ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, March 4, 2015
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம்
"மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா
"இராமநாதபுரம்" யாதவர் திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, 50 -க்கும் அதிகமான இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்தனர், காவல்துறை அனுமதியுடன் சிறப்பாக முடிந்தது.
நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம்
இராமநாதபுரம்
Tuesday, March 3, 2015
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம்
"யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015)
"இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் முகாம் நாளை காலை நடைபெற இருக்கிறது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில், காலை 9 மணியளவில் "இரத்ததான முகாம்" நடைபெற இருக்கிறது, !!! சமூக இளைஞர்கள் அனைவரும் எழுச்சியோடு தங்களுடைய இரத்ததை தானம் செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் !!!!
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
இராமநாதபுரம் மற்றும் சங்கரன் கோவில்
Sunday, March 1, 2015
ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை
ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்:
கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டோ ஓட்டுநர் பொன்னையா (24), பிப். 25 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து, 3 தினங்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னையா குடும்பத்தினரை தேவநாதன் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸார் கவனம் செலுத்தாமல் பிற பணிகளில் ஈடுபடுகின்றனர். தச்சநல்லூரில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான பிரச்னை குறித்து 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொன்னையா கொலை செய்யப்பட்டார்.
இக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அங்குள்ள காவல் ஆய்வாளரை சேர்க்க வேண்டும். காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் இருவர் மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.
உழைக்கும் பருவத்தில் பொன்னையா கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவரது குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, தென்மண்டல அமைப்புச் செயலர் மரியசுந்தரம் யாதவ், திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் முத்து, மாவட்டச் செயலர் சரவணன், இளைஞரணி நிர்வாகி சுந்தர், மாநில எஸ்.டி, எஸ்.சி செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Friday, February 27, 2015
தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம்
இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தது அதனை தொடர்ந்து தொழிலதிபர் திரு.தர்மலிங்கம் அவர்களை "தமிழ்நாடு யாதவ மகா சபை" இணைந்து சமுக பணியில் செயல்பட விருப்புவதாக திரு.செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார், அய்யா அவர்களும் திரு.தர்மலிங்கம் அவர்களை குறிபிடும் பொழுது நல்ல மனிதர் பல்வேறு உதவிகளை சமுக மக்களுக்கு செய்து வருகிறார் அவரை "இணை தலைவராக" நியமித்தால் சமுக நல்ல பாதைக்கு போகும் என்று கூறினார், அதன் பின் பெரியவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினர், அதன் பின் கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது.
நன்றி !!! "தமிழ்நாடு யாதவ மகா சபை" செய்தி, சென்னை
Thursday, February 26, 2015
நெல்லை பொன்னையா யாதவை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி யாதவ மகாசபை முதல்வருக்கு கடிதம்
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை 4 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், படுகொலை செய்யப்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆயர்குலத் தலைவன் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம்பியான சக்திவேல், குமார் ஆகியோரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பொன்னையா, மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி பாளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு திரும்பி வந்தார். வண்ணார்பேட்டை வடக்குபைபாஸ் ரோட்டில் வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பொன்னையா ஆட்டோவை விட்டு இறங்கவும் அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயம் அடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் தச்சநல்லூரில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சந்திமறிச்சம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை கல்வீசி தாக்கி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஒரு ஆட்டோவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலையாளிகள் வசித்த வீடும் கல்வீசி உடைத்து சூறையாடப்பட்டது.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் கந்தசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொலையாளிகளை கைது செய்ய பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரிடம் பொன்னையா கொலை குறித்து தச்சநல்லூர் ஆட்டோ சங்க நிர்வாகி நெல்லையப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இசக்கி என்பவரது மகன்களான சக்திவேல், குமார் என்ற முத்துகுமார், மாரியப்பன் என்ற மாரி, சின்னத்துரை, ஆகிய 4 பேர்களை போலீசார் தேடி வந்தனர்.
கொலை நடந்த இடத்துக்கு சற்று தூரத்தில் அவர்கள் வந்த ஒரு மொபட் அனாதையாக கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
கொலையாளிகள் பொன்னையாவை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு, அவர்கள் தேனீர்குளத்தில் வசித்த வீடுகளை காலி செய்து உக்கிரன்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற சக்திவேல், குமார், மாரி ஆகிய 3பேர்களையும் இன்று கைது செய்தனர். சின்னத்துரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது போல ஆட்டோ டிரைவர் பொன்னையா கொலையை கண்டித்து நடந்த மறியல், பஸ்கள் உடைப்பு, ஆட்டோ எரிப்பு, வீடுகள் உடைப்பு தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் மறியல், பஸ்கள் உடைப்பு தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொன்னையாவின் உறவினர்கள் வெங்கடேஷ், ஆனந்த், முருகன், சங்கரநாராயணன், சிதம்பரம், சுப்பிரமணியன், இசக்கியம்மாள், பார்வதி, அங்கம்மாள், ராஜேஷ், மகராஜன், சுடலைமுத்து உள்பட 20 பேர்களை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று 2–வது நாளாகவும் தச்சநல்லூர் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. அங்கு அதிரடிபடை போலீஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு சில கடைகள் இன்றும் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும், மறியலில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட பொன்னையாவின் உடலை வாங்க மறுத்து இன்று 2–வது நாளாகவும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் போலீஸ் உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.