ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, July 2, 2014
பேயாழ்வார்
திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்பது புராணம். ஸ்ரீமந் நாராயணின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நாந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், யாதவ மகா சபை தேசியத் தலைவருமான டாக்டர். தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில், மாபெரும் மணி மண்டபம் அமைத்து சுதந்திரப்போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனை, உலகறிய செய்த தமிழக முதலமைச்சர், வீரன் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றை எதிர்கால சந்ததியினர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வரும் கல்வி ஆண்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Monday, June 30, 2014
பூதத்தாழ்வார்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற கதை (ழுயனாயi) யின் அம்சமாகக் கருதப்படும் எம்பெருமான் ஸ்தலசயனப் பெருமானைத் துதித்துப் பாசுரங்கள் பல பாடியுள்ளார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
Saturday, June 28, 2014
பொய்கை ஆழ்வார்
கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
Thursday, June 26, 2014
பன்னிரண்டு ஆழ்வார்கள்
"பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யாம்போய் இந்திரலோக மாளும்
அச்சுவை பெரினும் வேண்டேன்- அரங்கமா நகருளானே"
"பூதம் ஸரஸ்ய மஹதாவ்ய பட்ட நாத
ஸ்ரீபக்தி ஸார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஸ்ரான்
ஸ்ரீமத் பராங்குச முனிம் ப்ரணதோஸ்மி நித்யம்"
இந்த 108 திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று நம் பெருமானைச் சேவிக்கு முன் அவனைப் போற்றி, சரணடைந்து, அவனே கதியென்று வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. இப்பன்னிருவரில்
"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்"
என்று கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) திருமழிசை ஆழ்வார்
5) நம்மாழ்வார்
6) திருமங்கையாழ்வார்
7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
8) பெரியாழ்வார்
9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார்
11) மதுரகவி ஆழ்வார்
12) திருப்பாணாழ்வார்
இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.
பசுவை ஏன் வழிபட வேண்டும்?
இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.
காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!
இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.
பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.
கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.
பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.
பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.
பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.
பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.
பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.
இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக!!!
இதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.
ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.
Please Share more & Like this page, also invite ur friends to like