் பசுக்களைத் திருடுதல் “கவர்தல்“ என்ற சொல்லாலும் பசுக்களைக் கவரச்செல்லும் வீரர்கள் வெளிப்படுத்தும் வீரம் பூசல் என்று அழைக்கப்படாமல் “போர்“ என்ற சொல்லாலும் புலவர் மரபினரால் குறிக்கப்பட்டுள்ளன.

அதாவது, முடிமன்னர்கள் வேடர் முதலான இனக்குழு மக்களின் தலைவர்களை அழைத்து தம் எதிரி நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர (கொள்ளையிட) ஆணையிட்டுள்ளனர். இதற்கு, “வேந்து விடு தொழில்“ என்று பெயர். “பெரும்போரில் ஆநிரைகள் அழியாமல் காத்தல் வேண்டும்“ என்ற உயிர்நேய நோக்கோடு அச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்று கருதவேண்டும்.

அச்சடங்கின் ஒரு பகுதியாகப் பசுக்கூட்டத்தினைக் கவரச்செல்லும் (திருட்டு அல்ல) வீரர்கள் வெட்சிப்பூவையும் திருட்டினைக் காக்கும் அல்லது திருடப்பட்ட பசுக்களை மீட்கும் வீரர்கள் கரத்தைப்பூவையும் சூடும் வழக்கம் ஏற்பட்டது. இவை அச்சங்கிற்கான அடையாளப் பூக்களாக மாறின.

முடிமன்னர்கள் வெட்சிவீரர்கள் கைப்பற்றி வந்த பசுக்கூட்டங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல் வெட்சித்தலைவனுக்கும் அவனோடு சென்று வெட்சிப் போரினை (இது பூசல் அல்ல) நிகழ்த்த உறுதுணையாக இருந்த வெட்சிவீரர்களுக்கும் அவர்களுக்குரிய வரிசை அறிந்து பங்கிட்டுக்கொடுத்தனர். இது அவர்களுக்குரிய பரிசு அல்ல ஊதியம் என்று கருதவாய்ப்புள்ளது. அதாவது இத்தகைய இனக்குழு வீரர்களைத் தமது அடியாட்களாக மட்டும் (படைவீரர்களாக அல்ல) முடிமன்னர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

மார்க்ஸிய நோக்கில் இந்த வெட்சி வீரர்களின் வாழ்க்கையை ஆராயும்போது, இவர்களின இந்நிலைக்கு “உடைமைச் சமூகத்தின் பேராசையே காரணம்“ என்று எண்ணத்தோன்றுகிறது. மலைகளில் வேட்டையாடும் வேடர்கள் காடுகளில் கொள்ளைக்காரர்களாக மாறி, பின்னர் முடிமன்னர்களுக்கு அடியாட்களாக மாறிவிட்டது காலப்பிழைதான்.

– – –
ஷாஜகான் கனி, வெ.மு., “மனிதகுல வரலாறும் தொல்காப்பியமும்“, ஆய்வுக்கோவை – 2006, ப. 2346.
ராஜ்கௌதமன், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்,ப.13.

Thursday, August 20, 2015

தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா

வணக்கம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது. 
இதன் தொடக்கவிழா செப்டம்பர் மாதம் முதல் தேதி (01.09.2015) மாலை 5 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், கிருஷ்ணஜெயந்தி சமூக நல்லிணக்க விருந்து வழங்கும் விழா நடைபெறுகிறது. தங்களுடைய பங்களிப்புடன் நடைபெறும் இவ்விழாவில், தாங்கள், தங்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். 
ர. குணசீலன்,
துணைத்தலைவர்

உறுப்பினர்களுக்கு உதவும் மதுரை ஆட்டிறைச்சி சங்கம்

ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார், நல்லதம்பி கோனார், சுப்பிரமணிய கோனார், தலைமை கணக்கர் தனுஷ்கோடியா பிள்ளை முயற்சியால் வாங்கப் பட்டது,'' என்கிறார் சங்க செயல்பாடுகளை அறிந்த வரதராஜன்.மதுரை ஆட்டிறைச்சி சங்கம், தமிழகத்தில் உள்ள இறைச்சி வணிக சங்கங்களில் மிகப்பெரியதும், தென்னகத்தில் பெயர் பெற்றதுமாகும். 1953-54ல் ஆட்டிறைச்சிக்கு அரசு விதித்த வரியை விலக்க,திருப்பூரில் அமைச்சர் ரோச்விக்டோரியா தலைமையில் மாநாடு நடத்தி, சாதித்து காட்டி சாதனை படைத்தது இச்சங்கம்.சங்க உறுப்பினர்களுக்கு இலவச தராசு, படிக்கற்கள், வட்டியில்லா கடன், உறுப்பினர்கள் மறைவிற்கு இறுதிச்சடங்கு செலவு பல உதவிகளை சங்கம் பார்த்துக் கொள்கிறது. ஆடறுக்கும் போது சிந்தும் ரத்தத்தை சேகரித்து, விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி திருவிழாவில், பிரசாதம் வழங்குகின்றனர். ஜாதி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோனார்கள், பிரமலைக் கள்ளர்கள், முஸ்லிம்கள் இணைந்து சங்க பொறுப்புகளை கவனிக்கின்றனர். இன்று 450 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ந.முத்துராமலிங்கம், செயலாளராக ரா.நவநீதனும் உள்ளனர்.

நெல்லையப்பரும் ராமு கோனாரும்


திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.


கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர்

Wednesday, August 19, 2015

பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.

இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)

ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’

என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.

Monday, August 17, 2015

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை




69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் மாரிக்கோனார் தலைமையில் விழா சிறப்புடன் நடைபெற்றது இந்த நிகழச்சி கோகுலம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திரு மூர்த்தி யாதவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.








அந்தணர் வளர்த்த யாதவப்பெண்


அந்தணர் வளர்த்த யாதவப்பெண்:

ஸ்ரீ வில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில் அவதாரம் எடுத்தாள் பூமா தேவி. அவளை கண்டெடுத்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கோதை என்ற பெயரில் வளர்த்து வந்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட கோதை கண்ணன் மீது காதல் கொண்டு அவனை அடைந்தாள்.

கோதை இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள். ஆண்டாள் தெய்வமாகவும் ஆழ்வார்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் திருப்பாவை அருளினார்.

தான் அருளிய திருப்பாவை மூலம் தன்னை ஒரு யாதவ பெண்ணாக உணர்த்துகிறாள்.

ஆயர் குல பெருமக்கள் அனைவராலும் பூஜிக்கப்பட தெய்வம் ஆண்டாள்

எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு

எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர், எம்.ஆர்.கே.மெய்யப்பன், ஓ.எம்.பி.ராமதாஸ், என்.தேவதாஸ், ஏ.எஸ்.பழனியாதவ், பி.தங்கராஜ், எம்.வி.புண்ணிய சேகர், எம்.சங்கர், எஸ்.செல்வம், வி.ராஜீ, மயிலை கிருஷ்ணன், பி.ஆர்.முத்து, காளிதாஸ் யாதவ், வேல் தளபதி, பி.மகாலிங்கம், சி.எஸ்.தனசேகரன், எஸ்.பாலுச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தென்சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய 37 யாதவர் நலச்சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றிருந்தனர்.

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Thursday, August 13, 2015

யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா:தெற்குப்பட்டி,நெல்லை

நெல்லை மாவட்டம்
தெற்குப்பட்டி
கிராமத்தில் ஆகஸ்ட் 13 அன்று
யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா
நடைபெறுகிறது.யாதவ சொந்தங்களை
வருக வருக என அழைக்கிறோம்.








இவண்
தெற்குப்பட்டி யாதவர் இளைஞர் சங்கம்
மற்றும் KM சுவாமிஜீ யாதவ் பேரவை

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை


பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் .. 
கோவில் திருப்பணி குழுவினர் ,
படமாத்தூர் .
தொடர்புக்கு 
செல்: 9566782141, 7639962947

Wednesday, August 12, 2015

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி



விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து அழகுமுத்து கோன் அவர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, சுமார் 256 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விடுதலைக்கு முதல் குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இரவு நேரத்தில் கைது செய்து பீரங்கி வாயில் கட்டி, சுதந்திர போராட்ட வரலாற்றில் முதல் களப்பலியான அழகுமுத்து கோன் அவர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறினார், அவருடன் யாதவர் தன்னுரிமைப் பணியகத்தை சார்ந்த பேராசிரியர் பெரி கபிலன் மற்றும் எ.சுகுமார் ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் உள்ள யாதவர் சமுகத்தின் 19 ஆண்டு கால கனவாக இருப்பதாகவும் தெரிவித்தனர், இதை ஆர்வமுடன் கேட்டுவிட்டு கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் மிக விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்தார்.

நன்றி - யாதவர் தன்னுரிமைப் பணியகம் - தில்லி

Tuesday, August 11, 2015

செப்டம்பர் 12-ம் தேதி சமாஜ்வாடி மாநில மாநாடு

சமாஜ்வாடி மாநில மாநாடு:
Samajwadi Party State Conference in Sep12 @ Madurai, Tamilnadu.

செப்டம்பர் 12-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள சமாஜ்வாடி மாநில மாநாடில் திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள யாதவ சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆயர் குல ஒற்றுமையை பறைசாற்றுங்கள்...


கண்ணன் யாதவ் 9655647651
மதுரை மாவட்ட தலைவர்








Jai Yadav Puraskar Awards for the year 2015

Jai Yadav Jai Madhav Trust proudly presents Jai Yadav Puraskar Awards for the year 2015 for the exceptional and distinguished services in the fields of Leadership, Literature, Civilian, Patriotic, and Particular.
The award seeks to recognize work of any distinction and is given for distinguished and exceptional achievements/service in all fields of activities/disciplines, such as
=> Art,
=> Literature & Education,
=> Sports,
=> Medicine,
=> Social Work,
=> Science & Engineering,
=> Public Affairs,
=> Civil Service,
=> Trade & Industry etc.
With in the community All persons without distinction of occupation, position or sex are eligible for these awards.
To nominate your self or to recommend your near and dear for the Jai Yadav puraskars-2015 awards please like the below page and stay tuned for future updated...
stay tuned...
www.facebook.com/jaiyadavpuraskars
http://www.jaiyadavpuraskars.org/

Friday, August 7, 2015

இராமநாதபுரம் மாவட்டதில் மாவீரனின் அழகு முத்து கோன் திருவுருவச்சிலையை நிறுவுவ கோரி யாதவர் தேசிய பேரவை போராட்டம்12.8.2015

அன்பு யாதவர் சொந்தங்களே!
வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில்
இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர் 
நம்முடைய முதல் போராட்டக்களம்
இராமநாதபுரம் மாவட்டதில் 
மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும்
நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம்
பெயரு
க்கு தான் ஜனநாயகம்
அரசாங்கம் மக்களை மக்காளாக பாவிக்கவில்லை
மக்களை ஒட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது
அதனால் ஒற்றுமையோடு வாய்திறந்து கேட்பவனுக்கு எல்லாம் கிடைக்கிறது
தமிழக அளவில் நம் சமுதாயத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையை விழச்செய்வது நமது கடமை
சிந்திப்பீர் சொந்தங்களே
12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் இராமநாதபுரம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் அவசியம்
இன உணர்வுள்ள யாதவனே சிந்தித்து செயல்படு
நம்முடைய முயற்சி நமக்காக மட்டுமல்ல
நம்முடைய வருங்கால சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக
வாழ்க யாதவம்
வளர்க யாதவர் ஒற்றுமை!தலைவர்.A.K.பூமிராஜன்யாதவ் .A. கரந்தமலை கண்ணன்யாதவ் மாநில பொதுசெயலாளர் அவர்கள்.அழைக்கிறது..யாதவர் தேசிய பேரவை.9047996890..9047274365

Wednesday, August 5, 2015

வெள்ளலூர் தனிக்கல்வெட்டு

கொங்கு நாட்டில் பண்டைக்காலத்தில் கால் நடை வளர்ப்பே மேலோங்கியிருந்தது. “ ஆகெழு கொங்கு “ என்பது சங்க இலக்கியம் ஒன்றில் பயில்கின்ற தொடர். மலைப்பகுதியிலும், சமவெளியிலும் கால் நடைகளை மேய்த்து வளர்த்தனர். கொங்குப்பகுதியில் வழங்கும் “பட்டி”, “தொழு” ஆகிய சொற்கள் கால் நடை வளர்ப்பை ஒட்டி எழுந்தவையாகும். சோழர்களின் ஆட்சி கொங்குச்சோழர்களின் மூலம் நடைபெறத்தொடங்கியது முதலே வேளாண்மை முதன்மை பெற்றது. இருப்பினும், கால் நடை வளர்ப்பு என்பது கொங்கு மக்களின் பிரிக்கமுடியா அங்கம். கால் நடை வளர்ப்புக்குப் பொறுப்பேற்றவர்கள் இடையர்கள். “யாதவர்” என வழங்கப்பட்டவர்களும் இவரே. கல்வெட்டுகளில் இவர்கள் “கோன்” , “கோனார்” எனக் குறிக்கப்படுகிறார்கள்.


கோவில்களில், நந்தா விளக்கு எரிக்கவும், அமுதுபடி (நைவேத்தியம்) மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவும் தேவைப்படும் நெய் இந்த இடையர்களிடமிருந்தே பெறப்பட்டது. இது கல்வெட்டுகள் சொல்லும் செய்தி.”சந்தியா தீபம்” என்னும் கோவில் விளக்கு ஒன்றுக்குத் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில் நிவந்தம் அளிக்கப்பட்டது. இதிலிருந்து, கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் இடையர்களின் செல்வாக்கு ஆகியவை பற்றி உணர்ந்துகொள்ளலாம். அத்தகு இடையர்களில் ஒருவர் கோவிலுக்குக் கொடை அளித்த செய்தியைக் கொண்டிருக்கும் கல்வெட்டு ஒன்று கோவை வெள்ளலூரில் இருக்கும் தேனீசுவரர் கோவிலில் கண்டறியப்பட்டுள்ளது.


கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, கரு நிறக்கல்லைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான இதன் உச்சிப்பகுதி மட்டும் ஒரு மைல் கல்லின் வளைவோடு காணப்படுகிறது. இப்பகுதியில், நடுவில் ஒரு நந்தியும், நந்திக்கு மேற்பகுதியில் திரிசூலம் ஒன்றும் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளன. நந்திக்கு இடப்புறமும் வலப்புறமும் சூரிய, சந்திரர்களின் புடைப்புருவங்கள். சூரிய, சந்திரர்கள் உள்ளவரையிலும் கோவிலுக்குச் செய்த தன்மம் (கொடை) தடையின்றி நடக்கவேண்டும் என்பதன் குறியீடாகவே சூரிய,சந்திரர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழே பட்டையாக ஒரு புடைப்புச் செதுக்கம். இதன் கீழே பதினாறு வரிகளில் கல்வெட்டு. கல்வெட்டு பிள்ளையார் சுழியுடன் தொடங்குகிறது. முதல் வரியில் “சிவமயம்” என்று உள்ளது.


வெள்ளலூர் மஜார் இடையர்பாளையத்தைச் சேர்ந்த குமரக்கோனான் என்பவரின் மனைவியான(கல்வெட்டு ”பெண்ஜாதி” எனக்கூறுகிறது) மருதக்காள் என்பவர் விசுவநாதர், விசாலாட்சி ஆகிய கடவுளர்களின் சன்னிதிகளை அமைத்து, அறுபத்துமூன்று நாயன்மார் சிலைகளை எழுந்தருளச்செய்து (பிரதிஷ்டை செய்து), நாயன்மாருக்கென மண்டபமும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி, வெள்ளலூர், சிங்கனூர் ( தற்போதைய சிங்கநல்லூர் கல்வெட்டில் சிங்கனூர் எனக்குறிப்பிடப்படுகிறது ), மற்றும் செட்டிபாளையம் ஆகிய ஊர்களில் இவருக்குப் பாகமாக வந்த நிலங்களையும் கோவிலுக்கே கொடையாக அளித்துள்ளார். இந்த நிலங்களின் மதிப்பு, கொடை வழங்கிய காலத்தில் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு பெறுமானம் உடையதாக இருந்தது.
கல்வெட்டின் காலம் கல்வெட்டின் தொடக்கத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. அக்கால வழக்கப்படி கலியுக ஆண்டும், சாலிவாகன ஆண்டும் (சக ஆண்டே சாலிவாகன ஆண்டென்றும் வழங்கப்பெறும்) குறிக்கப்படுகின்றன. ஆங்கில ஆண்டான கிறித்து பிறப்புக்கு 3101 ஆண்டுகளுக்கு முன்பே கலியுக ஆண்டுப் பிறப்பு அமைந்துள்ளதால், கல்வெட்டு குறிப்பிடும் கலியுக ஆண்டான 5022-இலிருந்து 3101-ஐக் கழிக்கக் கிடைப்பது கி.பி. 1921 . அதேபோல், சக ஆண்டு, கி.பி. 78-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவதால், கல்வெட்டு குறிப்பிடும் சக ஆண்டான 1843-உடன் 78-ஐக் கூட்டக் கிடைப்பது கி.பி. 1921. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் கலியாண்டும், சகவாண்டும் கி.பி. ஆண்டோடு சரியாகப் பொருந்துகிறது. கல்வெட்டில் குறிக்கப்படும் தமிழ் ஆண்டான துன்மதி ஆண்டும் கி.பி. 1921-ஆம் ஆண்டுடன் பொருந்திவருகிறது. சரியாக 11.7.1921 திங்கள் கிழமையன்று இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. காலத்தைத் தெளிவாகக் காட்டும் வகையில் பழைய கல்வெட்டுகளிலும், பத்திரங்களிலும் கலியாண்டும், சகவாண்டும், தமிழ் (அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டம்) ஆண்டும் குறிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
மேற்படி கல்வெட்டின் காலத்தில், வெள்ளலூர், செட்டிபாளையம், சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் “கோனார்” என்னும் இடையர்கள் மிகுதியும் இருந்தமையும், இக்குலத்தவரில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தமையும், பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துக்களை அறச்செயல்களுக்குப் பயன்படுத்தியமையும் கல்வெட்டுச் செய்தியின் வாயிலாக அறிகிறோம். மருதக்காள் போலக் கொடையுள்ளம் கொண்ட செல்வர்கள், தற்போது சிதைவு கண்டு வரும் கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்தால், பழங்கோவில்கள் பல புத்துயிர் பெறும்.
து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar