"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, July 15, 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பில் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் வைக்க ஏற்பாடு

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
ஆக்கப்பூர்வமான தொடர் பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம்
கட்டாலங்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் இல்லை என்பதை பலமுறை குறிப்பிட்டு இருந்தோம், அதனை தொடர்ந்து 11/07/2014 அன்று காலை யாதவர் தன்னுரிமைப் பணியகம் - மாணவர் அணியினர் மிக சிறப்பாக மதுரை யாதவர் கல்லூரியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கட்டாலங்குளம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு மாலைஅணிவித்து அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியை சந்தித்து அவரிடம் ஆவணங்களையும், பிரபல ஓவியர் அய்யா ராமு வரைந்த வரலாற்று ஓவியங்களையும் காண்பித்தோம். மிக விரைவில் வரலாற்றுடன் ஓவியங்கள் அனைத்தும் அனுமதியுடன் வைக்கப்பட்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி !!! Athiban Yadav

அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா; பா.மு.க., தலைவர் பங்கேற்பு


வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா, அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா; பா.மு.க., தலைவர் பங்கேற்புபின்னர், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.84ஆயிரம் மதிப்பிலான காசோலை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 2 பேருக்கு சலவைப் பெட்டி, 6 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இங்குள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இப்போது ரூ.1.50 லட்சம் செலவில் கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முன்புற தோரணவாயில் சீரமைக்கப்படவுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் செய்தித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். தமிழக அரசின் சார்பில் மாலையிட்ட பிறகு திருச்சி பாரத முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் பாரதராஜா தலைமையில் செயல்வீரர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக பாரத முன்னேற்றக்கழகத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாலங்குளம் சென்றிருந்தனர். அவர்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி கிளை கழகம் சார்பில் வரவேற்பும் உபசரிப்பும் செய்யப்பட்டது. வீரன் அழகு முத்துக்கோன் 255-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதராஜா யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது; வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்த ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் வீரன் அழகுமுத்துக்கோன் ஜயந்தி விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஓய்வூதியமும் வழங்க வேண்டும். வீரன் அழகுமுத்துக்கோன் விழாவுக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்தி, போதுமான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார் பாரதராஜா மேலும், மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகள் திருட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே மணிமண்டபத்தின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டார் பழுதடைந்துள்ளது. அவற்றைச் சீரமைக்க வேண்டும். மணிமண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகளை அரசு முன் வைத்தனர்.

Monday, July 14, 2014

மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள்

மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள். பணியகத்தின் அனைத்து பணிகளையும் பார்த்து பாராட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள், இன்னும் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தன்னுடைய 80 வது வயதில் இரண்டாவது மாடிக்கு ஏறி வந்து பார்த்தது அனைவரையை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த மாதிரியான தலைவரை நம் சமுகம் பயன்படுத்த தவறிவிட்டது என்ற என்ன தோன்றியது.
அய்யாவை தொடர்ந்து மதுரை மகாத்மா பள்ளியின் தாளாளர் அவர்கள் குடும்பத்துடன் அலுவலகத்தையும், கருவூலத்தையும் பார்வையிட்டார், அவர்களும் நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நன்றி !!!





Thanks to Athiban Yadav

யாதவ முன்னேற்ற கழகம் சார்பில் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா


Cohn alakumuttu kurupucai DMK government function, Chairman of the Yadava hero Ramamurti yatavavarkal alakumuttu Cohn show with their heirs  feed the people who attended the ceremony  attended a special event host and milk pots made ​​by villagers










மும்பை அந்தேரியிலுள்ள யாதவ மகாசபை சார்பாக 11.7.14. அன்று நடைபெற்ற அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா

மும்பை அந்தேரியிலுள்ள யாடதவ மகாசபை சார்பாக 11.7.14. அன்று நடைபெற்ற இந்திய முதல் விடுதலை போர்வீரன் திரு .அழகுமுத்துக்கோன் அவர்களின் ஜெயந்தி விழாவில் நான் நமது ஐய்யா அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பொது எடுத்த படம்

மும்பை அந்தேரியிலுள்ள யாதவ மகாசபை சார்பாக 11.7.14. அன்று நடைபெற்ற இந்திய முதல் விடுதலை போர்வீரன் திரு .அழகுமுத்துக்கோன் அவர்களின் ஜெயந்தி விழாவில் கலந்துகொன்டோர்






Friday, July 11, 2014

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்தார்



வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து முன்னிலை வகித்தார். வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.84,000/- உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு தேய்ப்பு பெட்டியும், 6 நபர்களுக்கு தையல் இயந்திரமும் ஆட்சியர் வழங்கினார். பின்னர் ஆட்சியர் பேசும் போது தெரிவித்தாவது: தென் இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன், மகாகவி பாரதியார், அமுதகவி உமறுப்புலவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன், வாஞ்சிநாதன் போன்ற வரலாற்று தலைவர்களை அதிகமாக கொண்டுள்ளது.
சுதந்திரப்போருக்கு முதல் வித்திட்ட மாமனிதர் வீரன் அழகுமுத்துக்கோன் ஆவார். அவருடைய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களால் 2004 ஆண்டு அவர் பிறந்த கட்டாலங்குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டு ரூ35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
மேலும், வீரன் அழகுமுத்துக்கோன் பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் அரசு விழா நடத்த உத்தரவிட்டு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இளைய சமூதாயத்தினர் கடந்த கால வீர வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொள்கின்ற விழிப்புணர்வு வேண்டும். இங்கு சமூதாய மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கொடுத்து உள்ளனர்.
அதை தமிழக முதலமைச்சரிடம் கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும். தற்போது ரூ.1.50 லட்சம் செலவில் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முன்புற தோரணையில் சீரமைக்கப்படவுள்ளது. வருகின்ற சுற்றுலாப் பயனிகளுக்கு குடிநீர் வழங்க அமைக்க தேவையான நடவடிக்கையை செய்தி துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் வி.பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி வட்டாட்சியர் எஸ்முத்துராமலிங்கம், சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வே.மோகன், மா.திருக்கம்மாள், கட்டலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சரோஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை செய்தித்துறை பணியாளர்கள் செய்து இருந்தனர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar