ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Sunday, September 14, 2014
நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நடக்கிறது. எவ்வளவு பெருமையான விஷயம் இது யாதவர்களுக்கு ! விழாவில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு, பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் கேட்டு கொள்கிறோம். விழா தொடர்புக்கு : திரு. இளவரசு யாதவ்.,S.Rly., Cell No. 7708064944.
Wednesday, September 10, 2014
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு
அன்புடையீர் வணக்கம்
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் (கி.பி. 1710 - கி.பி. 1759) வீர வரலாற்றை ஆவணம்மாக்கி, ஆவணப்படம்மாக்கி இன்று அய்யா ராமு அவர்களின் கை வண்ணத்தில் வரையப்பட்டு, அனுமதியுடன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு.... நன்றி !!!
வரலாற்றை மீட்கும் பணியில் .....
யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம், மதுரை.
தொடர்புக்கு: 0452 4354343 காலை 10 மணி முதல் 6 மணி வரை
Tuesday, September 9, 2014
Friday, September 5, 2014
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது
அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம்
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். மூன்று நாட்களில் தெரிய படுத்தவும்.'
தொடர்புக்கு:
கருப்புச்சாமி 0452 4354343
அலுவலக நேரம்: 10 மணி முதல் 6 மணி வரை
நன்றி !!! SHARE செய்யவும் !!!
Wednesday, August 27, 2014
24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது
கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
கூட்டத்தில் ஆர்வமுடன் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் கலந்து கொண்ட அத்துணை இளஞ்சர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .
கூட்டத்தில் கலந்து கொண்டு இன்றைய சமுதாய நிலையையும், நமது உரிமைகள் எப்படி பறிக்கப்படுகிறது , எப்படி மறுக்கப்படுகிறது, எதற்காக நாம் போராட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்த
திரு.தாமோதரன் யாதவ் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி ,
திரு.சரசுமுத்து யாதவ-தலைவர்- தமிழ்நாடு யாதவர் சங்கம்
திரு.கௌரிசங்கர் யாதவ் - மாநில இளைஞ்சர் அணித் தலைவர் - ராஸ்ட்ரிய ஜனதா தளம்
ஆகியோருக்கு நமது கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !
Tuesday, August 26, 2014
சித்தர் ஸ்ரீ மகான் சுருளி சுவாமிகள் தங்கம் யாதவ் வாழ்க்கை வரலாறு - 1
ஓம் சுருளி தேவாயா நமஹ!
முத்தா முத்தருளே யொயிர் கின்ற முழுமுதலே!
சித்தா சித்தியெலாந் தரவல்ல செழுஞ்சுடரே!
பித்தா பித்தனெனை வலிந் தாண்ட பெருந்தகையே!
அத்தா தந்தனையே யரு ளாரமு தந்தனையே!
சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும், ஞானிகளும் தோன்றிய இப்புனிதமிக்க நமது பாரத பூமியில் பொதிகை மலைச்சாரலில் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள கவலப்பாறை என்ற ஊரில் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலும், சிவபத்தியிலும் சிறப்புற்ற இராமசாமிக்கோன் என்ற ஒருவர் பெருவணிகராக இருந்தார். செல்வ செழிப்போடிருந்த அவரும் அவரது மனைவியாகிய செல்லம்மாள் அம்மையாரும் ஒன்றுபட்ட கருத்தும் அன்பும் உடையராய் நெறி வழுவாது இல்லற தர்மத்தை இனிதே இயற்றி வந்தனர்.
அவர்கள் இருவரும் சிவபூஜையினை மிக்க சிரத்தை
யோடு செய்து வந்தன்றியும்
" பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற "
என்னும் வள்ளுவர் வாக்கைக் கருத்தில் கொண்டு இம்மை மறுமைப் பயன்களை அளிக்கத்தக்க நன்மகப்பேற்றை நாடிப் பல நோன்புகள் இயற்றியும் புண்ணிய ஸ்தலயாத்திரை, தீர்த்த ஸ்நானம் ஸ்தலவாசம், மூர்த்திகள் தரிசனம், பெரியோர் சேவை முதலியவை செய்வித்தும் மகப்பேரின்றி மனத்துயர் கொண்டு பின்னர் பழனி மலைக்கு நடைபயணமாகச் சென்று வேல் கொண்டு வினை தீர்க்கும் முருகப்பெருமானைத் தரிசித்து கிரிவலம் வந்து இத்திருத்தலத்தில் சில காலம் தங்கி எம்பெருமான் முருகனை வழிபட்டு தங்கள் ஊர் திரும்பினர், சில நாட்களில் செல்லம்மாள் அம்மையார் வயிறு வாய்த்தது உன்னதமாகிய சுபதினத்தில், உலகில் உள்ள சர்வ ஆன்மாக்களும் உய்யவும் வலம்புரி ஈன்ற நல்முத்தென ஓர் அழகிய புத்திரனைப்பெற்றார். தந்தையாராகிய இராமசாமிக்கோன் பெரு மகிழ்ச்சியுடன் பழனியம் பதிப்பெருமான் முருகனின் பேரருளால் தோன்றிய இக்குழந்தைக்குப் " பழனியாண்டி " எனத் திருநாமம் இட்டார்.
புதைபொருள் கண்டவர்கள் போல தவப்புதல்வனாகிய பழனியாண்டியை, தாயும், தந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். குழந்தைப்பேறு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த தம்பதியினர் பல விதமான தான, தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ந்தனர்.
தவமாய் தவமிருந்து பெற்ற புத்திரனாகிய பழனியாண்டி என்னும் இக்குழந்தை பிறந்தது முதல் பசி முதலான எவ்வித உணர்வுகளுக்கும் அழுகை செய்தலோ அல்லது ஏதாவது ஒன்றை பார்த்துக் சிரித்தலோ, உற்று நோக்குதலோ இன்றி மெளனமாகச் சயனித்திருக்கும். தாய் தம்மடியில் கிடத்தி வற்புறுத்தி பாலூட்டினால் மட்டுமே பாலருந்தும் இல்லையெனில் மெளனமாகவே இருக்கும் இவ்விதமே தவழுகின்ற பருவங்களிலும் நடக்கின்ற பருவ காலங்களிலும் இருந்தது மட்டுமல்லாமல் சிறு பிள்ளைகளுக்கான ஓடியாடி விளையாடுதலும், குறும்புத்தனங்களும் இல்லாமல் இருக்க கண்ட பெற்றொர் மிகவும் மனத்துயர் அடைந்து தமது குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை.? என எண்ணக் கலக்கமுற்றனர். குழந்தையான பழனியாண்டி எந்நேரமும் வீட்டில் கண்களை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் வீற்றிருக்கும்.
மனக்கவலையுற்றிருந்த இராமசாமிக்கோன் இல்லத்திற்கு ஒருநாள் உருத்திராட்ச மாலையும், விபூதிபட்டையும், சடாமுடியுடன் காவியுடை தரித்த முதிய சிவயோகிஒருவர் வருகைபுரிந்தார். இராமசாமிக்கோன் அவரது மனைவி செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரை இன்முகத்துடன் வரவேற்று அவருக்கு உணவு படைத்து தக்க உபரசணைகள் செய்தனர். பின் அவ்யோகியாரிடம் இராமசாமிக்கோன் தம் செல்வனாகிய பழனியாண்டியின் செயல்பாட்டைக். கூறி இது நமது தவக்குறைவோ என மனத்துயரத்துடன் வினவினார். சிவயோகியாரும் அச்சிறுவனை பார்க்க வேண்டுமென்று கூறிட வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பழனியாண்டியைக் காட்டினர். சிறுவனைக் கண்ட சிவயோகியார் அப்பனே மனத்துயர் கொள்ளாதே இக்குழந்தை, சாதாரணக் குழந்தையல்ல தெய்வீக குழந்தை. இது இவ்வுலக ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இங்கே ஊதித்துள்ளது என பெற்றொர்களிடம் கூறி , சிறுவனாகிய பழனியாண்டியை வணங்கி சென்றனர்.
இராமசாமிக்கோன்,செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரின் கூற்றைக் கேட்டு ஆறுதல் பெற்றாலும் அவர்களுக்குள் மனசஞ்சலம் இருந்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல பழனியாண்டியின் செயல்பாடு அவ்வண்ணமே மாற்றமேதுமின்றி இருந்து.
குழந்தையான பழனியாண்டிக்குத் சுமார் 5 வயது ஆகும் போது காலத்திலும் தாய், தந்தையர் தவமாய் தவமிருந்து பெற்ற இக்குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாடி விளையாடாமல் சிறுபிள்ளைகளின் குறும்புத்தனம் இல்லாமலும் சதாசர்வகாலமும் சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு உலகப்பற்றற்ற ஞானிபோல அமர்ந்திருப்பதை எண்ணி பெற்றோர்கள் பெரிதும் மனக்கலக்கமும் ,வருத்தமும் அடைந்தனர். அக்கால வழக்கப்படி குருகுலம் ஒன்றில் பழனியாண்டியைக் கல்வி கற்க சேர்த்தனர்.
பள்ளியில் மாணக்கனாகச் சேர்ந்த பழனியாண்டி கல்வி கற்பதில் நாட்டமில்லாத சிறுவனைப் போலவும் யாருடனும் பேசாமலும் மந்தமாக இருப்பதைக் கண்டு ஆசிரியர் பிரம்பினால் அடிக்க சிறுவனின் உடலில் எந்த இடத்தில் அடிவிழுந்ததோ ஆசிரியரின் உடலின் அப்பகுதியில் சுரீர் என வலியும் ,தடிப்பும் தோன்றியதை உணர்ந்த ஆசிரியர் அதிர்ச்சியுற்றார். அடிவாங்கிய சிறுவன் பேசாமல் வலியை உணராதவனாக இருக்க அடித்த ஆசிரியர் வலியின் வேதனையை அடைந்தார் இதுபோல் பலமுறை நடக்கவும் இது குழந்தைதான்? அல்லது ஏதேனும் மாய சக்தி படைத்த வடிவமா? என எண்ணி வியந்தார். அது முதல் மாணக்கனான பழனியாண்டியிடம் மிக்க பரிவோடும் அன்போடும் கல்வி போதித்தார். ஆனால் பழனியாண்டி அடக்கத்தோடு அமர்ந்திருந்து ஆசிரியர் ஒரு முறை போதித்தவற்றைப் பிழையில்லாமல் அப்படியே திரும்பக்கூறும் அளவுக்கு ஆற்றல் படைத்தவராக ஆசிரியர் வியக்கும் வண்ணம் நடந்து வந்தார். ஆசிரியர் போதிக்காத நேரங்களில் அங்கேயே பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நிஷ்ட்டையில் அமர்ந்துவிடுவார்.
தொடரும்......