"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, July 2, 2014

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

 இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.
கிருஷ்ணனின் காலகட்டம்:
கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின் முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான் என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of Kanna – கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன் பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின் காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள் டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை என்னுடைய தலைவர், கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில் ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.
இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு. துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு 150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு நகரம்என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது, ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள் இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த உருவாக்கப்பட்ட நகரம்இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200 ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம், கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.
கண்ணன் ஒரு நேர்மறைப் பிம்பம்
கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன், 125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறதுஎன்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு தலைவர். ஒரு தோழர்.
மட்டுமில்லாமல் இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறான் என்பது புரியும்.
கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula) வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.

சில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன் போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர் கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால, தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை. ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப் பயன்படுத்திப் போர் செய்யவில்லை.
இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். அர்ஜுனா நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய் சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இருஎன்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே ஓடிவந்து அவர் காலிலே விழுந்து கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால் எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன் உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக் காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.

சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப் பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத் தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம் சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன் என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.) தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம் கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன் மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.
இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக் கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நிகரற்ற ஓர் ஆளுமை.


இடையர் என பெயர் வரக் காரணம் என்ன


          முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும் நிலங்களைப் போல வன்னியமாதலும், மருதம், நெய்தல் என்னும்  நிலங்களைப் போல் மென்னியமாதலும் அன்றி, இடைப்பட்ட நீர்மையதாகலின், அந்நிலத்து வாழும் மக்கள் இடையர்,பொதுவர் எனப்பட்டனர் மு.அருணாசலம்பிள்ளை தொல்காப்பியம், அகத்திணையியல் உரைவளம், பக்கம்.240 என்கின்றார்.
            இடையர் என்பதற்கு விளக்கம் கூறவந்த நந்தமண்டசதகம்,             “இடை-மடி, மடியில் உண்டான பாலால் ஜீவிப்பவர்” (நந்தமண்டலசதகம்,ப.68) என்றும்,
       “இடை-ஐவகை நிலத்து நடுவிலுள்ள முல்லை நிலம்,இடையிலான
        முல்லைநிலத்துள்ளோர்”(நந்தமண்டலசதகம்,பக்கம்.69) என்றும் கூறுகின்றது. இடையர் என்பதற்கு “இடைச்சாதியார்” என்று விளக்கம் கூறுகின்றது செந்தமிழ் அகராதி(பக்கம்.60).

        குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் இடையராவர் என்கின்றார் சக்திதாசன் சுப்பிரமணியன் (குறுந்தொகைக் காட்சிகள் பக்கம்.239). எனவே, மேற்காணும் சான்றுகளின் மூலம் இடையர் என்ற பெயர் அவர்கள் வாழ்ந்த இடத்தால் பெற்ற பெயராகும் என்பதை அறிய முடிகின்றது

TYPING WORK
    M.MANI YADAV

01-07-2014 அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவின் போது எடுத்த படங்கள்

01-07-2014  மாவீரன் மன்னன் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழா அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் தலைமையில் மிகச்சிறப்பாக தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு நடத்தியது..வருகை தந்து நடத்தி கொடுத்த அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் மற்றும் வருகை தந்த யாதவா நண்பர்களுக்கும் தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்










தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன்

         சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால் கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மைதான். ஆம்! அந்த யாதவனின் உண்மைப் பெயர் மணவில் கூத்தன் காலிங்கராயன் என்பதாகும். தொண்டை மண்டலத்து 24 கோட்டைகளில் ஒன்றான மணவில் எனும் ஊரின் தலைவன் குலோத்துங்கனுடைய படைத்தலைவனாக இருந்து பாண்டிய நாடு, வேணாடு, மலைநாடு, முதலிய நாடுகளோடு போர் நடத்தி புகழ்பெற்றவன். இந்த யாதவனால் சோழ மன்னன்க்குப் பெரும் புகழ் உண்டாகியது. இவனுக்கு ‘காலிங்கராயன்’ என்னும் பெயர் சூட்டிச் சிறப்பித்தனர். பாண்டிய நாட்டில் இவன் வாழ்ந்த போது தான் தன் இனத்தைச் சேர்ந்த மாதரிக்கு இடைச்சி அம்மன் என்ற பெயரிலேயே மதுரையில் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது வரலாறு


(ஆதாரம்:‘குமுதம்’ பக்தி ஸ்பெஷல்-தகவல் திசைமுத்து)

TYPING WORK

    M.MANI YADAV

தத்துவஞானி திருமூலர்

                      
                   சைவத்திருமுறைகளில் பத்தாந்திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருமந்திரம். ”மூலன் உரை செய்த மூவாயிரம்” எனப் போற்றப் பெற்றது அந்நூல். அந்நூலாசிரியரான திருமூலரின் ஆகமப் பொருளைத் தழுவிய கருத்துக்களும் சித்தாந்தக் குறிப்புகளும் இந்நூலில் பரவிக் கிடக்கக் காணலாம்.
                   அறுபான் மூவரான சைவ அடியார்களுள் திருமூலரும் ஒருவர் அவர் ஆயர் குலத்தினர். தமிழறிவோடு ஆழ்ந்த வடமொழிப் புலமையும் வாய்ந்தவர். கயிலையிலுள்ள யோகி ஒருவர் தமிழ் நாட்டிற்கு வந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மூலன் என்ற ஆயனின் உடலில் நுழைந்து திருமூலரானார் என்று ஒரு கதை கற்பித்திருக்கிறார்கள்! அறிவு-மேல் வகுப்பினருக்கே உரியது என்ற கொள்கையுடையவர்கள் கற்பனை அது. கதை நாம் அறிந்ததுதானே! தமிழையும் தாமிரபரணி நதியையும் அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டு வந்தார் என்று நம்பும் மக்களைப் படைத்த நாடு தானே இது! திருஞானசம்பந்தர் இளம் வயதிலேயே சிவனருள் பெற்றுத் திருப்பதிகம் பாடி பல அறிய சாதனை படைத்தார் என்பது உண்மை தானே! கீதையை உலகினுக்களித்த கண்ணனை, திருமாலின் அவதாரமென்றும், ஆயர் குலக்கொளுந்தென்றும் போற்றும் இம்மக்கள் திருமந்திரம் இயற்றிய திருமூலரை ஆயன் தான் என ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏனோ?
                    தம்மோடு அருள்பெற்றவர் எண்மர் என்றும், தம்முடைய சீடர்கள் எழுவர் திருமூலர் கூறுகிறார்.
         “ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
         தேடியும் கண்டேன் சிவன்தன் பெருமையை”
என்று கூறும் அவர் கைலையிலிருந்து வந்தது எவ்வாறோ தெரியவில்லை! அவர் மூவாயிரம் ஆண்டுகள் யோகம் செய்து, ஆண்டுக்கொரு திருமந்திரமாக மூவாயிரம் செய்யுள் இயற்றி ஆகமப் பொருளை வெளிட்டாராம்! நூறு ஆண்டு மனித வாழ்வின் எல்லை என்னும் போது மூவாயிரம் ஆண்டுகள் அவர் வாழ்ந்தாரென்பது ஒரு கற்பனையே!
       ‘வேத நூற்பாயிரம் நூறு மனிதர்தாம் புகவர்’ என்பது தொண்டரடிப் பொடியாழ்வார் திருவாக்கு.
       திருமந்திரம் வாட மொழியின் வழி நூலா-முதன் நூலா என்பதற்கு இவர் கூறும் பதிலே சான்று பகரும்.
        “அரனடி நாள்தோறும் சிந்தை செய்து
        ஆகமம் செப்பலுற் றேனே”
என்னும் அவர் திருவாக்கே, திருமந்திரம் தமிழில் தோன்றிய முதல் நூலே என்பதைக் காட்டும்.
        “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
         தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே”
என்று, இறைவன் தம்மை படைத்ததே தமிழில் ஆகம நூல் அருளிச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார் அவர். ஆகையால், கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது-புராணப் புளுகு. திருமூலர் நூலிலே இவற்றிற் கெல்லாம்  ஆதாரம் இல்லை.
        “வேதத்தை விட்ட அறம் வேறில்லை. எனவே தர்க்கவாதத்தை விட்டு அறிஞர்கள் வேதத்தை ஓதியே வீடு பெற்றார்கள்” என்கிறார் திருமூலர். மொழி விஷயத்திலும் வீணான வாதம் கூடாது என்கிறார் திருமூலர். தமிழையும், வடமொழியையும் உணர்த்துபவன் அவனே என்கிறார்.
             “பண்டிதராவார் பதினெட்டுப்
              படையும் கண்டவர்”
        என்பர் திருமூலர். ஒரு மொழியே அறிந்தவர் பண்டிதராக மாட்டார் என்பது அவரது கருத்து.
        தேசமும் நாடும் தேடித் திரிந்து முடிவில் பரம்பொருளைத் தமது உடம்பிற்குள்ளே கண்டு கொண்டார் அவர்.தேடித் திரிந்த மற்றவர்களோ, மனம் நொந்து, போன இடம் தெரியாமல் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம்! “என் உடல் கோயில் கொண்டானே இறைவன்” என்கிறார். தங்கள் உடம்பிலேயே அந்த இறைவன் குடியிருப்பதை அவர்கள் அறிந்தாரில்லை.
         “உடம்புள உத்தமன் கோயில் கொண்டானென்று
         உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே”
என்கிறார். சரீர சித்தி செய்து பல காலம் வாழ்ந்தார் எனத் திருமூலர் கூறுகிறார். உண்டியைச் சுருக்கி ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டாராம். பிரம்மச்சரியம். பிராணாயாமம் முதலிய உபாயங்களின் உதவியால் இவர் இயற்கையோடும், இறைவனோடும்இசைந்து தூய ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து வந்தார் எனலாம்.
            “சாத்திரம் ஒதும் சதிர்சகளை விட்டுநீர்
             மாத்திரைப் போது மறந்துள்ளே நோக்குமின்”
என்று மூட நம்பிக்கைகளை விட்டு அவன் அருளை நம்பி அவனைக் காண வேண்டும் என்கிறார். இறைவன் ’பொய்க் கலந்தருள் புகுதாப் புனிதன்!’
            “ஒத்தப் பொறியும் உடலும் இருக்கவே
            செத்துத் திரிவர் சிவஞானி யர்களே”
என்று சிவஞானிகளின் சிவன்முத்தி நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர். உடம்பும் பொறிகளும் பிறரை ஒத்திருந்தாலும் உள்ளத்தாலும் ஆன சுத்தியாலும் சிவஞானி வேறுபட்டவன். உலகத்தில் உலகப் பற்று இல்லாமல் திரிபவன் அவன். சிந்தர்கள் சிவலோகத்தை இகலோகத்தில் கண்டவர்கள்.
        திருமூலருடைய சைவ சித்தாந்தம் ‘சித்த மார்க்கம்’-அஷ்டமா சித்திகளை திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த சித்திகளையெல்லாம் அருளுபவன் எல்லாம் வல்ல இறைவன் என்ற சித்தன். சித்தம் திரிந்து சிவமயமானால் சித்திகளும், சக்திகளும் நம்மையும், பிறரையும் உய்விக்கப் பயன்படும். யோகிகளின் சமாதி நிலையைச் சித்தரும் விரும்பி அடைவர் என்கிறார் திருமலர்.
        “நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்” என்று வீர வாதம் பேசும் அவர் இதயக் கமலத்திலே சிவ நடனம் நடைபெறுவதாக் கூறுகிறார்.
            “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
            மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
            மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
            பார்ப்பான் பசு ஐந்தும் பாலைய்ச் சொரியுமே”
என்கிறார். ஐம்பொறிகளையும் அருள் வழியில் அடக்கினால் ஆணவ நெறி அடங்கி உடலும் பொறியும் சிவ கைங்கரியம் செய்யும் என்பது கருத்து.
        சைவ அடியார்களுக்குள் மூலன் என்ற திருமூல நாயனாருக்குச் சிறந்த இடம் உண்டு. பல தத்துவங்களையும் விளக்கி ஆகம விதிகளை முதலில் எடுத்துக் கூறியவர் அவரே ஆவார். யோகிகளாய் உபாயங்களைப் பயன்படுத்தி முக்காலங்களையும் உணர்ந்த மாமூலர் முதலியோர், “அறிவன் தேஎத்து அனை நிலை வகையோர் ஆவர்” என்பர்.
       அவர்க்கு மாணாக்கராகித் தவம் செய்வோர் தாபத பக்கத்தவராவர் என்று நச்சினிக்கினியார் அவரைப் பற்றிய செய்தி ஒன்று வழங்கி வந்ததைக் கூறுகிறார். எனவே அவர் ஆக்கமும் ஆழிக்கவும் செய்யும் ஆற்றலுடைய தமிழ் முனிவராகக் கருதப்பட்டு, இவர்தம் திருவாக்குகள் நூலுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் உணரலாம்.    

TYPING WORK
    M.MANI YADAV
       

             

பேயாழ்வார்



திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்பது புராணம். ஸ்ரீமந் நாராயணின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நாந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.

அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்


சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி  பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்

      முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி  பாடமாக இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், யாதவ மகா சபை தேசியத் தலைவருமான டாக்டர். தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில், மாபெரும் மணி மண்டபம் அமைத்து  சுதந்திரப்போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனை, உலகறிய செய்த தமிழக முதலமைச்சர், வீரன் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றை எதிர்கால சந்ததியினர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி  பாடமாக இடம்பெறச்செய்ய வரும் கல்வி ஆண்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar